கவிதைக் காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைக் காணொளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பார்வையால் போர்த் தொடுக்கிறாள்...




ன் இதயத்தை
கொத்தாய் பிய்த்தெடுக்க
பார்வையால் போர்த்
தொடுத்தவளே...!

என் இதயத்தின்

மென்மையை அறியாத
பெண்மை யா உனது...!

என் இதய பூமியின்

சாமியே நீதானடி...
பெண்ணே...!

உன்னையே ஆராதிக்கும்

பக்தனாய் நான் இருக்க,
ஏனடி என்னை
பித்தனாய் மாற்றினாய்...?

என் மேல் சினம்

கொண்ட சினேகிதியே
உன்னை மணம் கொண்டால்
தீருமோ இந்த தண்டனை...?

உன் தணியா கோபத்தை

உன் அன்புக்குப் பணிந்த
என்மேல் ஊற்றாதே,

சிறு சிறு கவிதைகளாய்

என்னில் ஊற்றெடுக்கும்
தூயவளே

உன் பார்வை தீயை 

ஊற்றி என் காதலை
கொஞ்சம் எரிய விடு...!



Video




சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

கூர்வாள் விழிகள்


கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்
கூறு போடுகிறாய்,

உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...

உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!

உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!

உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!


Ajai Sunilkar Joseph


Video




வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

அகம் தேடிய அகதி



ன் கண்ணிமைகளின் 
சிறகடிப்பில் 
என்னைச் சிறைபிடித்தாய்,

இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் 
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,

தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி 
உன் விழிகளில் 
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,

உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,

இல்லையேல் உன் மனதில் 
என்னைக் கைது செய்து

ஆயுள்கைதியாய் அடைத்து விடு...


Video


புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

காதலுக்குச் சொந்தக்காரி




நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்

என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,

எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,

தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,

பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,

என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,

பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி

என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,

என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,

பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...

Video




சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...


நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம் 
பரப்பி வைத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

பெண்ணே உன்னால் 
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னை நித்தம் 
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக

நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...

Video





ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph 




வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பைத்தியக்காரன்...

பைத்தியக்காரன்...


காற்றில் அசையும்போது

திசைகள் தேடும் பறவையாய்

உன்னைத் தேடுகிறேன்,

திரும்பிய திசையெல்லாம்

விரும்பிய உன் பிம்பம்

மட்டுமே காண்கிறேன்,

உன்னையே பிரதிபலிக்கச்

செய்யும் உன் ஞாபகக்

கண்ணாடிகளை அதிகம்

பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...

உன் உறவிழந்த பின்னால்

பெண்ணே...!

சிறகிழந்த பறவையானேன்,

நான் அழுதிடும் வலிகளை

எழுதிடும் வரிகளால் உனக்குத்

தொடுத்துப்போகிறேன்

கவிதை மாலையாக,

புரிவதும் பிரிவதும் உன்

உரிமை என்ற பின் உனக்கு

என் காதலை புரியவைக்க

முயற்சிக்கும் நான் உண்மையிலேயே

பைத்தியக்காரன்தான்...

Ajai Sunilkar Joseph


காணெளி



By...
-A



ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தொடர்கிறேன்...


தொடர்கிறேன்...

முந்தைய கவிதை
👇👇👇👇


ன்னை வர்ணித்து எனக்குக் 

கவிதைகள் எழுதத் தெரியவில்லை,

ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,

எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,

உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,

நீ சுவாசிக்கும் காற்றில் 

என் கவிதைகளை அனுப்பி

உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...

ஒன்றாவது உன்னிடம் வந்து

சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,

உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,

ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில் 

கிடைக்கவில்லை,

அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,

என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,

என் கவிதையாலும் உன்னைத் 

தொடர வேண்டுமென்று...

Ajai Sunilkar Joseph


காணொளி



சனி, 14 ஜூலை, 2018

தனிமையில் ஓர் பயணம்...

தனிமையில் ஓர் பயணம்...


