வியாழன், 10 மார்ச், 2016

உழவன் பணிக்கு கிழவன் ஆனாலும் ஓய்வில்லையோ...!

ஏர் ஓட்டின வயலினிலே

தார் ஓட்டும் காலமடா...

நஞ்சை காட்டின் நெஞ்சினிலே

நஞ்சு விதைக்கும் உலகமடா...

சோறு போட்ட காலத்தில் உழவன்

இன்று அவன் பெயர் கிழவன்...

குளிரிலும் இவனுக்கில்லை போர்வை...

நிலம் முழுவதும் இவனது வேர்வை...

இன்றில்லை இவனுக்கு மதிப்பு

அரசுக்கும் புரியலை இவன் கொதிப்பு...

ஒரு நாள் நிச்சயம் பசிக்கும்...

அன்றே இவன் பணி ருசிக்கும்...

உனக்கும் எனக்கும் ஓய்வுண்டு...

எல்லா பணிக்கும் ஓய்வுண்டு...

கிழவன் ஆன போதிலும்

உழவன் பணிக்கு ஓய்வில்லையோ...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

25 கருத்துகள்:

 1. உண்மை. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே .உழவன் கவிதை உருக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே....
   கருத்துரைக்கு நன்றி நண்பரே....
   தங்கள் வருகைக்கும் நன்றி நண்பரே...

   நீக்கு
 2. கவிதை மிக அருமை அஜய். உங்கள் பதிவுகளின் மூலம் நிறைய கவிதைகளை தெரிந்து கொள்ள முடிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா...
   இந்த வலைப் பதிவில்
   ஏதோ என் புத்திக்கு
   எட்டிய வரிகளை
   கரங்களால் கிறுக்கி
   வருகிறேன் அம்மா....

   நீக்கு
 3. கண்கூடான உண்மை ..செத்த பிறகுதான் அவருக்கு ஓய்வு நண்பரே..

  பதிலளிநீக்கு
 4. இயற்கையும் சதி செய்கிறது. அரசாங்கங்களும் கண்டு கொள்வதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இயற்கை விதி செய்கிறது
   அரசு சதி செய்கிறது நண்பரே....

   நீக்கு
 5. என்னைப் பொறுத்தவரை கண்ணிர் விடுபவன் கோழை. எல்லோரும் பிரியமானவரே அது என்ன பிரியமில்லாதவனின் கவிதைகள்?கவிதைகள் உணர்வுகளின் ஊற்று ஊற்றில் நல்ல நீர் வந்தால் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே நான் கண்ணீர் விடவே இல்லையே....
   கண்களால் பார்த்தவைகளை
   கரங்களால் கிறுக்குகிறேன்....
   வலித்தாலும் நான் அழமாட்டேன்....

   நீக்கு
 6. பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   தங்கள் வருகைக்கும்
   கருத்துரைக்கும் நன்றி...

   நீக்கு
 7. போற்ற வேண்டியவன் உழவன் ஆனால் இன்று தூற்றுகின்ற நிலையில் அவன் வாழ்வு. அருமையான கவிதை ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே ......
   போற்றுவோம் தூற்றல் மாற்றப்படும்....

   நீக்கு
 8. நல்ல கவிதை வரிகள். உழவுதான் நம் நாட்டின் ஆணி வேர். நம் நாட்டின் என்று சொல்லுவதை விட உலகத்தின் ஆணிவேர். மற்ற நாடுகளில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாகத்தான் தெரிகின்றது, நம் நாட்டில்தான் உழவு இழிவாக்கப்பட்டு வருகிறது. வேதனை..தொடர்கின்றோம் அஜய்.

  ஒரு பரிந்துரை. மின் அஞ்சல் சன்ஸ்க்ரிப்ஷன் வைத்தால் நன்றாக இருக்கும். எங்கள் ஐடியைப் பதிந்துவிட்டால் ஃபீர் பர்னர், உங்கள் பதிவுகள் வெளியாகும் போது, எங்கள் பெட்டியில் போட்டுவிடும். எங்களுக்கும் உங்கள் பதிவுகளுக்கு வந்துவிட முடியும். எல்லோருக்குமே உதவியாக இருக்கும் நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே தங்கள் வருகைக்கு நன்றி ...
   வாழ்த்துக்களுக்கும் நன்றி....
   இங்கு வலைத்தளத்திற்கு நான்
   புதிது என்பதால் எல்லாமே
   புதிதாக உள்ளது ....
   நீங்கள் சொன்ன மின்னஞ்சல் சன்ஸ்க்ரிப்ஷன்
   வைக்க முயற்சி செய்கிறேன்...

   நீக்கு
 9. ஆஹா வாழ்வியல் தத்துவம் சவுக்கடியான வார்த்தைகள் அருமை நண்பரே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்கள் கருத்துரைக்காக
   காத்திருந்தேன்
   வந்து விட்டீர் நன்றி......

   நீக்கு
 10. உழவனின் மாண்பதைப் போற்றும் கருத்தான கவிதை...
  மிக்க நன்று!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது வலைப்பூவிற்கு வந்து,
   கருத்திட்டமைக்காக நன்றி நண்பரே!

   நீக்கு
  2. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பரே

   நீக்கு
 11. ஆஹா மனிதன் மறந்த செயல்,,

  நன்றி நன்றி கவிதைக்கு நன்றி,,

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!