புதன், 4 மே, 2016

முகநூலில் அவளின் அகநூல்

முகநூலில் அவளின் அகநூல்





முகநூலில் அகங்கள் பரிமாறியே

என்னுள்ளத்தில் மலர்ந்ததே காதல்...

இணையத்திலோ இதயங்கள் பேச...

ஒரு முறையாவது நேரில் 

சந்திக்கலாமா என்று சிந்திக்க...

புகைப்படங்களின் பரிமாற்றத்தால்

சிந்தித்த சந்திப்பு கைநழுவ...

இதயங்களுக்கு இதமான நிழல் 

தரும் விருட்சமாய் காதல் வளர...

அந்த நிழலில் தானே அவளை

தேடி தவம் கிடக்கின்றேன்...

அவளுக்கு கணவனாகும் வரம் வேண்டி...

என்னுள் எனக்காய் தவம் கிடக்கும் 

தேவதை அவள்தான் வருவாளா...!

வந்து வரம்தான் அருள்வாளா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்






       




18 கருத்துகள்:

  1. இத்தனை அருமையாய் கவிதை எழுதிய பின்னும்
    அவள் வராமலா போய் விடுவாள்!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா நண்பரின் ஆறுதலான
      கருத்துரையால் மகிழ்ந்தேன் நண்பரே...

      நீக்கு
  2. தேவதை வருவாள், நன்று, புகைப்படத்தில் கவிதை வரிகள் பதிவது எவ்வாறு, தயவு செய்து விளக்க கோருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரே நன்றி ....
      புகைப்படத்தில் கவிதை பதிப்பது...
      நான் மொபைலில் மட்டுமே பதிக்கிறேன்.
      கணினியில் Photoshop ல் பதிக்கலாம்
      என்று நண்பர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன்.

      நீக்கு
  3. கண்டிப்பாக வர சாத்தியம் உண்டு ஆவணி பிறக்கட்டும்... டும்... டும்...

    பதிலளிநீக்கு
  4. வரம் தரட்டும் தேவி அவள் யாரோ வா தலைவன் இவன் என்றுவாழ்த்துப்பாடு கிளியே)))

    பதிலளிநீக்கு
  5. அவள் வருவாளா? வரம் தருவாளா?

    வருவார்... தருவார்!

    பதிலளிநீக்கு
  6. காதல் வெல்லட்டும் பெற்றோரின் ஆசியுடன்😍

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "பெற்றோரின் ஆசியுடன் வெல்லதான் ஆசை நண்பரே"

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருவாள் என்ற நம்பிக்கை இருக்கிறது நண்பரே

      நீக்கு
  8. உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!