ஞாயிறு, 9 டிசம்பர், 2018

பார்வையால் போர்த் தொடுக்கிறாள்...




ன் இதயத்தை
கொத்தாய் பிய்த்தெடுக்க
பார்வையால் போர்த்
தொடுத்தவளே...!

என் இதயத்தின்

மென்மையை அறியாத
பெண்மை யா உனது...!

என் இதய பூமியின்

சாமியே நீதானடி...
பெண்ணே...!

உன்னையே ஆராதிக்கும்

பக்தனாய் நான் இருக்க,
ஏனடி என்னை
பித்தனாய் மாற்றினாய்...?

என் மேல் சினம்

கொண்ட சினேகிதியே
உன்னை மணம் கொண்டால்
தீருமோ இந்த தண்டனை...?

உன் தணியா கோபத்தை

உன் அன்புக்குப் பணிந்த
என்மேல் ஊற்றாதே,

சிறு சிறு கவிதைகளாய்

என்னில் ஊற்றெடுக்கும்
தூயவளே

உன் பார்வை தீயை 

ஊற்றி என் காதலை
கொஞ்சம் எரிய விடு...!



Video




சனி, 17 நவம்பர், 2018

கூர்வாள் விழிகள்

கூர்வாள் விழிகள்


கூர்வாள் விழிகளா உனது
பார்வையால் என்னைக்
கூறு போடுகிறாய்,

உன்னைத் தேடித் தேடித் நானும்
தொலைகிறேன் பெண்ணே
எங்கே இருக்கிறாய்
பதில் சொல் கண்ணே...

உன் ஞாபகம் என்னை
வதைக்கையில் என்
மடிமீது உன்னை வீணையாய்
மீட்ட நினைக்கிறேன்,
ஏன்தான் என்னை சோளக்
கதிராட்டம் வாட்டுகிறாயோ...!

உன்னைக் காதல் மானாய்
ரசிக்கிறேன் நானே
ஏன்தான் என்னை
வெறுக்கிறாய் நீயே...!

உன் விழிகள் விதைத்த
காதலைச் சொல்கிறேன்
கொஞ்சம் புரிந்து கொள்ளடி
என்னை வதைக்காமல்...!


Ajai Sunilkar Joseph


Video




வியாழன், 15 நவம்பர், 2018

அகம் தேடிய அகதி

அகம் தேடிய அகதி



ன் கண்ணிமைகளின் 
சிறகடிப்பில் 
என்னைச் சிறைபிடித்தாய்,

இதழ்களை பிரித்து புன்னகைத்தாய் 
ஓரிரு நொடிகள் உறைந்தே போனேன்,

தாய் காணா சேய் போல்
உன் அகம் தேடி 
உன் விழிகளில் 
அகதியாய் சுற்றித்திரிகிறேன்,

உன் இதயத்தில்
என்னைக் குடியேற்றிக்
காதல் குடியுரிமைக்
கொடுத்து விடு,

இல்லையேல் உன் மனதில் 
என்னைக் கைது செய்து

ஆயுள்கைதியாய் அடைத்து விடு...


Video


புதன், 14 நவம்பர், 2018

காதலுக்குச் சொந்தக்காரி

காதலுக்குச் சொந்தக்காரி




நினைவுகளை அள்ளி
என்னுள் விதைந்தவள்

என் இதயத்தையே
அறுவடையாய் கொய்து
போய் விட்டாள்,

எங்கேதான் போனாளோ
தெரியவில்லை
அவள் சென்ற வழித்தடமும்
புரியவில்லை,

தென்றல் செல்லும்
திசையெல்லாம்
தேடிப்பார்க்கிறேன்,

பூவையவள் போன
திசை தென்றலும்
அறியவில்லையே,

என்னுள் காதலைக்
காவியமாய் தந்தவள்
நெஞ்சுக்குள்
ஓவியமாய் நிற்கின்றாள்,

பவித்திரமான
காதலுக்குச்
சொந்தக்காரி

என்னைக் காத்திருக்கச்
சொல்லிவிட்டு
பவ்யமாய் கடந்துவிட்டாள்,

என் கண்களைத் தாண்டி
கனவுகளாய் என்னைத்
தழுவிச்செல்கிறாள்,

பிறகு ஏன்தான்
என்னைக் கை கழுவிச்
சென்றாளோ
தெரியவில்லை...

Video




சனி, 3 நவம்பர், 2018

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...


நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன் கைகள் கோர்த்து,
உன் தோளோடு உரசி,
சற்றும் இடைவெளி விடாமல்,
கை விரல்களின் இறுக்கத்தில்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னிரு விழிகளிடம்
என் விழிகளால் பேசி,
உந்தன் காதுகளோரம்
கவிதைகளால் பேசி

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னைச் சிறைபிடித்த
பாவையுந்தன் நினைவுகளை
என் பாதையோரம் 
பரப்பி வைத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

பெண்ணே உன்னால் 
என்னில் பல கனவுகளைக்
கண்டெடுத்து என்னையே
நான் மீண்டெடுத்து

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

என்னை நித்தம் 
சித்திரவதை செய்யும்
உந்தன் நினைவுகளைத்
தேடித் தேடி நானும்

நெடுந்தூரம் நடந்து விட்டேன்...

உன்னைக் கண்டுபிடித்தும்
தொலைதூரம் மறையும் கானலாய்
நீ மறைந்து விடுவாயோ
என்ற பயத்தாலே நான் தனியாக

நெடுந்தூரம் நடந்து விடுகிறேன்...

Video





வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph