காதல் தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் தோல்வி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 மார்ச், 2017

குற்றமெனில் தண்டித்துவிடு...

குற்றமெனில் தண்டித்துவிடு...


ன்னை உதறி விட்டுப் 
போன உன்னையே
பற்றிப் பிடித்திருப்பது
குற்றமெனில் தாராளமாக
என்னை தண்டித்துவிடு,
மௌனங்கள் தவிர்த்து...


By...Ajai Sunilkar Joseph



                          கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 10 மார்ச், 2017

பார்வைத் தந்த பாவை...

பார்வைத் தந்த பாவை...

பார்வை இழந்த
விழிகளுக்கு 
பார்வைத் தந்த
பாவை எங்கே...!
அவள் தந்த
பாசத்தின் ஓர் 
துளி மட்டும்
கதறுது இங்கே...
நெஞ்சில் அவளை
நினைத்துப் பார்த்தால்
நிலையாத கனவாய்
கண் வழி உதிர்வாள்...

By...Ajai Sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

வெள்ளி, 18 நவம்பர், 2016

பிரிவுக்குப் பின் புலம்பல்தானோ...

காற்றே சாட்சி....

வ்வொரு முறையும்
வீசுகின்ற காற்று
என்னைக் கடந்து 
செல்லும்போது...
உன் நினைவுகளையும்,
உன் சுவாசத்தையும்
என்னிடம் கொடுத்து
விட்டுதான் செல்கிறது...
நீ என்னைப் பிரிந்தாலும்
உன் நினைவுகளை
என்னை விட்டு
யாராலும் பிரிக்க முடியாது
என்பதற்கு காற்றே சாட்சி...


Ajai Sunilkar Joseph


அடங்கிப்போன துடிப்பு....

யிர் நீத்த பறவையாக
உன் உறவை இழந்த
என் இதயத்துடிப்பு
அடங்கிப் போனதடி(டா)...

Ajai Sunilkar Joseph


தொலைத்து விட்டாள்...


ன்னைப் பார்த்த 
முதல் நாளிலே...
என்னை உன்னிடம்
கொடுத்து விட்டேனே...
நான் உனக்கு
கொடுத்த என்னை
நீ தொலைத்தாயோ...!
உன்னிடம் பலமுறைத்
தேடிப் பார்த்தும் என்னைக் 
காணவில்லையே...!


Ajai Sunilkar Joseph



கிறுக்கனின் வலிகள்(வரிகள்)....


நீ எனக்கு கொடுத்த
வலிகளை தினம் தினம்
வரிகளாக கிறுக்கி
வைக்கிறேன் காகிதத்தில்...
இந்த கிறுக்கனின் 
வரிகளும் , வலிகளும்
என்றாவது ஓர் நாள்
உனக்கு புரியும் என்று...


Ajai Sunilkar Joseph


பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

கொள்ளை போன வெள்ளை பூவே...!

உள்ளத்தில்...

                          உண்மை காதலின் விதைகள் வீசி...

உள்ளூற முளைத்த காதல் செடியே...

உந்தன் மொழியில் எந்தன் காதல்...

உன்னில் உணர்வாய் என்னில் உயிராய்...

உள்ளின் உணர்வில் உன்னத உயரில்...

உண்மையாய் வளர்ந்து உரிமையாய் துளிர்த்து...

உயிரும் உணர்வும் உறவாய் கலந்து...

உலகம் போல உன்னை சுற்றி...

உள்ளத்தின் ஆழத்தில் உணர்வெனும்

ஊற்றின் ஓரத்தில் உண்மை காதலாய்...

மொட்டாய் மலர்ந்த வெள்ளை பூவே...

என்னை சாய்த்து உனக்கு மாலையிட்டு...

உன்னை ஊரறிய கொள்ளையிட்டு ...

போனவன்தான் உனக்காய் தவம்

கிடந்த மன்னவனோ(உன்னவனோ)...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 13 ஏப்ரல், 2016

இப்போது அறுவடை நாட்களோ...!

