புதன், 18 மே, 2016

மீண்டும் மூழ்கடிப்பாளா...!

மீண்டும் மூழ்டிப்பாளா...!









வளின் அழகு விழிகள் கண்டு
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்திட்ட நானும் எழுந்திட
நினைத்தும் மூழ்கடித்தாளே...
அவள் காதல் கரம் தந்து
என்னை தூக்கிடுவாளா...!
இல்லை அவளுக்குள்ளே
மீண்டும் மூழ்கடிப்பாளா...!
மூழ்கிக் கிடந்தும் கதிரவன் கண்ட
தாமரையாய் மலர்ந்திடுவேனா...!
இல்லை அவளின் நிராகரிப்பால்
அவளுள்ளே மட்கிப் போவேனா...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத்  துளிகள்

28 கருத்துகள்:

  1. காதல் கரம் தராவிட்டாலும் பரவாயில்லை..
    நீந்திக் கரையேறலாமே!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் நண்பரே ...
      நீச்சல் கற்றுக் கொண்டேன்..

      நீக்கு
  2. காதலில் நன்றாகவே நீந்தக் கற்றுக் கொண்டுவிட்டீர்களோ?!!!

    பதிலளிநீக்கு
  3. இப்படியெல்லாம் எழுதி விட்டு பிரியமில்லாதவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டியது!

    பதிலளிநீக்கு
  4. ரசித்தேன் எதற்கும் இடுப்பில் கயிறு கட்டிக்கொள்க...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் அவளது கழுத்தில் கட்டவே துடிக்கிறேன் நட்பரே

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்கள் புது வருகையால் மகிழ்ச்சியே..
      தொடர்கிறேன்

      நீக்கு
  6. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலம் கண்டிப்பாக பதில் சொல்லும்
      ஆனால் அவள் பதில்தான் வெல்லும்

      நீக்கு
  7. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துரைக்கும்
      நன்றிகள் நண்பரே....

      நீக்கு
  8. காதலில் மூழ்கிவிட்டீங்க முத்தோடு வெளிவர வாழ்த்துக்கள்))))

    பதிலளிநீக்கு
  9. காதல் கவிதை அருமை...அஜய்

    முன்பு பல முறை வந்தும் கருத்து இடமுடியவில்லை. கருத்துப் பொட்டி திறக்க வில்லை. இன்று திறந்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோ...
      தங்கள்
      வருகைக்கும்,
      கருத்துரைக்கும்...

      நீக்கு
  10. காதலில் மூழ்கியவனுக்கு கரையேற்றம்தான் ஏது? கொண்டாட்டம்தான்! அருமை!

    பதிலளிநீக்கு
  11. தாமரையாய் மாற வாழ்த்துகள், நன்று

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!