திங்கள், 29 பிப்ரவரி, 2016

முத்தழகு மழலை.....

பல துளி உதிரம்

                  சிறு துளியாகி...

கருப்பை சென்று...

                  கர்ப்பம் கொண்டு...

மாதங்கள் சில

                  மூச்சடக்கி பெத்தெடுத்த

முத்தழகு நீயோ...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்....

மத்தாப்பூ சிரிப்புடனே...

               மல்லிப்பூ மணத்துடனே...

என் மார்பில் சாய்ந்திடவே...

                ஏக்கங் கொண்ட பூங்கொடியே...

சாய்ந்து விட்டேன் மஞ்சத்தில்...

                  சாய்ந்து கொள்ளடி நெஞ்சத்தில்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 24 பிப்ரவரி, 2016

நம் தமிழ்...

பெற்றது தமிழ் அன்னை...

கற்றது தமிழ் உன்னை...

வளர்த்தது தமிழ் என்னை...

வாழ்த்தும் தமிழ் நம்மை...

உயர்த்தும் தமிழ் உண்மை...

உணர்வோம் தமிழ் அன்பை...

பகிர்வோம் தமிழ் பெருமை...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

இணையத்தில் தமிழால் இணைவோம்....

இணையம் இல்லை என்றால்

இதயம் இல்லாமை போல

இன்றைய மனிதனின் எண்ணம்...

கைப்பேசியில் இணைய தளம்

கையில் பேசும் இதயம் போல...

இணையம் இல்லாமல் போனால்

கணையம் இழந்தவனாக வருத்தம்...

தொட்டால் தொடுதிரையில் இணையம்...

உன்னால் என்னால் வளரும் இணையம்...

வாடா நண்பா தமிழால் இணைவோம்...

உன்னால் என்னால் வளரும் இணையத்தில்...

தமிழை வளர்ப்போம் நம் இதயத்தில்...

இணையத்தை வாழ வைக்கும் நண்பா...

இதயத்தில் தமிழையும் வாழ வைப்போம்...

Ajai Sunilkar Joseph

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 22 பிப்ரவரி, 2016

வேர்வைத் துளி

இயற்கை உர

                வரிசையில் உன்

வேர்வைத் துளிகளும்

                 சேர்க்கப் பட்டதோ...!

நெற்கதிர்கள் இத்தனை

                 செழிப்பாக வளர்ந்து

நிற்க்கின்றதே உன்

                 வேர்வைத் துளிகளில்...

Ajai Sunilkar Joseph

ிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

துளிர்க்கும் நினைவுகள்...

வெட்ட வெட்ட துளிர்க்கும்

அதிசய விருட்சங்களாய்....

                                     அவள் நினைவுகள்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 20 பிப்ரவரி, 2016

பிரியமில்லாதவனின் கண்கள்

பிரியமில்லாதவனின்
கண்கள் உதிர்த்த
கண்ணீர்த் துளிகள்
காகிதத்தில் கவிதைத்
துளிகள் ஆனதோ...!

Ajai Sunilkar Joseph

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும் விழிக்கமாட்டாயோ...!!!

குடி குடி மனிதா உன்

குடி கெடும்வரை குடி...

குடித்து நீ தள்ளாட

குடியால் உன் குடி தள்ளாட...

என்னை நீ குடித்து முடிக்க

உன் குடியை நான் கெடுத்து முடிக்க...

உன் வருமானம் சாராயம் தேடி

உன் தன்மானம் அவமானம் தேடி...

உன்னால் அரசின் குடி வளர

பின்னால் உன் குடும்பம் குடி தளர...

குடித்து உன் குடல் வேக

குடியால் உன் குடி மூழ்க...

குடி குடியென்று நீ குடி தேடி

பொண்டாட்டி தாலி அடகுக்கடை தேடி...

குடி பொருள் விற்றுக் குடி

உன்னை கல்லறைக்குடி வைக்கக்குடி...

குடி குப்பி சொல்லும் குறி சொல்லை கேட்டாலும்

உன் குடியை வாழ வைக்க மாட்டாயோ....!!!

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

மண்ணுக்கும் பெண்ணுக்கும் நடுவில் மலரொன்று....

பெண்ணின் கூந்தலில்

                 உதிர்ந்த மலரொன்று

மண்ணிடம் யாசித்தது...

                  உன்னில் விதைகிறேன்

நீயாவது என்னை

                    பிளைக்க விடு என்று...

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

அவள் நினைவுகள் கார்முகிலோ...!

உன் நினைவென்ன

கார் முகில்களோ...!

என் கண்களின் ஓரம்

கண்ணீர்த் துளிகள் ...!



பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph

புதன், 17 பிப்ரவரி, 2016

உன்னைத் தேடி...

தேடி நான் கண்ட

            பூலோக தேவதை நீயடி...

தொலையாத உன்னை

            நான் ஏன் தேடுகிறேன்...

புரியவில்லையா...!

            உன் விழிகளை என்

விழிகள் பார்த்த நொடியிலேயே

            என்னை உன்னுள்

தொலைத்து விட்டேன்...

