ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

இம்முகூர்த்த நாள்தானோ காதலர் தினம்....!

என்னுள் காதல் புகுந்து....
அது அவளுள் சென்று...
நித்தம் எங்களை பித்தம் செய்ய...
ஓர் நாள் எங்கள் கண்கள் பேச...
கண்களின் பேச்சு அனுதினம் தொடர...
தன்னந் தனியாய் நான் சிரிக்க...
இந்நோய் சென்று அவளை பிடிக்க...
இருவரும் அடிக்கடி சந்திக்க...
இவர் மனம் அடிக்கடி சிந்திக்க...
இரு மனங்களும் காதல் சிந்தி...
செவ்வாய் மலர்ந்து காதல் பேச...
செவ்விதழ் பிரிந்து மகரந்தம் சேர்ந்து...
ஒர் முத்தம் பிறக்கும் இம்முகூர்த்த
நாள்தானோ காதலர் தினம்...

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!