வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கொள்ளை போன வெள்ளை பூவே...!

உள்ளத்தில்...

                          உண்மை காதலின் விதைகள் வீசி...

உள்ளூற முளைத்த காதல் செடியே...

உந்தன் மொழியில் எந்தன் காதல்...

உன்னில் உணர்வாய் என்னில் உயிராய்...

உள்ளின் உணர்வில் உன்னத உயரில்...

உண்மையாய் வளர்ந்து உரிமையாய் துளிர்த்து...

உயிரும் உணர்வும் உறவாய் கலந்து...

உலகம் போல உன்னை சுற்றி...

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வெனும்

ஊற்றின் ஓரத்தில் உண்மை காதலாய்...

மொட்டாய் மலர்ந்த வெள்ளை பூவே...

என்னை சாய்த்து உனக்கு மாலையிட்டு...

உன்னை ஊரறிய கொள்ளையிட்டு ...

போனவன்தான் உனக்காய் தவம்

கிடந்த மன்னவனோ(உன்னவனோ)...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

12 கருத்துகள்:

 1. "உன்னை
  ஊரறியக் கொள்ளையிட்டுப் போனவன் தான்...
  உனக்காய்த் தவம் கிடந்த
  மன்னவனோ (உன்னவனோ)...!" என
  அழகாகச் சொல்லியிருக்கிறியள்!

  இப்படி வரிகளில் மாற்றம் செய்து மீள மீள உரக்க வாசிக்கையில் கேட்க இனிமையாகவும் வாசிக்கச் சுவையாகவும் இருப்பின் இவ்வாறு தொடரலாம்

  இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அருமையாக கருத்துரை தந்தீர்....
   நன்றி நண்பரே....
   உங்களுக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்...

   நீக்கு
 2. மிகவும் ரசித்து எழுதி இருக்கின்றீர்கள் ரசித்தேன் வாழ்த்துகள் நண்பரே

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!