ஞாயிறு, 1 மே, 2016

இத்தளத்தை பற்றி


வலையுலக சொந்தங்களுக்கு
பிரியமில்லாதவனின் 
பிரியமான
வணக்கங்கள்என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி விட்டேன்.

இனி இந்த தளத்தை எப்படி உருவாக்கினேன்
என்பதை கொஞ்சம் சொல்கிறேன்.


எனது விபத்துக்கு பின் பொழுதே போகாமல்
வெளியே பறந்து திரிந்த நான் ஒரு கூண்டில்
அடைபட்ட பறவையாகதான் இருந்தேன்.

அந்த நேரம்தான் 2013 ல் டிசம்பர் மாதம்
சமூக வலைத்தளமாகிய முகநூலில் 
ஒரு கணக்கை உருவாக்கினேன்.

அங்கே நண்பர்கள் பதிவின் மூலம்
கவிதைகள் கொஞ்சம் கொஞ்சம்  வாசிப்பேன்.

பிறகு கூகுளில் காதல் கவிதைகள் தேடி
பார்த்து படித்து வந்தேன்.

அங்கே எனக்கு அறிமுகமானது 
தமிழ் கவிதைகள் என்று A.P.தினேஷ் குமாரின் தளம்.

அங்கே நிறைய கவிதைகள் படித்து அந்த
தளத்திலே நான் முதல் முதலாய் ஒரு
கவிதை என்ற பெயரில் ஒரு கிறுக்கலை
அனுப்பி வைத்தேன்.

அவரது தளத்திலே அதை வெளியிட்டார்.
நான் கிறுக்கிய முதல் கிறுக்கல்


அதன் பிறகு ஏன் நாமே கவிதைகள்
எழுத கூடாது என்று நினைத்தேன்...

கற்பனை கவிதைகள் என்று பல 
கிறுக்கல்களை கிறுக்கி முகநூலிலே
நண்பர்களிடம் பகிர்ந்து கருத்துகளும்
விருப்பங்களும் வாங்கினேன்...

அங்கே நான் எழுதிய கிறுக்கல்களை
Copy ,Paste செய்து வேறு நண்பர்கள்
பகிர்ந்தனர்.

அது எனக்கு பிடிக்கவில்லை.

அதனால் A.P.தினேஷ் குமார் மாதிரி
ஒரு தளம் அமைத்து கவிதைகளை
பகிரலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அப்போது என்னிடம் இருந்தது
நோக்கியா C2 என்ற மாடல் கைப்பேசிதான்.

பிறகு 2014 செப்டம்பர் மாதம் எனக்கு
ஒரு ஆன்ட்ரைடு கைப்பேசி வாங்கித்தந்தாங்க.

அதன் மூலமாக புகைப்படங்களில் கவிதைகள்
கிறுக்கி முகநூலில் தான் பகிர்ந்தேன்.

பிறகுதான் 2015 ல் நவம்பர் மாதம்
A.P.திதினேஷ் குமார் நண்பரின்
தளத்திற்கு சென்றேன்..

அங்கே நான் கிறுக்கிய கவிதைக்கு 
நண்பர் திண்டுக்கல் தனபாலன் 
கருத்துரை தெரிவித்திருந்ததை பார்த்தேன்.
அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலனின்
தளத்தின் பதிவுகளை கொஞ்சம் படித்தேன்.

எனது கைப்பேசியின் திரை முழுவதும்
எனது கண்கள் மேய்ந்தது.
எங்கேயாவது Create Blog இருக்கிறதா என்று.

கைப்பேசி திரையின் ஒரு மூலையில்
இருந்தது Create Blog என்று இருந்தது.

Ajai Sunilkar Joseph Kavithaigal என்று
துவங்கினேன்.
பிறகு பெயர் மாற்றம் செய்தேன்.
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள் என்று...

அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன்
தனது தளத்தில் கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...
என்ற பதிவில் அருமை நண்பர் கில்லர்ஜி யை
சொல்லி இருந்தார்...

அந்த நேரம்தான் நண்பர் கில்லர்ஜி யின் 
பதிவுகள் கொஞ்சம் படித்தேன்...

அவரது பதிவுகளில் சில என்னுடன்
பேசுவதும் உணர்ந்தேன்.

