செவ்வாய், 22 டிசம்பர், 2015

என்னவளே சிறந்த கவிதை

எத்தனையோ கவிதைகள்
என் இதயத்தில் இருக்க...
ஒரு கவிதை மட்டும்
என்னால் எழுத முடியவில்லை...
ஆம் பெண்ணே நீதான்
அந்தக் கவிதையே...!
உன்னை படித்து ரசிக்கிறேன்...
எழுதுவதற்கு முடியவில்லை...
நான் ஓவியன் என்றால்
உன்னை வரைந்திருப்பேன்...
சிற்பி என்றால் உன்னை
சிலையாக செதுக்கியிருப்பேன்...
உனக்கு காதலன் என்பதால்
உன்னை படிக்கத்தான்
என்னால் முடிகிறது...

-Ajai sunilkar Joseph

13 கருத்துகள்:

 1. *சிறப்பாகத்தான்

  என்று வர வேண்டும். மன்னிக்கவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சு செய்யும் போது
   பிழைகள் வரலாம் நண்பரே....
   இதற்கு மன்னிப்பு கேட்க
   வேண்டாம் கண்டிப்பாக
   எல்லோரும் புரிந்து கொள்வர்....

   கருத்துரை தந்தமைக்கு நன்றி நண்பரே....

   நீக்கு
 2. படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 3. காதல் கவிதைகளாகவே வருகிறதே, ஏதேனும் விசேஷம் உள்ளதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காதல் என்றாலே விசேஷம் தானே....
   அது எனக்குள் வந்தது விசேஷமா....!

   நன்றி.நண்பரே கருத்துரைக்கு

   நீக்கு
 4. படிக்கவாவது முடிகின்றதே சந்தோஷப்படுங்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 5. உனக்கு காதலன் என்பதால்
  உன்னை படிக்கத்தான்
  என்னால் முடிகிறது..அப்படியா...?

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!