ஞாயிறு, 13 மார்ச், 2016

காதல் கலைக்கப்பட்டதோ....!

இருவர் கண்களின்

                     உறவால் உணர்வுகள்

தூண்டப்பட்டு இதயத்தில்

                     கருவானதே காதல்...

அன்பினால் அது

                     சுமக்கப்பட்டும்...

திருட்டுத்தனமாய் அது

                     வளர்க்கப்பட்டும்...

காதலர்கள் இதயத்தில்

                     கருவான காதல்

திருமணமாய் பிரசவிக்கப்

                     படுமென்று காத்திருந்தும்...

கருவான காதல்

                     கலைக்கப்பட்டதோ...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

18 கருத்துகள்:

  1. அருமை அருமை! ம்ம்ம் பல காதல்கள் பல காரணங்களால் கலைக்கப்படுகின்றதுதான் நடக்கின்றது.

    பதிலளிநீக்கு
  2. வளமான கற்பனை, வாழ்த்துகள

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே தங்கள்
      வருகைக்கும் கருத்துரைக்கும்...

      நீக்கு
  3. ஆம்.. நான்கு மாத கர்ப்பினியான கோதை லெட்சுமியின் சிவசுந்தரபாண்டியனின் காதலும் கலைக்கப்பட்டதுதான் நிணைவுக்கு வருகிறது.. நண்பரே......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வது
      பொய் நண்பரே.....
      காதலுக்கு ஜாதிக் கண்,மதக் கண் என்று பல
      சொல்லலாம்....
      இந்த பல கண்களால் காதல் கலைக்க படுகின்றது....
      இந்த பல கண்களையும் குருடாக்கி விட்டால்
      காதல் திருமணமாய் பிரசவிக்கப்படும்....

      நீக்கு
  4. கற்பனையில் உருவான கவிதை அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அம்மா....
      நிஜமும் கற்பனையும்....
      கலந்த கவிதை அம்மா...

      நீக்கு
  5. முதலில் காதலுக்கும் உடல் ஈர்ப்பினால் வரும் உணர்வுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும் உண்மையானகாதல் உணர்வு துண்டிக்கப்படாதுதிருமணத்தில் முடிந்தால்தான் காதலா

    பதிலளிநீக்கு
  6. சரி நண்பரே ....
    திருமணம் தான் காதலின் ஆரம்பம்
    இந்த ஆரம்பத்திலும் அடி எடுத்து
    வைக்காமல் கலைந்து
    போனதே இந்த காதல்....

    பதிலளிநீக்கு
  7. அருமை நண்பரே பெரும்பான்மையான காதல்கள் இப்படித்தான் இருக்கின்றன நடைமுறை யதார்த்தத்தை உணர்த்தியது க(வி)தை

    பதிலளிநீக்கு
  8. உண்மை உண்மை காதல் மதம் கூட இல்லை ஜாதி பார்த்து தான் முடிவு செய்கிறோம்,,,

    நன்றி,,

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!