புதன், 28 பிப்ரவரி, 2018

வெற்றி நிச்சயம் ...!

வெற்றி நிச்சயம்...!


யணமோ வெகுதூரம்,
பாதையோ தெரியவில்லை,
பாய்மரங்கள் ஏதுமில்லை,
போட வேண்டும் எதிர்நீச்சல்...!

சாதிக்க நீ நினைத்தால் 
சாதிகளை தூக்கிலிடு,
சதிகளை நாம் நினைத்தால்
விதிகளை யார் ஜெயிப்பார்...?

கூச்சலிடத் தேவையில்லை,
கூக்குரலும் தேவையில்லை,
தடைகளை உடைத்தெறிந்தால் 
படைகளை  ஜெயித்திடலாம்...!

நல்வினை நீ செய்தால் 
தீவினைச் சேருமிங்கே...
கரடும் முரடும் பாதையிங்கே,
எதற்கு மனிதா போதையிங்கே....?

வெற்றியென்றால் மேல்படி,
தோல்விதானே முதல்படி,
துணிந்தால் ஏறிடலாம்,
ஏணியாய் எழுந்திடலாம்...!

By...Ajai Sunilkar Joseph 



வருகைத்தந்து கவிதையை 
ரசித்தமைக்கு 
மனமார்ந்த 
நன்றிகள்...!!!


கருத்துரைகள் தந்தால் 
தவறேதும் இருந்தால் என்னை 
திருத்திக்கொள்ள
உதவும் நண்பர்களே...



ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

குட்டி கவிதைகள்

குட்டி கவிதைகள்


ஒருநாள்

சூரியனின் சிமிட்டல்
பொழுதினில் ஒரு
இரவு கடந்தது...!

By...Ajai Sunilkar Joseph



ராணுவ வீரன்

னைத்தும் 
இருந்தும்
தன்னையே 
அர்பணித்தான்,
நாட்டுக்காக...!

By...Ajai Sunilkar Joseph


நிலவே...

ணியா 
தாகமோ,
நீரில் மூழ்கிக் 
கிடக்கிறாய்...!

By...Ajai Sunilkar Joseph


மகிழ்ச்சி

திர்ந்த
போதெல்லாம் 
மகிழ்ந்தன,
விதைகள் 
தந்த பூக்கள்..!

By...Ajai Sunilkar Joseph


வெட்கம்

நாணம் கொண்ட 
நாயகியே
காற்றில் 
அசையும் 
நாணலானேனடி...!

By...Ajai Sunilkar Joseph


(அன்பு நண்பர் ஸ்ரீ ராம் காதல் கவிதைகள் தவிர்த்து வேறு கவிதைகள் எழுத சொல்லியிருந்தார் எனது முந்தைய பதிவில் ,அதனால் சிறிய முயற்சியில் கிடைத்த வரிகளை இங்கு பதிவிடுகிறேன்.)

நன்றி நண்பர்களே...!


கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 24 பிப்ரவரி, 2018

என்னைப்பற்றி மீண்டும் ஒருமுறை...

என்னைப்பற்றி மீண்டும் ஒருமுறை...


"வலையுலக சொந்தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள்..."


"என்னைப்பற்றி இதுவரை யாரிடமும் நான் சொன்னதில்லை,"

"ஆனால்...
                இங்கு என்னைத் தொடரும் சொந்தங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்..."


Ajai Sunilkar Joseph

"எனது பெயர் அஜய் சுனில்கர்
"கன்னியாகுமரி" மாவட்டத்தில்"தேங்காய்பட்டணம்" என்ற ஊரின் பக்கத்தில் "தொழிக்கோடு" என்ற ஊரில் சாதாரண பிறப்புதான்,

"கண்டிப்பான குடும்பம்,அழகான வாழ்க்கை 
அன்பான அப்பா , அம்மா, அண்ணன், அக்கா, கடைசியாக நான் !"

"எவ்வளவுதான் கண்டிப்புடன் என்னை வளர்த்திருந்தாலும் எனது "பள்ளிக்கூட வாழ்க்கை" 7- ஆம் வகுப்புவரைதான் பயணித்தது,"

காரணம்...

