வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நானும் என் தளமும்...

வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமில்லாதவனின் 
பிரியமான வணக்கங்கள்...


என்னைப்பற்றி இதுவரை யாரிடமும் 
நான் சொன்னது கிடையாது.
ஆனால் இங்கு என்னைத் தொடரும் சொந்தங்களுக்கு
சொல்ல ஆசைப்படுகிறேன்.


எனது பெயர் அஜய் சுனில்கர்
எனது அப்பாவின் பெயர்தான் ஜோசப்
அதை சேர்த்துதான் அஜய் சுனில்கர் ஜோசப் என்று
சேர்த்து வைத்துக்கொண்டேன்.



கன்னியாகுமரி மாவட்டத்தில் 
தேங்காய்பட்டணம் என்ற ஊரின் பக்கத்தில்
தொழிக்கோடு என்ற ஊரில்...


சாதாரண பிறப்புதான்,
கண்டிப்பான குடும்பம் , அழகான வாழ்க்கை 
அன்பான அப்பா , அம்மா, அண்ணன், அக்கா, கடைசியாக நான்

எவ்வளவுதான் கண்டிப்புடன் என்னை வளர்த்திருந்தாலும்...
எனது பள்ளிக்கூட வாழ்க்கை 7- ஆம் வகுப்புவரைதான் பயணித்தது.


காரணம் 
படிப்பு என்றாலே மண்டையில் ஏறாது...

பள்ளிக்கூட தேர்வுகளில் 35 தான் வெற்றி மதிப்பெண் என்றால்
அந்த மதிப்பெண்கள் கூட கிடைக்காது.

ஒரு தேர்வில் எல்லாப் பாடங்களுக்கும் சேர்த்து
98 மதிப்பெண்கள் வாங்கினேன் என்றால்
நான் எப்படி படித்திருப்பேன்
என்று நினைத்துப் பாருங்கள்.

படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளிக்கூடம் 
போகாமல் கட் அடித்தேன்.
பள்ளிக்கூடத்தில் இருந்து ஆள் அனுப்பி
வீட்டில் அறிவித்தார்கள்.

அப்பா அடிப்பார் என்று ஓடினேன்
வீட்டை விட்டு எங்கேயாவது போக வேண்டும் என்று...
ஆனால்...

வீட்டில் எவ்வளவுதான் கண்டிப்பு இருந்தாலும் 
அந்த அன்பான வாழ்க்கையை
விட்டுப் போக மனம் அனுமதிக்கவில்லை...

அன்று மதியமே வீட்டில் போனேன்.
வந்ததும் அப்பா அடிக்கவில்லை...
பள்ளிக்கூடம் போறியா...?
வேலைக்கு போறியா...?
என்றார்.

படிப்பில் வேறு நமக்கு வெறுப்பு.
அதனால் வேலைக்கு போறேன் என்றேன்.

அப்போது 2006 ஆம் ஆண்டு
ஒரு தையல் கடையில் என்னை தையல் கற்க
ஏற்பாடு செய்திருந்தார் அப்பா...

அந்த நேரம்தான் 
சிறுவர் தொழிலாளர்களை
தேடி கண்டு பிடித்து
படிக்க வைத்து வந்தார்கள்.

ஆனால் நான் இருந்த பகுதியில் 
அப்படியாரும் என்னை தேடி வரவில்லை.
2006 முதல் 2009 வரை அங்கு
இருந்தேன்.

வெறும் சட்டை மட்டும் தைக்க
கற்றுக் கொடுத்தார்கள்.
பிறகு அங்கு பிடிக்காததால்
அங்கிருந்த எனது தையல் மெஷினை எடுத்து
விட்டு கிளம்பினேன்...

வரும்போது முதலாளி நல்ல ஆசீர்வாதம்
வழங்கி அனுப்பினார்.

என்ன ஆசீர்வாதம் என்று தெரியுமா...?
அவரிடம் வேலை படிக்காமல் வேறு எங்கே போனாலும்
நான் உருப்படவே மாட்டேன் என்பதே....

நெஞ்சில் கொள்ளிக்கட்டையால்
சுட்டதுபோல் வடு இன்னும் மாறவில்லை...

பிறகு பக்கத்து ஊரில் அப்பாவின் நண்பர்
ஏற்பாடு செய்த கடைக்கு 
போனேன்.

