செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இப்படிக்கு என் உயிர்....

என்னுயிர் பிரிந்து போனது...

                  இப்போது என்னில் துடிப்பது

என்னவளின் உயிர் தான்...

                  இது அவளுக்கே தெரியாது...

தயவாய் யாரும் அவளிடம்

                  சொல்லிட வேண்டாம்...

என்னுயிர் பிரிந்தது தெரிந்தால்

                  அவள் உயிர் தாங்காது...

இப்படிக்கு என் உயிர்...

                  அவளின் நினைவுகள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

14 கருத்துகள்:

 1. இல்லை.. இல்லை..
  நான் சொல்ல மாட்டேன்..
  நன்றாக இருக்கின்றது..
  இருந்தாலும் -
  நான் சொல்ல மாட்டேன்!..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே...
   சொல்லவே வேண்டாம்...
   வருகைக்கும் கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே....

   நீக்கு
 2. நல்லா எழுதியிருக்கீங்க அஜய்! சொல்ல மாட்டோம்!!!!
  சரி என்ன அஜய் ஒரே காதல் தோல்விக்கவிதைகளாக இருக்கின்றதே. அனுபவமா இல்லை கற்பனைதானா?!!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சகோ....
   நான் எழுதுவது கவிதைகள்தானா....
   என எனக்கே சந்தேகம்தான்...
   இருந்தாலும் நான் எழுதுவது
   என் அனுபவம் கொஞ்சம்
   கற்பனைகள் கொஞ்சம் ....

   நீக்கு
 3. மன்னிச்சுக்குங்க பாஸ்.. நான் சொல்லிட்டேன். அவங்க வந்துகிட்டு இருக்காங்க.. கண்ணத் தொடச்சுக்குங்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிங்க பாஸ் .....

   நன்றி பாஸ் வருகைக்கும்
   கருத்துரைக்கும் நன்றி பாஸ்

   நீக்கு
 4. ஆஹா சொல்லா விட்டால் எனக்கு தலை வெடிச்சிடுமே.....?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லிடுங்க ஜி ஸ்ரீராம் நண்பர்
   சொல்லிட்டாராமே அப்புறம்
   சொல்லாமல் இருந்தால் எப்படி....

   நீக்கு


 5. சொன்னாலாவது... பிநிந்த உயிர் ஒன்று சேரட்டும் நண்பரே........

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆகட்டும் நண்பரே....
   வருகைக்கும் கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே....

   நீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!