சனி, 14 ஜூலை, 2018

தனிமையில் ஓர் பயணம்...

தனிமையில் ஓர் பயணம்...


னிமை நதியில் நாதியற்ற ஓடமாய் நான்.
சொந்தங்களாய் பலரும்,உறவுகளாய் சிலரும்,
நண்பனாய் நீயும்,தோழியாய் அவளும்,
காதலியாய் என்னவளும்,யார் யாரோ 
வந்து போன வழித்தடமாய் என்னிதயமும்,

துடுப்பாய் வந்தோரெல்லாம் 
தூக்கியெறிய,சொந்தமெல்லாம் தூரமாக,
உறவுகளெல்லாம் உறவறுக்க,
நண்பனும் கடந்து செல்ல, 
தோழியும் விட்டு விட்டாள்,
காதலியாய் வந்தவளும் விட்டு விட்டாள்,

எனக்குள்ளே உயிரறுந்த வேதனை,
யாருக்கு நான் செய்த துரோகம்
என்னை விடாமல் துரத்துகிறது என்று...!
இப்படியும் பல நாளாய் சிந்தித்து 
பழகிக்கொண்ட நானும்,

சிலரின் அன்பான பேச்சுக்கெல்லாம் 
வழுவி விடுகிறேன்,
யாருக்கும் இதயத்தில் இடமில்லை 
என்பதால் என்னிதயத்தின் 
வழித்தடத்தையும் அழித்து விட்டேன்,

வாழத்தெரியாதவன் என்று என்னை
சொன்னாலும் பரவாயில்லை,
சிதைந்த என்னிதயத்தை தேற்றிக்கொள்ள
தனிமையில் ஓர் இனிமை கானம் தேடி
என் பயணத்தை தொடர்கின்றேன்...


காணொளி



By...Ajai Sunilkar Joseph


6 கருத்துகள்:

  1. உடன் வரும் பயணிகள் ஆங்காங்கே இறங்கி கொண்டாலும் புதிய சகபயணிகளுடன் தொடரும் பயணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் நண்பரே,
      பயணங்கள் முடிவதில்லையே..!

      நீக்கு
  2. அவரவர் பயணத்தை அவரவரே பயணித்து கடக்க முடியும் என்பதே உண்மை.. மற்றும் சத்தியம்..

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!