வெள்ளி, 11 நவம்பர், 2016

அவள் வரவை எதிர்நோக்கி...

அவள் வரவை எதிர்நோக்கி...

வீசும் காற்றாய் வந்து
என் மூச்சாய் கலந்து
என்னிதயம் சேர்ந்தவளே...!
எங்கேதான் இருந்தாயோ...!
எனக்கெனதான் பிறந்தாயோ...!
நீ விட்டுச் சென்ற உந்தன்
சுவாசம் என்னுள் வந்து 
உன்னை எனக்கானவள் என்று 
உணர்த்துவது மெய்யா...? பொய்யா...?
புரியாத நானும் உன் வரவை 
எதிர்நோக்கி காத்திருக்கிறேன் 
அறிவாயா...?

பிரியமில்லாதவன் 
Ajai Sunilkar Joseph


 பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்8 கருத்துகள்:

 1. நிச்சயம் அந்த தேவதை வருவாள் கலக்கம் வேண்டாம் கலங்கரை விளக்கம் அருகே காத்திருக்கவும்.

  திடீரென....காணாமல் போய் விடுகின்றீர்களே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காத்திருப்புத் தொடரும் நண்பரே....

   இனி காணாமல் போக மாட்டேன்
   .
   வலையுலகில் வலம் வருவேன்.

   நீக்கு
 2. சீக்கிரமே வரட்டும். வந்து வரம் தரட்டும். லாங் டைம் நோ ஸீ ... வொய்?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவள் வரும்வரை காத்திருப்பும் தொடரும்....


   தொழிலில் கொஞ்சம் கவனம் செலுத்தினேன் நண்பரே....
   காரணம் அதேதான் வேறெதும் இல்லை...

   நீக்கு
 3. அருமையான வரிகள்

  உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்
  https://plus.google.com/u/0/communities/110989462720435185590

  பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!