திங்கள், 18 ஏப்ரல், 2016

மின்னல் விழி கொண்டவளா...!

கண்கள் கூசும் மின்னலா...

மின்னல் வீசும் கண்களா...

உன் பார்வை பட்டது என்னிலா...

என் பார்வை போனது உன்னிலா...

உன்னை மட்டும் பார்க்கிறேன்...

என்னை நானே மறக்கிறேன்...

என் கண்கள் மூட மறுக்கிறேன்...

உன்னை கனவில் காண துடிக்கிறேன்...

உறக்கம் இல்லை கண்ணிலே...

உன்னை பார்க்கிறேன் கனவிலே...

நீதான் என்மன வானிலே...

நான் கனவாய் காணும் பெண்ணிலா...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

18 கருத்துகள்:

 1. மின்னலின் தாக்கம் கண்களை குருடாக்கி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விழிகளின் மின்னல் தானே ஜி
   குருடாகாமல் பார்வைதனை
   பறித்துக் கொள்ளும் அவள் பக்கமாக....

   நீக்கு
 2. ஹப்பா சோகம் நீங்கி கொஞ்சம் புத்துணர்வு வந்துள்ளது போலும்!! அருமை!! உங்கள் மனதில் வெண்ணிலாவாய் ஒளிரட்டும் இந்தப் பெண்ணிலா!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ம்ம்ம் சரி சகோ.....
   ஒளிர்கிறாள் பெண்ணிலவாய்....

   நீக்கு
 3. மின்னல் விழி கொண்டவளா...!..,இருந்தால் பார்ப்பவர்களின் கண்களை பறித்து விடுவாரே.....!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 4. மின்னல் விழி கொண்டவளா...!..,இருந்தால் பார்ப்பவர்களின் கண்களை பறித்து விடுவாரே.....!!!!!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு மட்டுமே மின்னல் விழி கொண்டவள்....
   பார்வை பறிப்பாள் அவள் வசமாய்

   நீக்கு
 5. பளிச் மின்னலால் பார்வை போகும். பாவையரின் மின்னல் பார்வையால் இதயம் காணாமல் போகுமே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் நண்பரே....
   உண்மைதான் .....
   வருகைக்கு நன்றி நண்பரே ....

   நீக்கு
 6. மின்னல் ஒளிபோல் ஒளிர்கின்றது வார்த்தைகள் தொடரட்டும் மின்(னல்)வெட்டு

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!