"படிப்பு என்றாலே மண்டையில் ஏறாது,
பள்ளிக்கூட தேர்வுகளில்"35"தான் வெற்றி மதிப்பெண் என்றால் அந்த மதிப்பெண்கள் கூட கிடைக்காது"

"ஒரு தேர்வில் அனைத்துப் பாடங்களுக்கும் சேர்த்து 98 மதிப்பெண்கள் வாங்கினேன் என்றால் நான் எப்படி படித்திருப்பேன் என்று நினைத்துப் பாருங்கள்"



"படிப்பில் நாட்டம் இல்லாததால் பள்ளிக்கூடம் போகாமல் கட் அடித்தேன் !
பள்ளிக்கூடத்தில் இருந்து ஆள் அனுப்பி வீட்டில் அறிவித்தார்கள் !"



"அப்பா அடிப்பார் என்று ஓடினேன் வீட்டை விட்டு எங்கேயாவது போக வேண்டும் என்று..."

"ஆனால்...
                  வீட்டில் எவ்வளவுதான் கண்டிப்பு இருந்தாலும் அந்த அன்பான வாழ்க்கையை விட்டுப் போக மனம் அனுமதிக்கவில்லை,"

"அன்று மதியமே வீட்டில் போனேன்,வந்ததும் அப்பா அடிக்கவில்லை,பள்ளிக்கூடம் போகிறாயா,வேலைக்கு போகிறாயா என்று கேட்டார்,படிப்பில் வேறு நமக்கு வெறுப்பு அதனால் வேலைக்கு போறேன் என்றேன்"

"அப்போது '2006' ஆம் ஆண்டு ஒரு தையல் கடையில் என்னை தையல் கற்க ஏற்பாடு செய்திருந்தார் அப்பா"

"அந்த நேரம்தான் சிறுவர் தொழிலாளர்களை தேடி கண்டு பிடித்து படிக்க வைத்து வந்தார்கள்."


"ஆனால் நான் இருந்த பகுதியில் அப்படி யாரும் என்னை தேடி வரவில்லை"

"2006 முதல் 2009 வரை அங்கு இருந்தேன்"

"வெறும் சட்டை மட்டும் தைக்க கற்றுக் கொடுத்தார்கள்,பிறகு அங்கு பிடிக்காததால்
அங்கிருந்த எனது தையல் மெஷினை எடுத்து
விட்டு கிளம்பினேன்"

"வரும்போது முதலாளி 'நல்ல ஆசீர்வாதம்' வழங்கி அனுப்பினார்,என்ன ஆசீர்வாதம் என்று தெரியுமா...?"

"அவரிடம் வேலை படிக்காமல் வேறு எங்கே போனாலும் 'நான் உருப்படவே மாட்டேன்' என்பதே,"


"நெஞ்சில் 'கொள்ளிக்கட்டையால் சுட்டதுபோல்' வடு இன்னும் மாறவில்லை,பிறகு பக்கத்து ஊரில் அப்பாவின் நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்த கடைக்கு போனேன்,


"அங்கு பேண்ட, சட்டை தைக்க கற்றுத்தந்தார்கள்,
ஆனால் அங்கு எப்போதும் முதலாளி கடையில் இருப்பதில்லை,"அதனால் அங்கும் நிலைக்கவில்லை,"

"பிறகு சொந்த ஊரில் ஒரு கடையில் 2 வருடங்கள் தைத்து,பிறகு பேண்ட், சட்டை வெட்டித் தைக்க கற்றும் தந்தார்,தைரியமும் தந்தார்."


"அந்த கடையில் கொஞ்ச நாட்கள் வேலை செய்து விட்டு முதலாளியின் அனுமதியுடன் திருநெல்வேலியில் 'பத்தமடை'என்ற ஊரில் எனது பெரியப்பாவின் கடையில் பெண்கள் ஆடைகள் தைத்து படிக்க போனேன்."

"அங்குள்ள 'இயற்கை' எனக்கு ஒத்து வராததால் அங்குஒரு மாதமும் நிலைக்கவில்லை,பிறகு சொந்த ஊரிலேயே வேறு ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தேன்."

