புதன், 20 ஏப்ரல், 2016

அகதியான இதயத்தில் அவளே கைதி...

கண்ணால் என்னை கடத்தி

சென்றாள் மெல்ல ஒருத்தி...

காதல் வசியம் செய்து

இதயம் எடுத்தாள் கொய்து...

என்னிதயத்தில் அவளே நின்று

கட்டினாள் காதல் சிறையொன்று...

இதயம் அவளிடம் அகதியாய்

அதனுள் அவளே கைதியாய்...

இரவும் பகலும் காவல்

காத்தே செய்தேன் காதல்...

நித்தம் நித்தம் நினைவுகள்

தந்தாள் எந்தன் நெஞ்சுக்குள்...

கண்ணால் காதல் தருகிறாள்

இதயத்தில் அடைந்து கிடக்கிறாள்...Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

24 கருத்துகள்:

 1. >>> இதயம் அவளிடம் அகதியாய்
  அதனுள் அவளே கைதியாய்!...<<<

  நிலைமை மிகவும் சிக்கலாக இருக்கும் போல இருக்கின்றதே!..

  பதிலளிநீக்கு
 2. அன்பென்னும் சிறையில் அகப்பட்டால் ஆனந்தமே

  பதிலளிநீக்கு
 3. நேற்று முந்தா நாள் சொன்னது வேறு ஆள், இன்று வேறு ஆளா? இல்லை அதே ஆள்தானா? தெரிந்து கொள்ள ஆவல் பெருகுதே!

  :))

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கு ஏற்றவாறு வலைத்தளத்தில் கருத்தினை தெரிவிக்க வசதி செய்துள்ளேன். அங்கு தெரிவித்தால் ஊக்கமாய் இருக்கும் நண்பரே. நீங்கள்தான் பிளாக்கரின் முதல் வழிகாட்டி ஆதலால்தான் இந்த வேண்டுகோள்

  பதிலளிநீக்கு
 5. அகதியாக்கினாள் யுவதி அவளை கைதியாக்கினால் சரியாகும் நண்பரே

  பதிலளிநீக்கு
 6. காதல் படுஜோராக சென்று இப்போது என்ன கொஞ்சம் சிக்கலாகி இருக்கிறதா? ஊடல்?பிணக்கம்??!! ஹிஹி..சரி சரி சீக்கிரமே காதலுக்குச் சுபம் போடுங்க!! அஜய்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுபம் போடலாம் சகோ...
   காத்திருத்தல் முக்கியம்....

   நீக்கு
 7. இரவும் பகலும் காவல்

  காத்தே செய்தேன் காதல்.....தாங்கள் மட்டுமே காதல் செய்தால் அது ஒருதலை காதல் அல்லவா..???

  பதிலளிநீக்கு
 8. இரவும் பகலும் காவல்

  காத்தே செய்தேன் காதல்.....தாங்கள் மட்டுமே காதல் செய்தால் அது ஒருதலை காதல் அல்லவா..???

  பதிலளிநீக்கு
 9. வணக்கம்...

  உங்கள் தளத்துக்கு என் முதல் வருகை... காதல் ! காதல் ! காதல் கவிதைகள் நன்று !

  ஆசான் சொன்னதையே சொல்கிறேன்... சீக்கிரம் காதலுக்கு சுபம் போடுங்கள் !

  தொடருகிறேன்.

  நன்றி
  சாமானியன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரின் முதல் வருகையில் மகிழ்ந்தேன்....
   விரைவாக காதலுக்கு சுபம் போடப்படும்...

   தொடருங்கள்....
   நண்பரின் முதல் வருகைக்கும்
   தந்த கருத்துரைக்கும் நன்றிகள் பல...

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!