ஞாயிறு, 15 மே, 2016

உள்ளம் கொள்ளை கொண்டவள்...

உள்ளம் கொள்ளை கொண்டவள்...


அவளது வெட்கம் தந்து 
                            எந்தன் உள்ளம் 
கொள்ளை கொண்டாள்...
                            வெள்ளை உள்ளம் 
தந்து கவிதை ஒன்றை 
                            படைக்க கேட்டாள்...
காதல் தந்த கவிதை 
                            தேவதையே உன்னை 
இழுத்தணைத்து உதட்டோரம் 
                            ஒரு கவிதை
படைக்கவா என்றேன்...
                            வெட்கத்தால் கண்களை 
மூடி எந்தன் மார்பில் 
                            முகத்தை புதைத்துக் 
கொண்டவள் அங்கே
                            என் இதயம் சொன்ன 
கவிதைகளை கேட்டிருப்பாளா...!Ajai Sunillar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

16 கருத்துகள்:

 1. கேட்டிருப்பாங்க.... எப்பவுமே காதல் கவிதைகள் மட்டும்தானா அஜய்?

  :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நண்பரே காதல் கவிதைகள் மட்டும் அல்ல
   அவ்வப்போது வேறு கவிதைகளும் பதிவிடுவேன்...

   நீக்கு
 2. கேட்டிருப்பாள் உங்கள் இதயக்கவிதையை, நன்று

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி ஐயா...
   கேட்டிருந்தாள் நல்லதுதான்..

   நீக்கு
 3. தங்கள் உள்ளம் கொள்ளை கொண்டவரை கைது செய்யுங்கள்.......

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மார்பில் கைதாகி விட்டாளே
   கவிதைகள் கேட்பதற்கு...

   நீக்கு
 4. காதல் தேவதை கண்டிப்பாக உங்கள் இதயம் சொன்ன கவிதைகளை கேட்டு மகிழ்ந்திருப்பாள்! அருமை!

  பதிலளிநீக்கு

உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து
கரையோரம் சிதறிய கவிதைகளை வந்து
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல நண்பர்களே...!!!