"அங்கு 2 வாரங்கள் வேலை செய்தேன்,மூன்றாவது வாரம் வேலை செய்து விட்டு,மறுநாள் ஞாயிற்றுக்கிழமை 2012- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18- ம் தேதி"

"ஞாயிற்றுக்கிழமை தோறும் தவறாமல் ஊர் சுற்றுவது நண்பர்களின் வழக்கமான ஒன்று,அன்றும் வழக்கமாக ஊர் சுற்றி விட்டு வரும்போது..."

"என் பின்னால் இரண்டு நண்பர்களை அமர வைத்து என் அண்ணனின் பைக்கில் வந்து கொண்டிருந்தேன்,"

"ஒரு வளைவான ரோட்டில் அரசுப்பேருந்து விரைவாக வந்து கொண்டிருந்தது,
ஒலிப்பெருக்கி அப்பேருந்தில் இல்லை போல..."


"கண் இமைக்கும் நேரத்தில் என் வாழ்க்கை திசைமாறி பயணித்தது,ஆமாம் எனது உயிர் ஒரு நொடி பிரிந்து சேர்ந்தது,விபத்து ஒன்றில் !"

"பேருந்து மோதிய வேகத்தில் என் பின்னால் இருந்த நண்பர்கள் தூக்கி வீசப்பட்டனர்"

"நான் எனது கால் முறிக்கப்பட்டு நான் சென்ற வாகனத்தில் அதிசயமாக விழாமல் அமர்ந்தே இருந்தேன்."

"நல்ல வேளையாக எனது நண்பர்கள் காயங்கள் ஏதுமின்றி தப்பித்துக் கொண்டனர்,
எனது வலியும் விபத்து பயமும் என் மூளையில் நேரடியாய் தாக்க,அம்மா என்று கத்தியதே பக்கத்து ஊரில் உள்ளவர்களை சம்பவ இடத்தில் வர வைத்தது."


"நான் மெதுவாய் சாயத்துவங்க பக்கத்தில் நின்ற 'ஒரு மனிதர்' என்னை விழாமல் தாங்கி பிடித்தார்"

"வலது கால் முறிந்து இடது பக்கமாக வண்டியுடன் சாய அந்த மனிதர் என்னை பிடித்ததனால் என் இடது கால் முறிவில் இருந்து தப்பியது,"


"என் அம்மாவுக்கு இந்த சேதி அறிவிக்கப்பட்டு என் அம்மா, அக்கா, பாட்டி ஆகியோர் விபத்து நடந்த இடத்திலேயே வந்து அழுதனர்"
(நான் இறந்தால் எப்படி அழுவார்கள் என அப்போது புரிந்தது)

"நான் ரோட்டில் பிணம் போல் கிடந்ததைப் பார்த்து 108 க்கு தகவல் கொடுத்தனர் அந்த ஊர் மக்கள்"

"4 மணிக்கு விபத்து நடந்தது ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து 1½மணிநேரம் கழித்தே வந்தது."


"அருகே உள்ள மருத்துவ மனையில் என்னை அனுமதித்தனர்,அறுவைசிகிட்சையில் காலில் ப்ளேட் வைத்தார்கள்."

"கொஞ்ச நாட்கள் மருத்துவமனையில் இருந்து கொஞ்சம் கஷ்டப்பட்டு மருத்துவரின் அறிவுரைப்படி"Walker" உதவியுடன் நடந்து,பிறகு "Stick"  உதவியுடன் நடந்தேன்."

"பிறகு ஒரு வருடம் ஆகும் முன்னால்முன்னால் கால் இடறி விழுந்து மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை செய்தனர்."

"மீண்டும் ஒரு வருடத்துக்கு பின்னர் நடக்கும்போது கால் வளைவு ஏற்பட்டதால் மூன்றாவதாக அறுவைசிகிட்சை செய்யப்பட்டது."


"விபத்தின் மூலம் கால் 1¼ அங்குலம் உயரம் குறைந்ததால் சற்று சாய்ந்தவாறே என்னால் நடக்க முடிகிறது,உயரத்தை அதிகப்படுத்த மீண்டும் ஒரு அறுவைசிகிட்சை செய்ய வேண்டும்."

"விபத்துக்கு பின் கிடைத்த ஓய்வுநாட்களில் எனது முதல் முதலாளியின் ஆசீர்வாதத்தை முறியடிக்க அந்த இறைவன் அருள் புரிந்தார்,அவருக்குத் தெரியாத வேலைகளை கூட கற்றுக்கொண்டேன்."


இனி இந்த தளத்தை எப்படி உருவாக்கினேன்
என்பதை கொஞ்சம் சொல்கிறேன்.


"எனது விபத்துக்கு பின் பொழுதே போகாமல் வெளியே பறந்து திரிந்த நான் ஒரு கூண்டில் அடைபட்ட பறவையாகதான் இருந்தேன்,
அந்த நேரம்தான் 2013 ல் டிசம்பர் மாதம் சமூக வலைத்தளமாகிய முகநூலில் ஒரு கணக்கை உருவாக்கினேன்"

"அங்கே நண்பர்கள் பதிவின் மூலம் கவிதைகள் கொஞ்சம் கொஞ்சம்  வாசிப்பேன்,பிறகு கூகுளில் காதல் கவிதைகள் தேடிப்பார்த்து படித்து வந்தேன்."

"அங்கே எனக்கு அறிமுகமானது தமிழ்கவிதைகள் என்று A.P.தினேஷ் குமாரின் தளம்."


"அங்கே நிறைய கவிதைகள் படித்து அந்தத் தளத்திலே நான் முதல் முதலாய் ஒரு கவிதை என்ற பெயரில் ஒரு கிறுக்கலை அனுப்பி வைத்தேன்"

"அந்தக்கவிதையை அவர் தளத்திலே அதை வெளியிட்டார்."
நான் கிறுக்கிய முதல் கிறுக்கல்
"அதன் பிறகு ஏன் நாமே கவிதைகள் எழுத கூடாது என்று நினைத்தேன்,கற்பனை கவிதைகள் என்று பல கிறுக்கல்களை கிறுக்கி முகநூலிலே நண்பர்களிடம் பகிர்ந்து கருத்துகளும் விருப்பங்களும் வாங்கினேன்"

"அங்கே நான் எழுதிய கிறுக்கல்களை Copy ,Paste செய்து வேறு நண்பர்கள் பகிர்ந்தனர்"

"அது எனக்கு பிடிக்கவில்லை"

"அதனால் A.P.தினேஷ் குமார் மாதிரி ஒரு தளம் அமைத்து கவிதைகளை பகிரலாம் என்று நினைத்தேன்,"

"ஆனால் அப்போது என்னிடம் இருந்தது நோக்கியா C2 என்ற மாடல் கைப்பேசிதான்"

"பிறகு 2014 செப்டம்பர் மாதம் எனக்கு ஒரு ஆன்ட்ரைடு கைப்பேசி வாங்கித்தந்தாங்க,அதன் மூலம் புகைப்படத்தில் கவிதைகள் கிறுக்கி முகநூலில் தான் பகிர்ந்தேன்"

"பிறகுதான் 2015 ல் நவம்பர் மாதம் A.P.திதினேஷ்குமார் நண்பரின் தளத்திற்கு சென்றேன்,


அங்கே நான் கிறுக்கிய கவிதைக்கு நண்பர் திண்டுக்கல் தனபாலன் கருத்துரை தெரிவித்திருந்ததை பார்த்தேன்."





"அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன் தளத்தின் பதிவுகளை கொஞ்சம் படித்தேன்,எனது கைப்பேசியின் திரை முழுவதும் எனது கண்கள் மேய்ந்தது,எங்கேயாவது Create Blog இருக்கிறதா என்று..."



"கைப்பேசி திரையின் ஒரு மூலையில் இருந்தது Create Blog என்று இருந்தது,Ajai Sunilkar Joseph Kavithaigal என்று துவங்கினேன்,பிறகு பெயர் மாற்றம் செய்தேன்,கரையோரம் சிதறிய கவிதைகள் என்று."



"அப்போதுதான் நண்பர் திண்டுக்கல் தனபாலன்தனது தளத்தில் கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...
என்ற பதிவில் அருமை நண்பர் கில்லர்ஜி யைசொல்லி இருந்தார்..."


"அந்த நேரம்தான் நண்பர் கில்லர்ஜி யின் பதிவுகள்கொஞ்சம் படித்தேன்,அவரது பதிவுகளில் சில என்னுடன் பேசுவதும் உணர்ந்தேன்,அப்போது எனக்கு கருத்துரை இடத் தெரியாமல் கருத்துரை இட்டதுக்கு மேல் இடுவேன்,"


"நண்பர் கில்லர்ஜி யை தொடர்ந்தேன் அவரது பதிவுகளுக்கு தொடர்ந்து வருவேன் எனக்கு தெரிந்தது போலவே கருத்துரை இடுவேன்,

நண்பர் கில்லர்ஜி அவரது பதிவை தொட்டவர்களையே விடமாட்டார்,அவரை தொடர்ந்தால் விடுவாரா...!"

"என்னையும் தொடர்ந்தார்..."

"அருமை நண்பர் கில்லர்ஜி அவரது தளத்தில் பத்து முத்துக்களில் என்னையும் ஒருவனாக அறிமுகம் செய்தார்,இதோ பதிவின் இணைப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துவீரே..."

"நண்பர் கில்லர்ஜி அறிமுகம் செய்ததால் இந்தத்தளம் உங்கள் பார்வையில்
சீக்கிரம் கிடைத்து விட்டது,அன்பு நண்பர் கில்லர்ஜி க்கு என் மனமார்ந்த நன்றிகள்  தெரிவித்துக் கொள்கிறேன்.


"இப்போது...
                      
வெண்மதி Tailors 
O/o Ajai Sunilkar Joseph"






"அன்பான வலையுலக சொந்தங்களை இந்த பதிவில் சந்திப்பதில் பிரியமில்லாதவனுக்கு சந்தோஷம்தான்...

ஆனால்.....
                  என்னவோ வலையுலகை விட்டு ரொம்ப தூரமாக போனதாக உணர்கிறேன்,அதை நினைத்து மிகவும் வருந்துகிறேன்."ஏற்கனவே ஒரு பதிவில்"என்னை பற்றி கொஞ்சம்சொல்லி இருக்கிறேன்."

"அதில் சொன்னபடி எல்லாம் வல்ல இறைவன் அருளால் தையல் வேலையை ஓரளவுக்கு கற்றுக்கொண்டேன்,"

"6-7-2016 ம் தேதி என் வாழ்க்கையில் நான் உழைத்து பிழைக்கவே இந்த வெண்மதி எனக்காக உதித்தாள்,நான் இந்த வெண்மதிக்கு முதலாளி ஆகி விட்ட காரணம்தான் வலையுலகை விட்டு ரொம்ப தூரம்போன காரணம் கூட."


"அம்மா,அப்பா ஆசியுடன் தையல் கடையை ஆரம்பித்தேன் இறைவன் அருளால் அருமையாக இயங்கிக் கொண்டிருக்கிறது,


கடைக்கு தமிழ் பெயர்தான் வேண்டும் என்பதால், இந்த வெண்மதியை உதிக்க வைத்தேன்."


"இந்தப்பதிவுக்கு இப்போதாவது நேரம் கிடைத்தது என்பதுதான் சந்தோஷம்,

மன்னிக்கவும் சொந்தமாக நான்தொழில் துவங்கிய காரணத்தால் உங்கள்தளங்களுக்கு என்னால் வரமுடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்...
நான் உழைத்துப்பிழைக்க இந்த வெண்மதி உதித்தது மட்டும்தான் சந்தோஷம்,"

"இதோ என் வாழ்க்கையில் எனக்காக உதித்த வெண்மதி"



"(அன்பு நண்பர் Killergee என்னை காணவில்லை என்று ரொம்ப தேடினார் அவருக்காகவே இந்தப்பதிவு என்பது குறிப்பிடத்தக்கது.)"


(இது ஒரு மீள்பதிவு)

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

விழியழகே...!


விழியழகே...!

கோடி வானவில்
கூடி வந்து
உன் கண்ணுக்கு 
கருமை ஆனதோ...!

By...Ajai Sunilkar Joseph


மின்னழுத்தம்

ன் விழிகளின் 
உயர்மின்னழுத்தத்தால்
என் இதயத்தைக் 
குடிக்கும் மின்சாரம்
நீயடி...!

