ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

வெண்மதி Tailors O/o Ajai Sunilkar Joseph

வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph


அன்பான வலையுலக சொந்தங்களை இந்த 
பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு
சந்தோஷம்தான்....!
ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு
ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,
அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்....

ஏற்கனவே ஒரு பதிவில்
என்னை பற்றி கொஞ்சம்
சொல்லி இருக்கிறேன்.

அதில் சொன்னபடி எல்லாம் வல்ல 
இறைவன் அருளால் தையல் வேலையை
ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்.

6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில்
நான் உழைத்து பிழைக்கவே இந்த
வெண்மதி எனக்காக உதித்தாள்.
நான் இந்த வெண்மதிக்கு முதலாளி 
ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை
விட்டு ரொம்ப தூரம் போன காரணம் கூட.

அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை
ஆரம்பித்தேன் இறைவன் அருளால் 
அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் 
என்பதாலும்,என்னவள் பெயரரும்
சேர வேண்டும் என்பதாலும் தான்
இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்.

இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம்
கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்.மன்னிக்கவும் சொந்தமாக நான் தொழில்
துவங்கிய காரணத்தால் உங்கள் தளங்களுக்கு
என்னால் வரமுடியவில்லை என்பதை
வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...

நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது 
மட்டும்தான் சந்தோஷம்.


இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி

(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார்
அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)


இதோ பிரியமில்லாதவன்11 கருத்துகள்:

 1. மீண்டும் வருகை தந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி, பதிவுகளை வெளியிடுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேலைகள் அதிகமாக இருப்பதால் வலைப்பூ பக்கம் வரவே தோன்றவில்லை,
   இருந்தாலும் முயற்சி செய்கிறேன்,
   தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே.

   நீக்கு
 2. வணக்கம் நண்பரே முதலில் பிழைப்பு பிறகு வலைப்பூ ஆகவே தொழிலை கவனமாக கையாண்டு மென்மேலும் வளர்ச்சி பெற இறைவனின் ஆசி உண்டாகட்டும்.

  எம்மையும் நினைவில் வைத்திருந்தமைக்கு நன்றி.
  சமீபத்தில், நானும், வில்லங்கத்தாரும் தங்களைக் காணவில்லையே எண்று பேசிக்கொண்டு இருந்தோம் வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி நண்பரே தங்களின் கருத்துரைக்கும்,வருகைக்கும்

   என்னை நினைவில் வைத்திருந்தமைக்கு
   மிக்க மகிழ்ச்சியே...

   நீக்கு
 3. வாழ்த்துக்கள்! பிழைப்புக்கு பின்பே எழுத்து! நேரம் கிடைக்கையில் எழுதுங்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 4. முதலில் பி[உ]ழைப்பு. அதன் பிறகு தான் பதிவெல்லாம்.

  உங்கள் வாழ்வில் வெற்றியடைய வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு
 6. வலைத்தளத்தின் பக்கம் வருவதில்லையா?

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!