சனி, 12 நவம்பர், 2016

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...

எட்டுத் திசையிலும் தேடுகிறேன்...


ண் முன்னே தோன்றி,
காற்றோடு கலந்து,
மீண்டும் தோன்றி,
கனவாய் கலைந்து...
நிஜம் கொண்டு என்
நினைவில் நிலைத்தவளே...!
நின் மூவேழு வயதுவரை
எங்கேதான் இருந்தாயோ..?
நான் பார்வையற்றிருந்தேன்,
பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...?
திக்குத் திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன் தேவதையே
உந்தன் வரவை எதிர்பார்த்து...Ajai Sunilkar Josephபிரியமில்லாதவன்

6 கருத்துகள்: