தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தன்னம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 28 பிப்ரவரி, 2018

வெற்றி நிச்சயம் ...!

வெற்றி நிச்சயம்...!


யணமோ வெகுதூரம்,
பாதையோ தெரியவில்லை,
பாய்மரங்கள் ஏதுமில்லை,
போட வேண்டும் எதிர்நீச்சல்...!

சாதிக்க நீ நினைத்தால் 
சாதிகளை தூக்கிலிடு,
சதிகளை நாம் நினைத்தால்
விதிகளை யார் ஜெயிப்பார்...?

கூச்சலிடத் தேவையில்லை,
கூக்குரலும் தேவையில்லை,
தடைகளை உடைத்தெறிந்தால் 
படைகளை  ஜெயித்திடலாம்...!

நல்வினை நீ செய்தால் 
தீவினைச் சேருமிங்கே...
கரடும் முரடும் பாதையிங்கே,
எதற்கு மனிதா போதையிங்கே....?

வெற்றியென்றால் மேல்படி,
தோல்விதானே முதல்படி,
துணிந்தால் ஏறிடலாம்,
ஏணியாய் எழுந்திடலாம்...!

By...Ajai Sunilkar Joseph 



வருகைத்தந்து கவிதையை 
ரசித்தமைக்கு 
மனமார்ந்த 
நன்றிகள்...!!!


கருத்துரைகள் தந்தால் 
தவறேதும் இருந்தால் என்னை 
திருத்திக்கொள்ள
உதவும் நண்பர்களே...



புதன், 6 ஜனவரி, 2016

என் வீழ்ச்சியும் எழுச்சியும்

விழுவதும் , எழுவதும்
எனக்கு புதிதல்ல...
விழுந்தாலும் எழுவேன்...
உதயமாகும் சூரியனை போல...
நான் வீழ்ந்து போனால்
என்னை தூக்கி விட
யாரும் வேண்டாம்...
என்னில் ஒருவன் இருக்கிறான் ...
அவன் பெயர் தன்னம்பிக்கை...

-Ajai sunilkar Joseph