செவ்வாய், 8 மார்ச், 2016

மண்ணை விட்டு மறைந்தாளோ...!

கண்ணில் கண்ட
                  காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
                  உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
                  நேரமும் இதுதானோ...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
                  என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
                  நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
                  காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
                  காவல் காப்பேனே...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

24 கருத்துகள்:

  1. இறந்தாலும், மறைந்தாலும் வாழும் உண்மைக்காதல் அருமை நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உடனடி கருத்துரையால் மகிழ்ந்தேன் நண்பரே....
      நன்றி நட்பரே...

      நீக்கு
  2. அருமையான காதல் கவிதை அஜய். இனி உங்கள் கவிதைகளை தொடர்வேன்.

    பதிலளிநீக்கு
  3. அந்த நினைவை
    காவல் காப்பேனே...!காவல்காரன்... அருமை..

    பதிலளிநீக்கு
  4. கண்ணில் நிறைந்து இருக்கும் போது
    மண்ணை விட்டு மறைவது எப்படி?..

    பதிலளிநீக்கு
  5. தங்கள் வருகையால் மகிழ்ச்சி நண்பரே...

    அவள் கண்ணில் நிறைந்தாலும்
    மண்ணில் மறைந்தாலும்...
    அவள் நினைவுகள்தான் என்னால்
    காவல் காக்கப்படுகிறது...

    பதிலளிநீக்கு
  6. காதல் என்றும் அழிவதில்லை பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் முதல் வருகையால் மகிழ்ச்சி அக்கா....
      கருத்துரைக்கு மிக்க நன்றி ....
      காதல் அழியாதது உண்மைதான் ....

      நீக்கு
  7. அருமை நட்பே...
    அன்பினை அமிழ்தமாய் ஆருயிரிலே கலந்து விட்டீரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கு நன்றி
      கருத்துரையால் மகிழ்ந்தேன்...

      நீக்கு
  8. வணக்கம்

    தங்களின் பக்கம் வருவது முதல் முறை இனி என்வருகை தொடரும் கவிதையை படித்த போது காதல் நினைவுகள் நெஞ்சை அள்ளிச்சென்றது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நன்றி நன்றி
      தொடர்ந்து வாருங்கள் ஏதோ
      என் கரங்களின் கிறுக்கல்களை
      பதிவிடுகிறேன்....

      நீக்கு
  9. காலத்தால் அழியாக் காதல் வாழ்க :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே மகிழ்ந்தேன் தங்கள் வருகையால்....
      தங்களின் கருத்துரை நெஞ்சை
      கொஞ்சி செல்கிறது....

      நீக்கு
  10. அருமையான கவிதையை அழகான படத்துடன் தந்து மயக்குகிறீர்கள் தொடர்ந்து வருவேன் நண்பரே! தொடருங்கள். நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே தங்கள் வருகையால் மகிழ்ந்தேன்...
      கருத்துரைக்கு நன்றிகள் பல நண்பரே....

      நீக்கு
  11. திண்டுக்கல் தனபாலன் பக்கத்தில் பார்த்து, FOLLOWER இணைப்பைச் சேருங்கள்..நிறையப் பேர் தொடர வேண்டியது தங்கள் தளம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரி நண்பரே முயற்சிக்கிறேன்....
      நன்றி நண்பரே....

      நீக்கு
  12. அவளின் நினைவுகள் பூதம் காக்கும் பூதையல் தான் உள்ளத்தில்,,
    ம்ம் தொடருங்கள்,,

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!