செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இணையத்தில் தமிழால் இணைவோம்....

இணையம் இல்லை என்றால்

இதயம் இல்லாமை போல

இன்றைய மனிதனின் எண்ணம்...

கைப்பேசியில் இணைய தளம்

கையில் பேசும் இதயம் போல...

இணையம் இல்லாமல் போனால்

கணையம் இழந்தவனாக வருத்தம்...

தொட்டால் தொடுதிரையில் இணையம்...

உன்னால் என்னால் வளரும் இணையம்...

வாடா நண்பா தமிழால் இணைவோம்...

உன்னால் என்னால் வளரும் இணையத்தில்...

தமிழை வளர்ப்போம் நம் இதயத்தில்...

இணையத்தை வாழ வைக்கும் நண்பா...

இதயத்தில் தமிழையும் வாழ வைப்போம்...

Ajai Sunilkar Joseph

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!