னிமை நதியில் நாதியற்ற ஓடமாய் நான்.
சொந்தங்களாய் பலரும்,உறவுகளாய் சிலரும்,
நண்பனாய் நீயும்,தோழியாய் அவளும்,
காதலியாய் என்னவளும்,யார் யாரோ 
வந்து போன வழித்தடமாய் என்னிதயமும்,

துடுப்பாய் வந்தோரெல்லாம் 
தூக்கியெறிய,சொந்தமெல்லாம் தூரமாக,
உறவுகளெல்லாம் உறவறுக்க,
நண்பனும் கடந்து செல்ல, 
தோழியும் விட்டு விட்டாள்,
காதலியாய் வந்தவளும் விட்டு விட்டாள்,

எனக்குள்ளே உயிரறுந்த வேதனை,
யாருக்கு நான் செய்த துரோகம்
என்னை விடாமல் துரத்துகிறது என்று...!
இப்படியும் பல நாளாய் சிந்தித்து 
பழகிக்கொண்ட நானும்,

சிலரின் அன்பான பேச்சுக்கெல்லாம் 
வழுவி விடுகிறேன்,
யாருக்கும் இதயத்தில் இடமில்லை 
என்பதால் என்னிதயத்தின் 
வழித்தடத்தையும் அழித்து விட்டேன்,

வாழத்தெரியாதவன் என்று என்னை
சொன்னாலும் பரவாயில்லை,
சிதைந்த என்னிதயத்தை தேற்றிக்கொள்ள
தனிமையில் ஓர் இனிமை கானம் தேடி
என் பயணத்தை தொடர்கின்றேன்...


காணொளி



By...Ajai Sunilkar Joseph


சனி, 7 ஜூலை, 2018

நினைவுகளே தோரணமாய்...


நினைவுகளே தோரணமாய்...


தேயாத பெண்ணிலவே
உனைக் காணாத கண்ணினிலே
கரைந்தோடும் தாரைகளாய்
என் காதல் கொட்டுதடி,

காற்றொன்று என்னைத்
தாண்டிப் போனால் பெண்ணே
உந்தன் மூச்சும் என்னைக்
கொஞ்சமாய் தீண்டிப் போகுதடி,

வித்தாரக் கண்ணழகே
எந்தன் விழிநீரும் விம்முதடி,
மந்தாரைப் பூவழகே உன்னை
மனதாரக் காதலித்தேன்,

தோளோடு தோள் சாய்ந்து,
உன் மௌனத்தின் சலசலப்பை
சிறு சிறு கவிதைகளய்
மொழிப்பெயர்பேன்,

உன் நளினத்தின் சலனத்தை
சல்லடையில் சலித்தெடுத்தேன்,
என் விழிகண்ட கனவானாய் 
தூங்காமல் துயிலெழுந்தேன்,

கலைந்தோடும் முகிலானாய்
நெஞ்சில் அணையாத அகலானாய்,
நிலைகொண்ட புயலானாய்
என்றோ கரை கடந்து விட்டாய்,

நீ மழைமேகமென்றால் 
என்னை மனதார நனைத்துவிடு,
எரியாத தீயென்றால் உன் 
நெஞ்சோடு அணைத்தவிடு,

நான் இல்லாத ஓர் நாளில் 
என் நெஞ்சம் நீயறிவாய்,
உன்னை நினைக்காமல் நானுமில்லை
உன்னை நினையாத நாளுமில்லை...

நெஞ்சோடு மஞ்சம் வைத்தேன்
பற்றி எரிந்த பஞ்சானாய்,
மரணத்தின் வாசலில் பெண்ணே
உன் நினைவுகள் தோரணமா...?




காணொளி

Ajai Sunilkar Joseph


By...
கரையோரம் சிதறிய கவிதைகள்







வெள்ளி, 11 மே, 2018

இதயத்தை கொய்தவளே...

இதயத்தை கொய்தவளே...

டபடவென சிறகடித்தும்
ஓரிடத்தில் பறக்கும் இரு
பட்டாம்பூச்சிகளா உன் விழிகள்...?

துளியும் பார்வை சிந்தாமல்
கோர்வையாய் இதயத்தை
கொய்து போறவளே...!

