வியாழன், 23 ஜூன், 2016

வெந்து,நொந்த வஞ்சிமலர்...

வெந்து,நொந்த வஞ்சிமலர்...

ஞ்சி மலர் இவள் இருக்க,
இவளை சுற்றி பலர் இருக்க...
காதல் காற்று இவளை வருட,
இவள் கண்களோ கயவனை தேட...
யாரோ ஒருவன் இவள் பின்னே,
காதலை கொடுத்தாள் அவன் முன்னே...
சிலபல நாள் காதலும் வீச,
ஓர்நாள் கயவனும் காமம் பேச...
காதலும் இதுவென புரிந்தவளாய்,
கயவனை விரைவாய் பிரிந்தவளாய்...
காமக் காதல் கொண்டவனோ,
கிட்டாத கோபத்தில் நொந்தவனாய்...
வேதியியல் ஆய்வகம் சென்றானோ...?
வஞ்சி முகத்தில் அமிலம் வீசிடத்தான்...
இவள் முகம் அமிலத்தில் வெந்திட,
அகமோ நினைவினால் நொந்திட...
கண்ணீர்த் துளிகளும் தானாய் வந்திட,
வஞ்சி போனாளே மரணத்தை தேடிட...
இவள் அங்கே கண்டது மரணமோ...?
இல்லை உண்மைக் காதலன் மனமோ...?
இவனே இவளைக் காப்பாற்றி 
உண்மையாய் வாழ்ந்திட துடித்தவனோ...!20 கருத்துகள்:

 1. வெந்து நொந்து தேடுதல் காரணமாகத்தான் இணையத்தில் தங்களை காணமுடியவில்லையோ..... நலமே விளைக...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாளைய பதிவு உங்களுக்காகவே நண்பரே....
   கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றி சொல்லி தீராது
   இருந்தாலும் நன்றி நண்பரே....

   நீக்கு
 2. பதில்கள்
  1. சந்தங்கள் புதுமையாக இருந்தாலும்...
   நம் பந்தங்களும் புதுமைதானே...!

   நீக்கு
 3. வஞ்சி மலர்கள் கருகாமல்.....கருக்க நினைக்காமல்....காலம் மாறட்டும்....

  வஞ்சி மலருக்கு வாஞ்சையோடு கவிதை...அருமை

  பதிலளிநீக்கு
 4. வஞ்சியின் நெஞ்சைத் தொடும் வரிகள் நன்று

  பதிலளிநீக்கு
 5. புதிய பாணியில் சற்றே பெரிய கவிதை. நன்று. எங்கே கொஞ்ச நாளாக ஆளைக் காணோம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துரைக்கும்
   நன்றி நண்பரே...!!!
   தையல் பணி செய்வதால்
   பள்ளிக்கூட சீருடைகள் தைக்கும்
   பணிகள் தீவிரப்படுத்தப் பட்டதால்
   இந்தப்பக்கம் வர முடியவில்லை...

   நீக்கு
 6. தங்களைக் காணாதது மனதிற்கு வருத்தமாக இருந்தது...

  தங்கள் பணி மேலும் சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 7. நல்ல கவிதை. என்னதான் இருந்தாலும் அமிலம் வீசுவது காட்டுமிராண்டித் தனம்.

  மீண்டும் உங்கள் பக்கத்தில் பதிவு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!