புதன், 27 ஏப்ரல், 2016

மஞ்சரி மற்றும் மாலினி - 1

அன்பான வலையுலக நண்பர்களுக்கு
பிரியமில்லாதவனின் பிரியமான வணக்கங்கள்...
முதன் முதலாய் முயற்சி செய்து
இந்த கதையை துவங்கியுள்ளேன்...
கதையை படித்து விட்டு தங்கள்
கருத்துகளை  சொல்லுங்கள்...

மஞ்சரி மற்றும் மாலினி - 1



அடியே மாலினி விடிஞ்சு இவ்ளோ நேரம் ஆவுதே சீக்கிரம் எந்திரிடி என்று அவசரமாய் 
கத்தினாள் மாலினியின் தாய் மஞ்சரி...


ஆம் மாலினி வேறு யாரும் அல்ல
இந்தக் கதையின் நாயகிதான்...


ஏன் தன் மகளை அவசரமாய் கூப்பிடுகிறாள்
என்று அப்புறமாக சொல்கிறேன்...
முதல் மஞ்சரியை குறித்து பார்ப்போம்...

அந்த ஊரில் முத்தைய்யா என்று ஒரு
பணக்காரர் இருந்தார்...

அவரை காதலித்தவர் பெற்றோரின் வற்புறுத்தலால் வேறு திருமணம் செய்து 
முத்தைய்யாவை பிரிந்து விட்டார்...

இது முத்தைய்யாவுக்கு பெரிய 
ஏமாற்றமாக இருந்தது...
இதிலிருந்து முத்தைய்யாவுக்கு 
பெண்கள் எனெறாலே வெறுப்பு...
ஆனால்....
                  முத்தைய்யாவின் பெற்றோரின் 
வற்புறுத்தலின் பெயரில் முத்தைய்யாவும் 
திருமணம் செய்து கொண்டார்...

ஆனால் தன் மனைவி செல்வியை நன்றாகவே அடிப்பார் உதைப்பார் 
கொடுமை படுத்துவார்...

முத்தைய்யாவின் கொடுமை 
எல்லாம் தாங்கிய செல்வி 
பெற்றெடுத்த அழகு சிப்பிதான் மஞ்சரி...

முத்தைய்யாவுக்கு பெண்கள் மேலிருந்த
வெறுப்புதான் என்னமோ மகள் மஞ்சரியின்
மேல் துளியளவும் பாசமில்லாத காரணம்...

தன் மனைவி பெண் பெற்றாள் என்றே
விசேஷமாக சித்திரவதை செய்வார்...

முத்தைய்யா என்றால் அவரது ஜாதியே
அவருக்கு கட்டுப்பட்டு நிற்கும்...

அவளவு ஜாதிப் பிரியர் இல்லை வெறியர்...

எந்த ஜாதி என்று கேட்க வேண்டாம்...

அது சாணி போல நாறும்...

அதனால் கதையை மட்டும் பார்ப்போம்...

மஞ்சரிக்கோ மருத்துவர் ஆக வேண்டும்
என்பதே கனவாய் இருந்தது...

அதனால்தான் அவள் நினைத்தது கனவாய் கலைந்ததோ...!

தன் மகள் +2 வில் அதிக மதிப்பெண் 
பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தாலும் அவளை மேலே படிக்க 
விடாமலே இருந்தார் முத்தைய்யா...

அவரை ஊரே பணக்காரன் என்று சொன்னாலும்...

தன் மகள் வாழ்க்கையில் கஞ்சனாகவே இருந்து
மஞ்சரியின் படிப்பில் மண் அள்ளியே போட்டார்...

காரணம் பெண் என்றாலே அவருக்கு பிடிக்காதாம்...

அப்போ எதற்கு பெண் பெற்றாய் என்று கேட்டால்
அன்று மனைவி செல்விக்கு கொடுமையும்
சித்திரவதையும் தான் மிஞ்சும்...

பெண் பெற்றாள் செல்வி அதனால்தான்
மகளுக்கு இல்லை கல்வி...

மஞ்சரியோ தன் தாய் படும் கொடுமைகளை
பார்த்து மேலே படிக்க வேண்டும் என்ற
எண்ணத்தையும் விட்டு விட்டாள்...

படிக்க ஒருத் தடையா என்று நினைத்து நினைத்து
தன் உள்ளத்தையே உடைத்து விட்டாள்...

