திங்கள், 28 மார்ச், 2016

தாயாகி போனாளே...

கண்களில் காதல் கண்டு
இதயங்கள் கர்ப்பம் கொண்டு
கனவுகள் பல கருவாகி
நினைவெனும் மழலை பிறந்ததால்...

அவளின் அவனாய் தாலிக்கட்டி
அவள் நெஞ்சில் ஆட வைத்தேன்
பஞ்சணையில் தலை சாய்க்க
நெஞ்சணையில் அணைத்துக் கொண்டாள்...

முத்தழகே உன்னை பெற்றெடுக்க
மாதங்கள் சில மூச்சடக்கி
கருவினில் வாழ்ந்த உன்னை
என் மகனாக அறிமுகம் செய்தாள்...

என்னை கனவில் சுமந்தாள்
உன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...


Ajai Sunilkar Joseph


By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

20 கருத்துகள்:

  1. அருமை. தாய்க்குப் பின் தாரம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....
      வருகைக்கும் கருத்துரைக்கும்
      நன்றி நண்பரே....

      நீக்கு
  2. அருமையான வரிகள்,,
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. அருமையான வரிகள்!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. என்னை கனவில் சுமந்தாள்
    உன்னை கருவில் சுமந்தாள்
    நம்மை அவள் சுமந்ததால்
    இருவருக்கும் தாயாகிப் போனாளே...தாயின் அருமை நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      கருத்துரைக்கும்
      தங்கள் வருகைக்கும்
      நன்றிகள் பல நண்பரே...

      நீக்கு
  5. நல்ல கருத்துகள் நண்பரே தொடருங்கள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  6. இந்த காலத்தில் பிள்ளையைக் கூட ,வாடகை தாய் வயிற்றில் சுமக்க வைக்க முடிகிறது !காதலனை வேற வழியில்லை .நெஞ்சில் சுமந்தே ஆகவேண்டும் :)

    பதிலளிநீக்கு
  7. கருத்து நிறைந்த வரிகள். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா....

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!