திங்கள், 14 மார்ச், 2016

மீண்டும் நட்பால் இணைந்தோம்....

பள்ளிக்கூட பருவத்திலே

              அறிமுகமான முதலாம் நாள்...

பிஞ்சு நெஞ்சங்களில்

              பாசாங்கில்லா பாசத்தால்...

துவங்கினதே இந்த நட்பு...

              இன்றும் முடிவில்லாததே நட்பு...

கல்வி முடிந்ததும் பிரிந்தோம்

              கல்லூரி காலமும் தொடர்ந்தோம்...

மீண்டும் மறுமுறை பிரிந்தோம்...

              பணிகளும் வந்தது மறந்தோம்...

அறிமுகமானதே இணையம்...

              மீண்டும் நட்பால் இணைந்தோம்...

இங்கே மீண்டும் நட்பின் உதயம்...

              இணைந்ததே நம் நட்பில் இதயம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

21 கருத்துகள்:

  1. எல்லா காலத்தும் அன்பு என்பது இருந்தால் நட்பு துளிர்த்துவிடும். பருவம் இல்லை அதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நட்பே....
      ஆனால் இங்கு
      முதல் நட்பு துவங்குவது
      பள்ளிக்கூடத்திலே ...

      நீக்கு
  2. இணைந்த நட்பின் இதயங்கள் வாழ்க!!!

    பதிலளிநீக்கு
  3. யதார்த்த உண்மைகள் அருமை நண்பரே வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் தாமத வருகையி சிறிய வருத்தம் எனக்கு....
      இருப்பினும் நன்றிகள் நண்பரே....

      நீக்கு
    2. நண்பரே இது தாமத வருகை அல்ல எனது முதல் பிரவேசமே மாலை 5.00 மணிக்குப் பிறகே...

      நீக்கு
  4. நட்பை பற்றி கவிதை வடிவில் அழகாக சொல்லி இருக்கீங்க அஜய்.

    பதிலளிநீக்கு
  5. ஆம் நட்பு ,,,,,

    அருமையான கவிதை,

    உண்மைதான் பள்ளி, கல்லூரி, திருமணம்,,, இப்படியே பிரிந்த நட்பு ,,

    மீண்டும் சந்தித்தால் சந்தோசமே,,

    கவி வரிகள் அருமை, வாழ்த்துக்கள்,

    பதிலளிநீக்கு
  6. நட்பின் கவி வரிகள் நன்று

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!