செவ்வாய், 10 மே, 2016

தவத்தின் பலன் பொய்யூரா...?

தவத்தின் பலன் பொய்யூரா...?பத்து மாதம் தவமிருந்தாள்

வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...

அவளின் உள்ளே தவமிருந்தேன்

எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...

தவத்தின் பலனாய் என்னை கண்டு

கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...

மழலை மொழியாய் மொழிந்தேன்

நானும் அவளின் முகத்தை கண்டு...

பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...

அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...

என்னை அவளின் மகன் என்று...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின்  கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

18 கருத்துகள்:

 1. வளமான வரிகள் நன்று, தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 2. தாய்மையை போற்றிய வரிகள் நன்று நண்பரே

  பதிலளிநீக்கு
 3. அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...

  என்னை அவளின் மகன் என்று... அருமை...

  பதிலளிநீக்கு
 4. தாய்மையை போற்றிய கவிதை அற்புதம் அஜய்.

  பதிலளிநீக்கு
 5. மேலூருக்கு போகும் வரை இந்த பொய்யூரில் வாழ்ந்துதானே ஆகணும் :)

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!