அங்கு பேண்ட, சட்டை தைக்க கற்றுத்தந்தார்கள்
ஆனால் அங்கு எப்போதும் முதலாளி
கடையில் இருப்பதில்லை
அதனால் அங்கும் நிலைக்கவில்லை.

பிறகு சொந்த ஊரில் ஒரு கடையில்
2 வருடங்கள் தைத்து
பிறகு பேண்ட், சட்டை வெட்டித் தைக்க
கற்றும் தந்தார்
தைரியமும் தந்தார்...

அந்த கடையில் கொஞ்ச நாட்கள்
வேலை செய்து விட்டு...
முதலாளியின் அனுமதியுடன் திருநெல்வேலியில்
பத்தமடை என்ற ஊரில் எனது பெரியப்பாவின் கடையில்
பெண்கள் ஆடைகள் தைத்து படிக்க போனேன்.
அங்குள்ள இயற்கை எனக்கு ஒத்து வராததால் அங்கு
ஒரு மாதமும் நிலைக்கவில்லை...

பிறகு சொந்த ஊரிலேயே வேறு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன்.
அங்கு 2 வாரங்கள் வேலை செய்தேன்...
மூன்றாவது வாரம் வேலை செய்து விட்டு
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2012- ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 18- ம் தேதி...
ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் ஊர் சுற்றுவது
நண்பர்களின் வழக்கமான ஒன்று
அன்றும் வழக்கமாக ஊர் சுற்றி விட்டு வரும்போது...

என் பின்னால் இரண்டு நண்பர்களை
அமர வைத்து என் அண்ணனின்
பைக்கில் வந்து கொண்டிருந்தேன்...


ஒரு வளைவான ரோட்டில் அரசுப்பேருந்து விரைவாக
வந்து கொண்டிருந்தது.
ஒலிப்பெருக்கி அப்பேருந்தில் இல்லை போல...

கண் இமைக்கும் நேரத்தில் என் வாழ்க்கை
திசைமாறி பயணித்தது...

ஆமாம் எனது உயிர் ஒரு நொkடி
பிரிந்து சேர்ந்தது...
விபத்து ஒன்றில்...

பேருந்து மோதிய வேகத்தில் 
என் பின்னால் இருந்த நண்பர்கள் தூக்கி
வீசப்பட்டனர்...

நான் எனது கால் முறிக்கப்பட்டு
நான் சென்ற வாகனத்தில் 
அதிசயமாக விழாமல் அமர்ந்தே இருந்தேன்...

நல்ல வேளையாக எனது நண்பர்கள் 
காயங்கள் ஏதுமின்றி 
தப்பித்துக் கொண்டனர்...

எனது வலியும் விபத்து பயமும் என் மூளையில்
நேரடியாய் தாக்க....
அம்மா என்று கத்தியதே பக்கத்து ஊரில்
உள்ளவர்களை சம்பவ இடத்தில் வர வைத்தது.

நான் மெதுவாய் சாயத்துவங்க
பக்கத்தில் நின்ற ஒரு மனிதர் என்னை
விழாமல் தாங்கி பிடித்தார்...

வலது கால் முறிந்து இடது பக்கமாக
வண்டியுடன் சாய
அந்த மனிதர் என்னை பிடித்ததனால்
என் இடது கால் முறிவில் இருந்து தப்பியது.

என் அம்மாவுக்கு இந்த சேதி அறிவிக்கப்பட்டு
என் அம்மா, அக்கா, பாட்டி 
ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே
வந்து அழுதனர்...
நான் ரோட்டில் பிணம் போல் கிடந்ததைப் பார்த்து...

4 மணிக்கு விபத்து நடந்தது
ஆம்புலன்ஸ் போன் போட்டு 1½மணிநேரம்
கழித்தே வந்தது...

அருகே உள்ள மருத்துவ மனையில் என்னை அனுமதித்தனர்.
அறுவைசிகிட்சையில் காலில் ப்ளேட் வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் மருத்துவமனையில் இருந்து
கொஞ்சம் கஷ்டப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி
Walker உதவியுடன் நடந்து,
பிறகு Stick  உதவியுடன் நடந்தேன்.

பிறகு ஒரு வருடம் ஆகும் முன்னால்முன்னால்
கால் இடறி விழுந்து மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை
செய்தனர்.
மீண்டும் ஒரு வருடத்துக்கு பின்னர்
நடக்கும்போது கால் வளைவு ஏற்பட்டதால்
மூன்றாவதாக அறுவைசிகிட்சை
செய்யப்பட்டது.

