வெள்ளி, 14 அக்டோபர், 2016

சோறு போட்ட மண்

சோறு போட்ட மண்




ஞ்சை,புஞ்சை
              என்று விளைந்த
எங்கள் மண்ணின்
              நெஞ்சை பிளந்து
நஞ்சு விதைக்கும் 
              திட்டங்கள் வேண்டாம்.
எம் அரசே...
              சோறு போட்ட மண்ணை
கூறு போடுவதுதான் ஏனோ...!
              மூன்று வேளை சோறு
தின்றும் போட்டாயோ கூறு...!!!



Ajai Sunilkar Joseph







13 கருத்துகள்:

  1. சவுக்கடியான வார்த்தைகள் நண்பரே நிச்சயமாக அரசு(சி)க்கு வலிக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் உடனடியான
      கருத்துரையால் மகிழ்ந்தேன்....

      அரசுக்கு வலிக்க வேண்டும்
      என்பதற்காகவே இப்பதிவு
      என்றாவது ஒருநாள் வலிக்கும்...

      இப்போதுதான் நண்பரே
      வலைத்தளத்தில் வர நேரம்
      கிடைத்தது....
      மீண்டும் வலைத்தளத்தில்
      புதிதாக உலா வருவேன்
      நண்பர்களின் அனைத்து
      தளங்களிலும்.........

      நீக்கு
  2. கூறு கெட்ட அரசுக்கு இது புரியுமா :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கே புரிவது...???
      புரிந்தால் நம் நாடு சொர்கம் ஆகுமே...

      நீக்கு
  3. நல்ல கவிதை. புரிய வேண்டுபவர்களுக்கு புரிய வேண்டும்....

    பதிலளிநீக்கு
  4. விவசாயத்தை மறந்து விட்டு விண்ணில் பறப்பதுதான் வளர்ச்சி என்கிறார்கள். நன்று

    பதிலளிநீக்கு
  5. அருமையான வரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  6. யதார்த்தம் உங்களுக்கு புரிகிறது... மற்றவர்க்கு ?

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!