அன்பான மஞ்சரியின் மனமோ அகதி போல
சுற்றியே வந்தது தன் ஆசை வைத்த மருத்துவ படிப்பின் மேலே...

மஞ்சரியும் தன் படிப்பை மறந்து இல்லை இல்லை
அந்த எண்ணங்களை மனதினுள்ளே புதையலாய் புதைத்து விட்டாள்...
                                                   (தொடரும்...)          

20 கருத்துகள்:

  1. வாழ்த்துகள், கருத்து நன்றாக உள்ளது. ஏதாவது ஒரு எழுத்தாளரின் சிறுகதை நடையை ஒரு தடவை வாசிக்கவும். அதில் எங்கெங்கு உரையாடல், எங்கெங்கு சாதாரண நடை, ஆச்சர்ய குறி, கேள்வி குறி இதெல்லாம் தென்படுகிறது தெரியும். என்னுடைய வலைத்தளத்தில் ஏதாவது ஒரு சிறுகதையைப் பார்க்கலாம். நானும் கற்றுக்கொண்டவன்தான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே ....
      நான் பார்த்து தெரிந்து கொள்கிறேன்....

      நீக்கு
  2. ஆஹா நல்லா இருக்கு, இது உங்கள் நடை,,, தொடருங்கள் சரியாப் போகும்,,
    வாழ்த்துக்கள் நண்பரே

    பதிலளிநீக்கு
  3. கதையின் நடை ஆரம்பமே விறுவிறுப்பாகச் செல்கிறது. தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே
      தங்கள் முதல் வருகைக்கும்
      கருத்துரைக்கும்...
      தொடர்கிறேன்...

      நீக்கு
  4. கவிதையை விடுத்து அடுத்த கட்டத்துக்கு நகர்ந்ததற்கு வாழ்த்துகள். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம்தானே.. எழுத எழுத கைவரும். தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிதையை விடவில்லை நண்பரே...
      சிறிய ஆர்வம் கதை எழுத வேண்டும் என்று...
      அதனால் எழுதி பார்ப்போம் என்றுதான் துவங்கி உள்ளேன்...
      எப்படி எந்த திசையில் போனாலும்
      எனக்கு வழிகாட்டி உங்கள் கருத்துரைகளே....

      நன்றி நண்பரே....

      நீக்கு
  5. ஆஹா வாழ்த்துகள் கதை சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது தொடரட்டும் எனக்கென்னவோ இந்த முத்தையா மள்ளாங்கி ஜாதிக்காரனோன்னு..... ஒரு சந்தேகம் இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இருந்தாலும் இருக்கும் நண்பரே...
      முத்தையாவின் ஜாதி
      மள்ளாங்கியா,முள்ளங்கியா
      என்பதை வருகிற நாட்களில்
      பார்க்கலாம் நண்பரே....

      நீக்கு
  6. நல்லா இருக்கு நண்பரே...தொடருங்கள். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  7. நன்றாக இருக்கிறது நண்பரே
    சிறு சிறு பத்திகளாகப் பிரித்து எழுதினால்
    படிப்பதற்கு வசதியாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  8. பெண் என்றால் பேயும் இரங்கும் என்ற பழமொழியை முத்தயைா.. போன்ற சாதி வெறியர் பொய்யாக்கி விட்டாரோ...??????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே....
      பேயை விட கொடுமையானவர்தான்
      முத்தைய்யாவாக இருப்பார்...

      நீக்கு
  9. கதை நன்றாக அமைந்திருக்கிறது
    தொடருங்கள், தொடருவோம்!

    பதிலளிநீக்கு
  10. அன்பின் ஜோசப்
    வலை உலகில் நினைத்ததை நினைத்தபடி சொல்பவர்கள் மிகவும் குறைவுஎழுதுபவரின் மனம் புண்படுமே என்று எதையும் சிலாகிக்கும் குணமே அதிகம் ஆரம்பத்தில் சிறு கதைகளை எழுதுங்கள் நல்ல எழுத்தை யாராலும் மூழ்கடிக்க முடியாது முதல் அன்பரின் பின்னூட்டத்தில் கண்டபடி நிறைய வாசியுங்கள் பலவித நடைகள் புலனாகும் எது எளிமையாகக் கை வருகிறதோ அதன்படி எழுதுங்கள்வெற்றி உங்களுக்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஐயா....
      நான் நிறைய படித்து
      பார்க்கிறேன் பிறகு...
      இதன் அடுத்த பகுதியை
      முயற்சிக்கிறேன்...

      நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!