வியாழன், 5 ஜனவரி, 2017

என்னுள்ளே குற்ற உணர்வுகள்....

என்னுள்ளே குற்ற உணர்வுகள்....ட்டிக்காத்த கற்பனைகள்
எல்லாம் என் இதயத்தில் 
கொழுந்துவிட்டு எரிகிறது,
இதயம் படபடக்க எந்தன்
நெஞ்சமோ துடிதுடிக்க,
இடைவெளிகள் இல்லாமல்
என்னையோ கொழுத்துகிறது,
அவள் மனதில் ஆசைகளை 
வளர்த்து விட்டு அதை 
நானே கொழுத்தி விட்டேனோ...!
அந்த குற்ற உணர்வுகள் என்னுள்
என்னை ரணங்களாய் கொல்கிறதே...!
மரத்து வாழத் தெரிந்த என்னையே
இப்படி சாகடித்தால்,
மறந்து கூட வாழத் தெரியாத
அவளை என்ன பாடு படுத்துமோ...!

By....Ajai Sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

8 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. ம்ம்ம் என்ன ஒரு நக்கல்...!!!
   நன்றி நண்பரே....
   வருகைக்கும், கருத்துரைக்கும்...

   நீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!