உன் பார்வைபட்ட மறுநொடியில்
வெற்றிடம் தேடிய காற்றாய்
உன்னுள் வர முயல்கிறேனடி,

ஈர்க்கும்  காந்த விழியழகே
நீயிருக்கும் திசையெல்லாம்
கவிதைகள் எழுதி வைத்தேன்,

என் இமை மயிர்களுக்கு
தூரிகையெனும் உரு கொடுத்த
செந்தமிழ்த் தாரகையே,

உன் கண்களை ஓவியமாய்
இதயத்தில் வரைந்து விட்டேன்,
நான் மட்டும் ரசித்துக்கொள்ள...!

என்ன மாயம் செய்தனவோ
உன் விழிகள்...!
என் விழிகளின் ஈரத்தையெல்லாம்
வரிகளாகத் தொடுக்க வைக்கிறது,

அதை வாசிக்கும் உந்தன்
விழிகளின் அழகைக் காட்டிவிடு
அந்த ஞாபகத்தை எனக்குள்
பூட்டி வைப்பேன்,

பூட்டி வைக்கும் ஞாபகத்தை
கனவுகளாய் உரு கொடுத்துத்
நிஜமதில் வாழ வைப்பேன்,

பெண்ணே எந்தன் இதயத்தின் 
சிந்தையெல்லாம் உந்தன்
கண்களால் சிதற விட்டேனடி,

ஏனடி என்னை புலம்பவிட்டு
தள்ளிநின்று வேடிக்கைப்
பார்கிறாய்...?

பதில் கூறா கண்மணியே
உன் மௌனத்தால் என்னைக்
கூறு போட்டுக் கொல்லாதே,

பார்வையால் என்னைப்
பட்டென சாய்த்தப் பாவையே
என்னைப் பாடாய் படுத்தாதே,

தொலைதூரத் தாமரையே
என்னக்குத் தாரமாய் வந்து
என்னை உனக்குச் சொந்தமாக்கிடு,

உன் நெஞ்சில் ஆடவைக்க
தாலிக்கெடி ஏந்தி நமக்கான
நாள் நோக்கி காத்திருக்கிறேன்,

வா வா பெண்ணே மனம்
சேர்ந்து மணம்கொள்ள
என்னவளாய் எனக்காக...

By...Ajai Sunilkar Joseph 




செவ்வாய், 10 ஏப்ரல், 2018

இரக்கமே இல்லாத விழிகள்

இரக்கமே இல்லாத விழிகள்


நான் விண்ணில் பார்த்த 
விண்மீன்களுக்கு இல்லாத சிறப்பு,
தரணியில் பார்த்த 
தாரணியுந்தன் கண்களில் இருக்கிறது ...
உன் பார்வை உதிர்க்கும் 
ஈர்ப்பு சக்தியால் எத்தனை இதயங்கள் 
சின்னாபின்னமானதோ தெரியவில்லை,
துளியளவும் மிச்சம் வைக்காமல்
இதயங்களை தின்று ஏப்பமிடும் 
கண்களை உனக்கு மட்டும்தான்
இறைவன் கொடுத்துவிட்டான் போல...!
சித்திர விழியழகே உன்னை
நினைக்கையில் என் நித்திரை 
கெட்டுப் போகுதடி...
இரக்கமே இல்லாத உன் விழிகளை 
மறக்கவே முடியாமல் தவிக்கிறேன் நானடி...!
By...Ajai Sunilkar Joseph


Video




ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அவள் தந்து சென்ற கவிதைகள்

அவள் தந்து சென்ற கவிதைகள்



ன்பான என் தேவதை,
அவளுக்கோ அழகான புன்னகை,
அவளும் , அவள் புன்னகையும்
என் இதயத்தை புண்ணாக்கி
என்னை ரணங்களாய் ஆள்கிறது...
என் கண்களில் அவள் 
காணாமல் போன நாள்முதல்,
என் இதயம் அழுத வார்த்தைகளை
அவளின் ஞாபகத்தில் எழுதிக் கொட்டுகிறேன்,
என் இதயத்தின் வாசகியவள்
எங்கே சென்றாளோ தெரியவில்லை,
என் கண்களை விட்டு மறைந்தாளா...?
அவளை விட்டு நான் மறைந்தேனா...?
ஏதும் புரியவில்லை...
அவள் நினைவுகளை சுவாசித்து
அவளிடம் கவிதைகளால் யாசித்து
நானே வாசித்து விடுகிறேன் 
அவள் தந்து சென்ற கவிதைகளை...

