சனி, 16 ஏப்ரல், 2016

என்னுடலோ சலனமின்றி...

ஏதோ சொல்ல நினைக்கிறேன்

சொல்ல முடியாமல் தவிக்கிறேன்...

ஏந்திழையின் விழி இரண்டில்

ஏக்கத்தின் கண்ணீர் பார்க்கிறேன்...

ஏதேனும் சொல்ல நானும்

எத்தனமாய் நிற்கிறேன்...

ஏனோ என்னால் முடியாமல்

ஏக்கம் நிறைந்து திகைக்கிறேன்...

என்னவளின் அருகில் நானும்

நின்று கொண்டே அழுகிறேன்...

ஏனோ தெரியவில்லை என்

கண்ணீர் மண்ணில் விழவில்லை...

என்னுடலோ சலனமின்றி

சவமாய் அவளருகில்...

என்னவளின் அழுகையோ என்னருகில்...

என்னுயிரோ தவிக்குதே அவளருகில்...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

12 கருத்துகள்:

  1. ஏங்க... கண்ணைக் கொஞ்சம் அங்க இங்க திருப்புங்க... அப்பத்தான் பேச்சு வரும்! அவிங்க முகத்தையே பார்த்துகிட்டிருந்தா பேச்சு எப்படி வரும்?

    :)))

    பதிலளிநீக்கு
  2. ஏனோ தெரியவில்லை என்

    கண்ணீர் மண்ணில் விழவில்லை...

    என்னுடலோ சலனமின்றி

    சவமாய்

    பதிலளிநீக்கு
  3. சோக வரிகள் வித்தியாசமாக இருக்கின்றதே... தொடர வேண்டாம் இந்நிலை மாற்றம் வரட்டும்.....

    பதிலளிநீக்கு
  4. தங்கள் தளம் போலவே கருத்து பெட்டியினை உருவாக்கி உள்ளேன். தயவு செய்து கருத்தினை வழங்கினால் சரி பார்க்க பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நான் மறந்து விட்டேன்
      நான் பார்த்து சொல்கிறேன்...

      நீக்கு
  5. சோக கீதங்களால் மனதை ஆற்றிக் கொள்கிறீர்கள் நண்பரே

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!