இப்போது மூன்றாவது அறுவைசிகிட்சை முடிந்து
2 வருடங்கள் கழிந்த நிலையில் மெல்ல மெல்ல நடக்கிறேன்...

விபத்தின் மூலம் கால் 1¼ அங்குலம்
உயரம் குறைந்ததால்....
உயரத்தை அதிகப்படுத்த மீண்டும் ஒரு
அறுவைசிகிட்சை செய்ய நேரலாம்...


விபத்துக்கு பின் கிடைத்த ஓய்வு
நாட்களில் 
எனது முதல் முதலாளியின் ஆசீர்வாதத்தை
முறியடிக்க அந்த இறைவன் அருள்
புரிந்தார்...
அவருக்குத் தெரியாத வேலைகளை கூட
கற்றுக்கொண்டேன்.


இனி எப்படி இந்த கவிதைகள் என்ற பெயரில் கிறுக்கல்கள் எழுதினேன்,
எப்படி இந்த தளம் உருவானது என்பதை 
இதோ இந்த இணைப்பில் சொல்கிறேன்...


👇👇👇👇👇
இத்தளத்தை பற்றி



என்னுடன் பேசிப் பழக நினைத்தால்

கைப்பேசி எண் : +919442128959

தொடருங்கள்....

****************************************************

20 கருத்துகள்:

  1. சோதனைகளில் சாதனைப் படைக்கும் தோழரே, வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம், வாழ்த்துக்கள் சாதனை படைத்தவருக்கு, நிச்சயம் உங்கள் துறையில் இன்னும் நீங்கள் பெரிய ஆளாக வந்து சாதிப்பீர்கள்,, அதற்கான சோதனையாக முன்பு நடந்தவை இருக்கட்டுமே,, இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ...
      சோதனை ஓரெழுத்து
      மாற்றினால் சாதனை...
      அந்த ஓரெழுத்தை மாற்ற
      முயற்சிக்கிறேன்.....

      நீக்கு
  3. தங்களது சரிதம் படித்தேன் எல்லோருடைய வாழ்விலும் இப்படிப் போன்ற நிலைகள் இருக்கத்தான் செய்கின்றது நண்பரே இனி நடப்பவை தங்களுக்கு நன்மையாகட்டும் வாழ்க நலம்.

    பதிலளிநீக்கு
  4. சோதனைகள் போகட்டும் . சாதனைகள ஆகட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நண்பரே
      இந்த சோதைனையிலும்
      வாழ்வதே நமது சாதனை...

      நீக்கு
  5. நினைத்தே பார்க்க முடியவில்லை ,உங்களுக்குள் இத்தனை சோகம் இருக்குமென்று !
    வலைப்பூவில் எழுதும் அளவுக்கு முன்னேறி இருக்கிறீர்கள் ,மேலும் சாதனைப் படைக்க வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே இது சோகம் அல்ல...
      நான் படிக்க வேண்டிய பாடம்...
      படித்துக் கொண்டே இருக்கிறேன்...
      வாழ்க்கை புத்தகத்தை...
      பக்கங்கள் நிறைவடையும் வரை
      படிக்க ஆசை...
      பாதியில் எழுத்துகள் தீர்ந்தால்
      அது அந்த இறைவன் செயலே....

      நீக்கு
  6. வெற்றி உன் கையில்... போராடு போராடு...

    பதிலளிநீக்கு
  7. அனுபவம் ஓர் சிறந்த ஆசான்
    வாழ்க்கைத் தங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறது
    வாழ்க்கைப் பாடத்தை நன்குதான் படித்துள்ளீர்கள் நண்பரே
    இனி முன்னேற்றம்தான்
    அயராது, தளராது உழையுங்கள்
    நாளை உலகம் உங்கள் கையில்

    தங்களின் அலைபேசி எண்ணைக் குறித்துக் கொண்டேன்
    பேசுவோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பரே....
      நாளை நமதே...

      அழையுங்கள் பேசலாம்,
      பழகலாம்...

      நீக்கு
  8. தங்கள்
    தன்னம்பிக்கைக்கு
    எனது
    பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு
  9. வாழ்க்கையே போராட்டம்தான் இருக்கும்வரை போராடுவோம்....

    பதிலளிநீக்கு
  10. யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை போராடுங்கள் வெற்றி பெறுங்கள்

    பதிலளிநீக்கு
  11. வாழ்த்துக்கள். தம்பி... இறைவன் என்றும் துணை இருப்பார். விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!