அப்போது எனக்கு கருத்துரை இடத் தெரியாமல்
கருத்துரை இட்டதுக்கு மேல் இடுவேன்.

நண்பர் கில்லர்ஜி யை தொடர்ந்தேன்
அவரது பதிவுகளுக்கு தொடர்ந்து வருவேன்
எனக்கு தெரிந்தது போலவே கருத்துரை இடுவேன்.

நண்பர் கில்லர்ஜி அவரது பதிவை தொட்டவர்களையே விடமாட்டார்.
அவரை தொடர்ந்தால் விடுவாரா...!
என்னையும் தொடர்ந்தார்.

அருமை நண்பர் கில்லர்ஜி அவரது
தளத்தில் பத்து முத்துக்களில் 
என்னையும் ஒருவனாக அறிமுகம் செய்தார்.
இதோ பதிவின் இணைப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துவீரே...


நண்பர் கில்லர்ஜி அறிமுகம் செய்ததால்
இந்தத்தளம் உங்கள் பார்வையில் சீக்கிரம்
கிடைத்து விட்டது...

அன்பு நண்பர் கில்லர்ஜி க்கு என் மனமார்ந்த
நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

                                                    இப்படிதாங்க இந்த தளம் உருவானது.
இதையும் ஒரு பதிவாக தந்து உங்களை வெறுப்பேற்றியிருந்தால் தயவாய் மன்னிக்கவும்.

25 கருத்துகள்:

 1. உங்கள் இலக்கியப் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் கவிதைகள்...

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள். இதன் முதல் பகுதியை நான் இன்னமும் படிக்கவில்லை. பின்னர் படிக்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே....
   முதல் பகுதியை முடிந்தால்
   படித்து கருத்துரை தாருங்கள்...
   உற்சாகம் கிடைக்கும் எனக்கு.

   நீக்கு
 4. மேலும் சிறப்புற்று வளர்க..
  அன்பின் நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 5. நீங்களாகவே பிளாக் உருவாக்கி விட்டீர்களா ,உங்க ஆர்வம் வியக்க வைக்கிறது !மேலும் வளர வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜி இவராவது ப்ளாக் என்று தெரிந்து உருவாக்கி இருக்கின்றார் நான் என்ன வென்றே தெரியாமல் உருவாக்கியவன் உண்மை.

   நீக்கு
  2. பகவான்ஜி நண்பருக்கு நன்றிகள்....
   எனது ஆர்வம் தெரிந்தே வந்தது.
   ஆனால்...
   கில்லர்ஜி நண்பர் சொன்னதுதான்
   வியப்பான விஷ(ய)ம்...

   நீக்கு
 6. ம்...ம்.. என்னைப்பற்றிய பில்டப் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கூ...... இருப்பினும் நன்றி தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள் எமது வருகையும் தொடரும்.... ஆனால் உங்களது பதிவுக்கு மட்டும் நான் முதலில் வரும் சந்தர்ப்பம் கிடைப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே இதில் பில்டப் ஏதுமில்லை...
   தாங்கள் சொன்னதைதான் நானும் சொன்னேன்...
   நண்பரே நான் காலையில் பதிவுகள் இடுவேன்.
   இல்லை என்றால் இரவு பத்து மணிக்கு மேலாக
   பதிவுகளை இடுவேன்...
   நான் இப்போது பள்ளிக்கூட சீருடைகள் தைப்பதற்கு
   வருகை அதிகமானதால் அடிக்கடி பின்னூட்டங்களுக்கு
   பதில் மட்டுமே கொடுக்கிறேன்...

   நீக்கு
 7. வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் தளம் மென்மேலும் சிறக்கும்! கில்லர்ஜி, தினேஷ்குமார், திண்டுக்கல் தன்பாலன் போன்ற நல்ல உள்ளங்களின் பாராட்டுக்களை பெற்ற நீங்கள் மென்மேலும் வளர்வீர்கள்! நானும் உங்கள் தளத்தில் இணைந்து கொள்கின்றேன். என் தளத்தில் உங்கள் பின்னூட்டங்களை படித்து உடனே உங்கள் தளத்திற்கு வர நினைத்தாலும் என்னுடைய அலுவல்களால் உடனே தொடர முடியவில்லை! இனி தொடர்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு