புதன், 28 பிப்ரவரி, 2018

வெற்றி நிச்சயம் ...!

வெற்றி நிச்சயம்...!


யணமோ வெகுதூரம்,
பாதையோ தெரியவில்லை,
பாய்மரங்கள் ஏதுமில்லை,
போட வேண்டும் எதிர்நீச்சல்...!

சாதிக்க நீ நினைத்தால் 
சாதிகளை தூக்கிலிடு,
சதிகளை நாம் நினைத்தால்
விதிகளை யார் ஜெயிப்பார்...?

கூச்சலிடத் தேவையில்லை,
கூக்குரலும் தேவையில்லை,
தடைகளை உடைத்தெறிந்தால் 
படைகளை  ஜெயித்திடலாம்...!

நல்வினை நீ செய்தால் 
தீவினைச் சேருமிங்கே...
கரடும் முரடும் பாதையிங்கே,
எதற்கு மனிதா போதையிங்கே....?

வெற்றியென்றால் மேல்படி,
தோல்விதானே முதல்படி,
துணிந்தால் ஏறிடலாம்,
ஏணியாய் எழுந்திடலாம்...!

By...Ajai Sunilkar Joseph 



வருகைத்தந்து கவிதையை 
ரசித்தமைக்கு 
மனமார்ந்த 
நன்றிகள்...!!!


கருத்துரைகள் தந்தால் 
தவறேதும் இருந்தால் என்னை 
திருத்திக்கொள்ள
உதவும் நண்பர்களே...



10 கருத்துகள்:

  1. அருமை நண்பரே
    நம்பிக்கை துளிகள் பிறக்கிறது...
    இப்படியும் உங்களால் கவிமழை தூவ இயலும் என்று...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகைக்கு நன்றிகள் பல...
      கருத்துரையால் மகிழ்ந்தேன் நண்பரே...

      நீக்கு
  2. அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
    ஆனால் இரு வரிகள் எனக்கு புரியவில்லை.
    " நல்வினை நீ செய்தால்

    தீவினை சேரும் இங்கே"
    விளக்கம் கிடைக்குமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லது நாம் செய்தால்
      நமக்கு தீமைதான் வந்து சேரும்...
      இது இன்றைய காலம்
      மனிதத்தில் விதைந்த கொடிய விதைகள்.

      நீக்கு
  3. அருமையான வரிகள். பிழையில்லாமல் எழுதுகிறீர்கள். இருப்பினும் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுமாறு கேட்கிறீர்கள்.
    வலைப்பு அமைப்பிலும் ஆரவாமில்லை; உங்கள் எழுத்திலும் ஆரவாரம் இல்லை. எளிமையாக, தெளிவாக எழுதுகிறீர்கள். படிப்பதற்கு இலகுவாக, இதமாக இருக்கிறது.

    உங்களுக்கு அன் மனமார்ந்த பாராட்டுகள் அஜய்.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!