திங்கள், 25 ஏப்ரல், 2016

தமிழே நமக்கு அடையாளம்...

தமிழன் என்ற பெருமைதான்

தமிழுக்கு இங்கு வறுமைதான்...!

பிற மொழி பேசிய நாவும்

இங்கு தமிழ் மொழி கூவும்...!

தமிழ் மொழி பேசிய நாவிதோ

பிற மொழி மட்டும் கூவுதோ...!

தமிழன் என்றால் கொதிப்புதான்

இங்கு தமிழுக்கில்லை மதிப்புதான்...!

கொஞ்சும் தமிழும் இங்கே

பொங்கும் தமிழும் இங்கே...!

தமிழே நமக்கு அடையாளம்

அதுவே நமது தன்மானம்...

இணையம் கூட தமிழ் பேசும்

தமிழன் மறுப்பான் தமிழ் பேச...!Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

20 கருத்துகள்:

 1. முத்தாய்ப்பாய் முற்று பெறும் முத்தான வரிகள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. நன்றி சகோ....
   தங்கள் வருகையும் கருத்துரையும்
   முந்தைய பதிவில் காணவில்லை
   என்று கொஞ்சம் வருத்தமே...
   சில தவிர்க்க முடியா காரணத்தால்
   மறந்து இருப்பீர்கள் என்றுதான்
   என்னையே தேற்றுகிறேன்...

   நீக்கு
 3. தமிழே நமக்கு அடையாளம்

  அதுவே நமது தன்மானம்...

  பதிலளிநீக்கு
 4. உணர்ச்சி மிகுந்த வரிகள் மிகவும் ரசித்தேன் நண்பரே வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   வருகைக்கும் கருத்துரைக்கும் ....

   நீக்கு
 5. தமிழ் மட்டும்தான் நம் அடையாளம்
  உண்மை
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 6. அருமையான கவிதை இன்று தமிழன் நிலைமோகத்தால் சீரழியுது.

  பதிலளிநீக்கு
 7. அருமையான கவிதை அஜய். நங்கள் இப்போ அமெரிக்காவில் மகள் வீட்டில் இருக்கோம். கொஞ்சம் பிஸி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நல்லதே அம்மா....
   பிசியிலும் கருத்துரை
   தந்தமைக்கு நன்றி அம்மா....

   நீக்கு
 8. நோ வொரீஸ்! நாம தமிழ்லயே உரையாடலாம் அஜய்! ஓகே?

  :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரி நண்பரே ...
   எனக்கு ஆங்கிலம்
   தெரியாத காரணமே...
   தமிழில் ஆர்வம் வர காரணம்...

   நீக்கு
 9. அருமை நண்பரே! கவிதை வெள்ளம் பாயட்டும்! தொடர்ந்து வருகிறேன்! சில நண்பர்களின் தளங்களில் உங்களின் பின்னூட்டம் பார்த்தபோதே தொடர நினைத்தேன்! பாலமகி பக்கங்கள் தொடர வைத்துவிட்டார்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் முதல் வருகையால்
   மகிழ்ந்தேன் நண்பரே ....
   தங்கள் கருத்துரையில்
   மகிழ்ந்தேன் நட்பரே....

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!