சனி, 23 ஏப்ரல், 2016

கோபம் வேண்டாம் கண்மணியே...

நுரைகள் பொங்கும்

                         அலைகள் கூட

கரையில் கொஞ்சம்

                         மோதிச் செல்லும்...

கரைகள் என்ன

                         கோபித்தா கொள்ளும்...

கரையில் உன்னிடம்

                         நேசம் வைத்த

எந்தன் சுவாசம்

                         உன்னைக் கொஞ்சம்

கொஞ்சும் போது...

                         மெல்லமாய் உன்னைத்

தீண்டிச் சென்றால்...

                         கோபம் வேண்டாம்

காதல் கண்மணியே...


Ajai Sunilkar Joseph பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வலையுலக நட்பர்களே நான் ஒரு
தொடர்கதை எழுத துவங்கியுள்ளேன்....
ஆனால் எனக்கு கதை எழுதியே பழக்கமில்லை...
இதிலே தொடர்கதை வேறேயா...!
வருகிற நாட்களில் தொடர்கதையை
இதே தளத்தில் பகிர்ந்து கொள்ள
சிறிய ஆவலாய் உள்ளேன்....
கதையை பகிரலாமா என்று உங்கள்
கருத்துகளை எனக்கு தாருங்கள் நட்பர்களே...

(கதை ஒரு உண்மை சம்பவம்
ஆனால் கற்பனைகள் சேர்க்கப்பட்டது)

10 கருத்துகள்:

  1. தயக்கம் வேண்டாம்... தாராளமாக பகிரலாம்....நண்பரே.....

    பதிலளிநீக்கு
  2. கவிதை நன்று வாழ்த்துகள் கதை எழுத தயக்கம் வேண்டாம் தொடருங்கள் ஆவலாய் நானும்.....

    பதிலளிநீக்கு
  3. தயக்கம் எதற்கு நண்பரே
    இது நமக்கான தளம்
    எழுதுங்கள்
    வாசிக்க
    கருத்துக் கூற
    காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே...
      விரைவில் கதையை
      வெளியிடுகிறேன்...

      நீக்கு
  4. பூக்கள் உங்களைக் கேட்டா பூக்கிறது? கனிகள் உங்களைக் கேட்டா காய்க்கிறது? நிலவு உங்களை கேட்டா ஒளிர்கிறது? தென்றல் உங்களை கேட்டா தழுவுகிறது? எழுதுவதற்கு எதற்கு......?

    பதிலளிநீக்கு
  5. கவிதை நடையில் கதையினைத் தொடருங்கள்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!