By...Ajai Sunilkar Joseph 


காணொளி



திங்கள், 2 ஏப்ரல், 2018

மை விழியாள்...

மை விழியாள்...

ன் உயிரை ஊசலாட  
விட்டு எங்கே சென்றாய்...!
திரும்பித் திரும்பி உன்னைத்
திரும்பத் திரும்பத் தேடுகிறேன்,
விரும்பி என்னைப் பார்த்தாலென்ன
மையல் தந்த மைவிழியாளே...!
கண்ணில் காட்சி தந்து 
என் கண்ணை விட்டு 
மறைந்தாயே என் தேவதையே...!
என் தேவையெல்லாம் உன் 
அன்பே என் ஆருயிரே,
நீ சென்ற திசையெல்லாம் தேடுகிறேன் 
எங்கே இருக்கிறாய் என்று...!
சொல்லி விடு ஒரு வார்த்தை
என் தேடலின் வலிகளை
தவிர்த்து காத்திருப்பேன் உனக்காக...


By...Ajai Sunilkar 



காணொளி....



வெள்ளி, 30 மார்ச், 2018

புருவ அழகு...

புருவ அழகு...

ந்தன் புருவத்தின் கீழ் 
திறந்து மூடும் சொர்க்க
வழிகளா உன் விழிகள்...!
அதனுள் அடைபட்ட
என்னை விடுதலை
செய்யாதே பொன்மானே...!
அங்கேயே யுகா யுகங்களாய்
வாழ விரும்புகிறேன்,
என்னைத் துரத்திவிட்டு
தூரம் செல்லாதே
என் நெஞ்சம் தாங்காது...

-Ajai Sunilkar Joseph



காணொளி

                                                  


செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

எந்தன் இதய அஞ்சலி

எந்தன் இதய அஞ்சலி



கால்கள் முளைத்த
பூக்களில் ஒன்றாய்
எந்தன் இதயமதில்
இனிந்தாள் அன்று...!

அவளுடன் மணவறை
மணமோ கிடைக்கவில்லை
அதனால் மனதோடு
மணந்து விட்டேன்...

உள்ளத்தில் குடிவைத்து
உள்ளூரில் வாழ்கின்றேன்,

உள்ளத்தை உடையவளின்
உள்ளமதைக் கொண்டதினால்...!
அவளை மறப்பதற்கு மனமில்லாமல்
எந்தன் மனதோடு புதைத்து விட்டேன்...!

எந்தன் தாய்மொழி உதிர்த்து,
வார்த்தைகள் கோர்த்து,
என்னிதயக் கல்லறையில்
கவிதைகளாய் சேர்க்கின்றேன்,

கண்மணியவளின் காதலுக்காய்,
எந்தன் இதய அஞ்சலியாக...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 15 பிப்ரவரி, 2018

நீ எங்கே இருக்கிறாய்....?

நீ எங்கே இருக்கிறாய்...?



டபடவென பறக்கும்
பட்டாம்பூச்சியாய்
சில்லெனச் சிறகடித்தே
தேடுகிறேன் என்னவளை...!
எங்கே இருக்கின்றாளோ
தெரியவில்லை...!

என் வருங்கால மனைவியே...!
உன் விழிகளால் என் 
இதயத்தில் நீ நுழைய 
நான் காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

உந்தன் விழியோடு
என் விழி வைத்து,
உன்னை மடியினில் சாய்த்து 
முத்தமிட காத்திருக்கிறேன்...
முத்தழகே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை உயிரிலே ஊற்றி 
உதிரமாய் உரு கொடுத்து
இழுத்தணைத்து இதழ்களில்
தேன் பருக காத்திருக்கிறேன்...
தேனமுதே நீ எங்கே இருக்கிறாய்...!

