வியாழன், 10 மார்ச், 2016

சிறந்த தலைவன்...

மீண்டும் ஒரு முறை இந்த
வரிகளை பதிவு செய்கிறேன்...

இலவசம் ஏனோ

இவன் வசம் இல்லை...

இவன் கண்களில் ஏனோ

தூக்கமும் இல்லை...

காரணம் தானோ

சுயநலம் இல்லை...

இவன் குருதி கொதிப்பதோ

பொதுநலன் கருதி...

குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...

நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...

மக்கள் பஞ்சம் தீர்க்க

இவன் நெஞ்சம் பதறும்...

இவனே சிறந்த தலைவன்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. சரிதான் நண்பரே....
   தங்கள் வருகைக்கு நன்றி....

   நீக்கு
 2. அருமையான கவிதை நண்பரே படிக்காத மேதையைப்பற்றி...

  பதிலளிநீக்கு
 3. படிக்காத மேதை அனைவரையும் மேதையாக்கினார்.. அந்த மேதைகள் சேர்ந்து வருங்கால சந்நததியினரை போதையாக்கினார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதான் நட்பரே....
   மேதை போட்ட பாதை
   பாதையெங்கும் போதை...

   நீக்கு
 4. காமராஜரின் கருணைக் கண்களால்தான், ஏழைக் குழந்தைகளின் அறிவுக்கண்கள் அகலமாய் திறந்தன. அவரை மறக்காத உள்ளங்களே உயர்ந்த உள்ளங்கள், வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே
   தங்கள் வருகைக்கு....
   அவர் படிக்காத மேதை
   பல பல படித்த மேதைகள்
   அவராலே உருவாக்கப் பட்டனர்..

   நீக்கு
 5. காட்டு மக்களின் கவலைப் பார்த்தவன்,
  தன் குடும்ப கவலை அற்றவன்,
  அனைவர் மனதிலும் வாழும்
  தியாகி,,

  நல்ல மனிதரைப் பற்றிய பா வரிகள்,,

  பதிலளிநீக்கு