புதன், 25 ஜனவரி, 2017

உண்மை மறந்தேனடி...

உண்மை மறந்தேனடி...


வலையுலக சொந்தங்களுக்கு 
பிரியமான வணக்கங்கள்...

எனது நெடுநாள் "ஆசை"
இசையுடன் கவிதை வாசிக்க
வேண்டும் என்று,
ஆனால் அது இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
உங்கள் முன்னால்...
தவறுகள் இருந்தால் தாராளமாக
கருத்துரையுங்கள்...
ஊக்கப்படுத்த உங்கள் போல்

சொந்தங்கள் இங்கில்லை...


ண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே 
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே 
உறங்க மறுக்கிறதென் 
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!

By...Ajai Sunilkar Joseph


இதோ இசையுடன் கவிதை


காணொளி




கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 19 ஜனவரி, 2017

பிச்சு போட்ட நெஞ்சம்...

பிச்சு போட்ட நெஞ்சம்...


நீ வாழ்ந்த போன
இவனது நெஞ்சில் 
இன்னொருத்தி
வாழ்ந்து போக இவன் 
மனம் வாடகை வீடா...?
அப்படி செய்தால் 
நீ பிச்சு போட்ட 
எந்தன் நெஞ்சம் எச்சில் 
பட்டதென அறிந்தால் 
அதிலே அவள்தான் 
வாழ்வாளா...?

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 18 ஜனவரி, 2017

சிதைந்த கனவுகள்...

சிதைந்த கனவுகள்...


நீ என்னை உதறி
விட்ட பிறகும்,
உன் காலில் படிந்த 
தூசியாய் பிரிய
மறுக்கும் என்னை,
ஏனடி இந்த காதல்
கரையோரத்தில் 
எந்தன் நெஞ்சம்
கதற,கதற என் 
கனவுகளை சிதைத்து
கவிதைகளாக சிதற வைத்தாய்...!

By...Ajai Sunilkar Joseph



 கரையோரம் சிதறிய கவிதைகள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

புரிந்தாலும் பிரிவாயா...!

புரிந்தாலும் பிரிவாயா...!


ன் பெயரையே
              உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
              பிழிந்து என் 
காதலின்  உதிரத்தை 
              எடுத்தாயோ...!
என் இதயத்தை
              கொஞ்சம் வாசித்துப்
பாரடிப்  பாதகத்தி...
              அது யாசிக்கும் 
காதல் உனக்குப் புரியுமடி...!
               புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
               பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!

By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்     

சனி, 14 ஜனவரி, 2017

வந்தாள் தை மகள்...

வந்தாள் தை மகள்...


"தை" மகளே வந்தாய்
புத்தாடைக் கட்டி
புதிதாக வந்தாய்,
இன்பங்கள் பொங்க 
இனியவைத் தந்தாய்,
அன்புதான் பொங்க
ஆவலாய் வந்தாய்,
துயரங்கள் நீக்க
துணிவுடன் வந்தாய்,
மார்கழிப் பனியை
மாற்றிட வந்தாய்,
தமிழர் பண்பாட்டை
பண்பாகத் தந்தாய்,
தமிழெங்கும் பொங்க
சந்தோஷம் தந்தாய்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 12 ஜனவரி, 2017

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...

தூரமானதால் நெஞ்சம் பாரமானது...


வள் வந்த நேரம்,
இதயத்தின் ஓரம்,
துடிப்புகளின் வீரம்,
உள்ளுக்குள் பாரம்,
தந்தே போனாள் தூரம்,
பின்னர்...
                விழிகளின் ஓரம்,
இதயத்தின் ஈரம்,
காதலால் நொந்து,
கண்ணீராய் வந்து,
கன்னங்கள் குளிர்ந்து,
மண் மீது உதிர்ந்ததோ...!
By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள் 


புதன், 11 ஜனவரி, 2017

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...

ரசித்தால் பொய்யும் கவிதைதான்...


பொய் : 1


ன் பிரிவால் 
எனக்குத் துயரமில்லை,
பிரிந்தாலும் நீ
எனக்குத் தூரமில்லை,
சேர்க்கப்படாத நம்
காதல் பிரிக்கப்பட்டதால்,
என் நெஞ்சுக்குள்
ஒன்றும் பாரமில்லை...


By...Ajai Sunilkar Joseph



(பொய்கள் தொடரும்...)

கரையோரம் சிதறிய கவிதைகள் 

செவ்வாய், 10 ஜனவரி, 2017

பறிக்கப்பட்ட உரிமைகள்...

பறிக்கப்பட்ட உரிமைகள்...


கொடுக்கப்பட்ட உரிமைகள்
பறிக்கப்பட்ட போது மனதில்
வந்த வலிகள் என்னை
ரணங்களாய் கொன்று புதைக்கிறது...
இருந்தாலும்...
                       என்ன செய்வது உயிரே
வலிக்கேதும் உருவங்கள் 
கிடையாது அல்லவா...!
உருவமேதும் இருந்திருந்தால்
அதை நானே வென்றிருப்பேனே...!


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 9 ஜனவரி, 2017

அனுமதி இல்லை போல...

அனுமதி இல்லை போல...



தேவதை (அவள்)
வாழும் இடத்தில்,
மனிதனாய் (நான்)வாழ
அனுமதி இல்லையென
தேவதையவளின்
பிரிவுக்கு பின்னே
புரிந்து கொண்டேன்...

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

வண்ணம் இழந்த வானவில்...

வண்ணம் இழந்த வானவில்...


ண்ணங்கள் இழந்த
வானவில்லாய் அவள்...
ஓவியனாய் மாறி
ஒவ்வொரு நாளும்
வண்ணங்கள் தீட்டி,
என் காதல் தூரிகையால்
வருடி வந்தேனே...
ஏனோ அவள் கண்ணீரால்
அதை கரைத்தே விடுகிறாள்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 7 ஜனவரி, 2017

நீ என்றால் பிடிக்கும்...

நீ என்றால் பிடிக்கும்...


ண்ணீர்த் துளிகள் பிடிக்கும்
துடைப்பது உன் கரம் என்றால்,
அழுகை எனக்குப் பிடிக்கும்
ஆறுதல் சொல்வது நீ என்றால்,
ஏக்கங்கள் எனக்குப் பிடிக்கும்
எதிர்பார்ப்புகள் நீ என்றால்,
தூக்கம் எனக்கு பிடிக்கும்
உந்தன் மடியில் என்றால்,
கனவுகள் எனக்கு பிடிக்கும்
அதின் நிஜங்கள் நீ என்றால்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 6 ஜனவரி, 2017

மறக்க முடியாமல் மரத்த இதயம்....

மறக்க முடியாமல் மரத்த இதயம்....


லிகளை மறக்க,
விழிகளை மூடி,
வழிகளை தேடினேன்...
மௌன மொழிகள்
பேசும் தேசம் சென்று,
கொஞ்சமாக கதறி,
கரையோரம் சிதற
விட்டேன் கவிதைகளை...
அந்த நொடிப்பொழுதே 
வலிகள் மறைந்தது,
வலிகள் தாங்கிய 
இதயமும் மரத்தது...

By....Ajai sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்