ஞாயிறு, 13 நவம்பர், 2016

உரிமையானவளே...

உரிமையானவளே...


ண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே 
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே 
உறங்க மறுக்கிறதென் 
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!Ajai Sunilkar Josephபிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

6 கருத்துகள்:

 1. உயிரோட்டமான வரிகள் உண்மையே நண்பரே

  பதிலளிநீக்கு
 2. என்னது உரிமையானவளை மறந்து போனீங்களாா.........?????????

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மறந்து போகவில்லை நண்பரே...

   உறங்க மறக்கிறேன் அவ்வளவுதான்....

   நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!