            உன்னைத் தேடி

என்னை கண்டடையவே

            உன்னைத் தேடுகிறேன்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

திங்கள், 15 பிப்ரவரி, 2016

உனக்காக வாழ வேண்டும்...

நூறு ஆண்டுகள்

வாழ வேண்டும்

என்ற ஆசை எனக்கு

துளியளவும் இல்லை...

அன்பான உனக்காக

ஒரு நாளாவது வாழ

வேண்டும் உயிரே...

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

கற்பனைகள் சூழ்ந்த தீவு என்னிதயம்...

கற்பனை கவிதைகள் எழுதி
கற்பனையின் விழியோரம்
விழித்திருந்து விழுந்து கிடந்தேன்...
அந்த வழியோரம் வந்த வாசகி ஒருத்தி...
கற்பனைகளை ரசித்து சென்று...
என்னுள் வசிக்க வேண்டுமென்று...
என்னிடம் யாசித்து சென்றாள் காதலை...
என்னிதயம்தான் கற்பனைகளால்
சூழப்பட்ட தீவு போலாயிற்றே...
அவளை நிஜமென எப்படி
நம்பினேனோ தெரியவில்லை...
என் கற்பனைகளை கலைத்து விட்டு
எப்படி என்னுள் குடியேறினாள்
என்பதும் புரியவில்லை....

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

இம்முகூர்த்த நாள்தானோ காதலர் தினம்....!

என்னுள் காதல் புகுந்து....
அது அவளுள் சென்று...
நித்தம் எங்களை பித்தம் செய்ய...
ஓர் நாள் எங்கள் கண்கள் பேச...
கண்களின் பேச்சு அனுதினம் தொடர...
தன்னந் தனியாய் நான் சிரிக்க...
இந்நோய் சென்று அவளை பிடிக்க...
இருவரும் அடிக்கடி சந்திக்க...
இவர் மனம் அடிக்கடி சிந்திக்க...
இரு மனங்களும் காதல் சிந்தி...
செவ்வாய் மலர்ந்து காதல் பேச...
செவ்விதழ் பிரிந்து மகரந்தம் சேர்ந்து...
ஒர் முத்தம் பிறக்கும் இம்முகூர்த்த
நாள்தானோ காதலர் தினம்...

Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

வியாழன், 11 பிப்ரவரி, 2016

அவள் வலி தாங்க மாட்டாளே...

என்னைத் தேடி வந்த
தேவதையை தேள்
போல கொட்டி விட்டேன்...
எனக்கும் வலிக்கிறது...
அவள் வலிகளை தாங்க
மாட்டாள் என்பதால்...

Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

நான் இப்படிதாங்க....

நான் நூலகம் சென்றதில்லை...
புத்தகங்கள் படித்ததில்லை...
அன்பானவர்களை நூலகமாக்கி
அவர்களின் அனுபவங்களை
புத்தகங்களாக்கி படிக்கிறேன்...

Ajai Sunilkar Joseph

புதன், 10 பிப்ரவரி, 2016

தனிமையில் இனிமை... யார் இந்த பூலோக தேவதை...?

இந்த தேவதைக்கு தனிமையை 
வெறுக்கத் தெரியவில்லை...
அவன் கொடுத்தான் தனிமை
இவளுக்கு அதுதான் இனிமை...
அவனை அதிகமாக நினைப்பதால்...
அப்படி இருந்தாலும் இவள்
தனது கண்களில் ஏக்கத்துடனும்...
இதயத்தில் எதிர்பார்புடனும்...
தன்னவனுக்காக காத்திருக்கிறாளே 
யார் இந்த பூலோக தேவதை...?

Ajai Sunilkar Joseph

பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 6 பிப்ரவரி, 2016

வெட்க புன்னகை...!

என்னவளே உன்னை
பார்க்க ஆசைப் பட்டு
கண்களை மூடினேன்...
அங்கே கனவில் கூட
முகத்தை மறைத்துக்
கொண்டே வருகிறாய்...
வெட்க புன்னகையுடன்...!

-Ajai Sunilkar Joseph

ajaisunilkarjoseph.blogspot.com

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

அவள் மௌனம் ஓர் உளி

மௌனம் என்பது ஓர் உளி
அது ஏக்கம் என்ற சிற்பத்தை
செதுக்கி கொண்டே இருக்கும்...
உன் மௌனங்களும் சிறு
சிறு உளிகள் ஆனதோ...!
என் இதயத்தில் சின்ன சின்ன
ஏக்கங்களை சிற்பங்களாக
செதுக்கிக் கொண்டிருக்கிறதே...!

-Ajai Sunilkar Joseph
ajaisunilkarjoseph.blogspot.com

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

பொய்மை பேசும் வாய்மை தேவதை

உன்னிதழ்கள்
                பொய் பேசும்...
உன்னிமைகள்
                மை பூசும்....
பொய் பேசும்
                உன்னிதழ்களை ருசித்து...

மை பூசிய
                 உன்னிமைகளை ரசிக்கிறேன்...
இதழ்கள் இமைகள்
                 இவை இரண்டாலும்....
பொய்மை பேசும்
                 வாய்மை தேவதை நீதானடி...

-Ajai Sunilkar Joseph