நீல வானில் 
வெள்ளை நிலவிடம்
உளறிக் கொட்டுகிறேன்,
உனக்கான கவிதைகளை
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னோடு கொஞ்சி 
விளையாட கெஞ்சல்களாய் 
கவிதைகள் தொடர்கிறேன்...
பூலோக தேவதையே
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை
மாலையிட்டு மணமுடித்து,
நெஞ்சோடு மஞ்சம் வைத்து
மார்போடு சேர்த்தணைக்க
மன்னவனாய் காத்திருக்கிறேன்
என் மனைவியே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னிடம் காதல் 
கொண்ட இதயத்தில்
உன்னை குடிவைக்க
காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

விழிகளால் வீழ்த்தும் பெண்ணே
உன்னை கரம் பிடிக்கும் 
நாள்தான் எனக்கு காதலர்
தினமென காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!


                                                       -அஜய் சுனில்கர் ஜோசப்



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...


ன் விழிகள் பாய்ந்த
என் இதயத்தில் 
கவிதைகள் சொட்டுகிறது...
அத்தனையும் சேர்த்து 
எட்டாத உயரத்தில்
கிட்டாத பொக்கிஷமாய்
சேமிக்கிறேன்,
கண்மணி உந்தன் 
காதலைத் தந்தால் 
கவிதைகள் தூவி 
உன்னோடு வாழ்வேன்,
என் வாழ்வெல்லாம்...

-Ajai Sunilkar Joseph 


காணொளி





கரையோரம் சிதறிய கவிதைகள்
-Ajai Sunilkar Joseph

புதன், 7 பிப்ரவரி, 2018

அவளைப் பார்த்தால் சொல்லி விடுங்கள்....

அவளைப் பார்த்தால் 
சொல்லி விடுங்கள்....



சாலையோரம் செல்லும் பூக்களே
என் இதயம் தேடும் 
பூ எங்கே சொல்லுங்கள்...
அவளைக் கண்ட நேரத்தில்,
என் நெஞ்சத்தின் ஓரத்தில்,
பாலைவனம் ஆனதே 
சோலைவனம் போலவே...!
அங்கே உதிரும் சருகுகளில்
அவளின் காலடிச் சத்தம் கேட்கவே,
கண்கள் கூட இமைக்காமல் 
காத்துக் கொண்டே இருக்கிறேன்,
பார்த்தால் சொல்லி விடுங்கள்
பாதகத்தி என்னை பாதையோரம்
காக்க வைத்து பாதி உயிரை எடுக்கிறாள்,
மீதி உயிரை வைத்துக்கொண்டு
மிஞ்சிய காதல் நினைவுகளை
அவளைக் கெஞ்சியே எழுதுகிறேன்
கரையோரம் சிதறிய கவிதைகளை,
வாசகியாய் வந்து காதல் யாசகத்தை புரிவாளா...!
புரிந்தும் புரியாமல் நடிப்பாளா...!
பூக்களாய் வந்து புன்னகை தருவாளா...!
புரியாமல் புன்னகையை பாறித்தே செல்வாளா...?


By...
Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

திங்கள், 29 ஜனவரி, 2018

கோடி மின்னல்கள் குடி கொண்ட கண்கள்....

கோடி மின்னல்கள்
குடி கொண்ட கண்கள்...


கோடி மின்னல்கள் கூடி வந்து
உன் கண்களில் குடி கொண்டதோ...!
பெண்ணே...!
                     உன் விழி பார்த்து 
என் வழி மறக்கின்றேன்,
கண்ணே...!
                 உன் இரு விழி,
உன் இமை வழி,
என்னிரு விழி நுழைந்து,
என் இதயத்தில்  காதல் கருவானதே...!
கண்ணால் கண்ணில் மாயம் செய்து,
உன்னால் என்னில் மாற்றம் செய்த நீயோ
மாயலோக சுந்தரியா...?
நீதான் மெய் தேவதையா...?
புரியாத எனக்கோர்
பதில் கூறடி கண்மணியே...!


By...Ajai Sunilkar Joseph


காணொளி