இதயத்தில் விதைத்தாள்

                     காதல் விதைகளை...

அன்பை ஊற்றியே

                     உணர்வுகளை வளர்த்தாள்...

விதைப்பின் பலனாய்

                     காதலே விளைந்தது...

இப்போது அறுவடை

                     நாட்களோ என்னமோ

தினமும் நினைவில்

                     வந்து இதயத்தையே

கொய்து செல்கிறாள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 8 ஏப்ரல், 2016

கண்ணீராய் கரைந்தாளோ...!

காதலே...
                 அவள் உன்னை
கனவில் சுமந்து...
                 என்னை கணவனாய்
நினைப்பாள் என்றே
                 கனவுகள் கண்டேனே...!
நடமாடும் மெழுகு
                 பொம்மையோ அவள்...!
காலம் கொழுத்தி விட்ட
                 பிரிவின் அழுகையால்...
என்னை விட்டு
                 கரைந்தே போனாளோ...!
கரையும் போது
                 இதயத்தை உடைத்து
விழி வழியே
                 கண்ணீராய் கரைந்தாளோ...!
பிரியும்போது பேசி
                சென்ற சின்ன சின்ன
வார்த்தை வலிகளால்....! 

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

இப்படிக்கு என் உயிர்....

என்னுயிர் பிரிந்து போனது...

                  இப்போது என்னில் துடிப்பது

என்னவளின் உயிர் தான்...

                  இது அவளுக்கே தெரியாது...

தயவாய் யாரும் அவளிடம்

                  சொல்லிட வேண்டாம்...

என்னுயிர் பிரிந்தது தெரிந்தால்

                  அவள் உயிர் தாங்காது...

இப்படிக்கு என் உயிர்...

                  அவளின் நினைவுகள்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

சனி, 2 ஏப்ரல், 2016

உருக்கப் பட்ட காதல்...

அச்சில் வார்க்கப்
                    பட்ட மெழுகாய்
என் காதல்
                    உரு பெற்றது...
என் உயிரிலே
                    உரு பெற்ற காதல்
என் உயிரான
                    அவள் பிரிந்ததால்
என் விழி வழியே
                    உருக்கப் பட்டதோ...!
கண்ணீர் துளிகளாய்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 16 மார்ச், 2016

அவசரம் மிஞ்சிய வஞ்சி....

கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி பேசி...

நெஞ்சங்கள் முழுதும் கொஞ்சல்கள் மிஞ்சி...

காதல் நஞ்சை தின்ற வஞ்சிக் கொடியின்...

காதலன் கண்ணால் காமம் கெஞ்ச...

காதல் நெஞ்சங்கள் காமம் கொஞ்ச...

அவசரம் மிஞ்சி மஞ்சம் தேடி...

வஞ்சிக் கொடி கற்பை இழந்து...

வஞ்சி கண்ணில் கண்ணீர் மிஞ்சி...

வஞ்சி நெஞ்சில் நினைவுகள் மிஞ்சி...

நித்தம் நித்தம் கண்ணீர் மிஞ்ச

மரணத்தை மெச்சி கல்லறை

கொஞ்ச வஞ்சியவள் போனாளே...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 13 மார்ச், 2016

காதல் கலைக்கப்பட்டதோ....!

இருவர் கண்களின்

                     உறவால் உணர்வுகள்

தூண்டப்பட்டு இதயத்தில்

                     கருவானதே காதல்...

அன்பினால் அது

                     சுமக்கப்பட்டும்...

திருட்டுத்தனமாய் அது

                     வளர்க்கப்பட்டும்...

காதலர்கள் இதயத்தில்

                     கருவான காதல்

திருமணமாய் பிரசவிக்கப்

                     படுமென்று காத்திருந்தும்...

கருவான காதல்

                     கலைக்கப்பட்டதோ...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்