ஞாயிறு, 24 ஜனவரி, 2016

எம்மொழி அது செம்மொழி

செந்தமிழ் நாட்டில் பிறந்து விட்டு...
நம்மொழி செந்தமிழை மறந்து விட்டு...
தமிழை அடி நாக்கில் புதைத்து விட்டு...
ஆங்கிலத்தை நுனிநாக்கில் விதைத்து விட்டு...
நம் தமிழை முற்றிலும் மறந்து விட்டு...
மழலை வாயிலும் ஆங்கிலத்தை நுழைத்து விட்டு...
செந்தமிழை மறைக்கும் தமிழர்களே...
எந்த மொழியினராயினும் வந்து பிழைக்கும்
செந்தமிழ் நாட்டில் தமிழ் பேச நாதியில்லையோ...?
தொலையும் மொழியா நம்மொழி...?
தொலைத்து விட்டால் நானும் நீயும் தமிழரா...?
செம்மொழி பேசிய வாயிலெல்லாம்
செந்தமிழ் புதைந்தேதான் போனதோ...?
வெள்ளையன் விதைத்த ஆங்கிலம்தான் துளிர் விடுதோ...?
துளிர் விடும் மொழியெல்லாம் செந்தமிழை தகர்ப்பதில்லை...
தமிழ் தமிழ் அது என் உயிர் மொழி...
தமிழில்லாமல் நானில்லை...

-அஜய் சுனில்கர் ஜோசப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!