By...Ajai Sunilkar Joseph


வெள்ளைப்பூவே...!

பார்வையால்
வெளிச்சம் வீசி
என்னைக் கொள்ளைக்கொண்ட
வெள்ளைப்பூவே...!
உன் செவ்வாய் மலர்ந்து
ஓரிரு வார்த்தைகள்
பேசி விடு...

By...Ajai Sunilkar Joseph


என்னை அபகரித்த நினைவுகள்

ந்தன் இதயத்தை 
அபகரிக்கும் உந்தன் 
நினைவுகளை தட்டியெறிந்துப்
பார்க்கிறேன்,
ஒவ்வொன்றும் 
இரண்டிரண்டாய்
என்னைப் புரட்டிப்போட்டுக்
கொல்லுதடி...!

By...Ajai Sunilkar Joseph


அகலாய் அவள் விழிகள்

கலும் அகலாய் 
அவளிருக்க,
அவளில் அகலாய் 
அவள் விழியிருக்க,
விழுந்தேன் அவளிடம் 
எண்ணெயாய்,
காதல் தீபம் ஏற்றிவிட...!

By...Ajai Sunilkar Joseph





கரையோரம் சிதறிய கவிதைகள்


செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

எந்தன் இதய அஞ்சலி

எந்தன் இதய அஞ்சலி



கால்கள் முளைத்த
பூக்களில் ஒன்றாய்
எந்தன் இதயமதில்
இனிந்தாள் அன்று...!

அவளுடன் மணவறை
மணமோ கிடைக்கவில்லை
அதனால் மனதோடு
மணந்து விட்டேன்...

உள்ளத்தில் குடிவைத்து
உள்ளூரில் வாழ்கின்றேன்,

உள்ளத்தை உடையவளின்
உள்ளமதைக் கொண்டதினால்...!
அவளை மறப்பதற்கு மனமில்லாமல்
எந்தன் மனதோடு புதைத்து விட்டேன்...!

எந்தன் தாய்மொழி உதிர்த்து,
வார்த்தைகள் கோர்த்து,
என்னிதயக் கல்லறையில்
கவிதைகளாய் சேர்க்கின்றேன்,

கண்மணியவளின் காதலுக்காய்,
எந்தன் இதய அஞ்சலியாக...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

வியாழன், 15 பிப்ரவரி, 2018

நீ எங்கே இருக்கிறாய்....?

நீ எங்கே இருக்கிறாய்...?



டபடவென பறக்கும்
பட்டாம்பூச்சியாய்
சில்லெனச் சிறகடித்தே
தேடுகிறேன் என்னவளை...!
எங்கே இருக்கின்றாளோ
தெரியவில்லை...!

என் வருங்கால மனைவியே...!
உன் விழிகளால் என் 
இதயத்தில் நீ நுழைய 
நான் காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

உந்தன் விழியோடு
என் விழி வைத்து,
உன்னை மடியினில் சாய்த்து 
முத்தமிட காத்திருக்கிறேன்...
முத்தழகே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை உயிரிலே ஊற்றி 
உதிரமாய் உரு கொடுத்து
இழுத்தணைத்து இதழ்களில்
தேன் பருக காத்திருக்கிறேன்...
தேனமுதே நீ எங்கே இருக்கிறாய்...!

நீல வானில் 
வெள்ளை நிலவிடம்
உளறிக் கொட்டுகிறேன்,
உனக்கான கவிதைகளை
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னோடு கொஞ்சி 
விளையாட கெஞ்சல்களாய் 
கவிதைகள் தொடர்கிறேன்...
பூலோக தேவதையே
நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னை
மாலையிட்டு மணமுடித்து,
நெஞ்சோடு மஞ்சம் வைத்து
மார்போடு சேர்த்தணைக்க
மன்னவனாய் காத்திருக்கிறேன்
என் மனைவியே நீ எங்கே இருக்கிறாய்...!

உன்னிடம் காதல் 
கொண்ட இதயத்தில்
உன்னை குடிவைக்க
காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!

விழிகளால் வீழ்த்தும் பெண்ணே
உன்னை கரம் பிடிக்கும் 
நாள்தான் எனக்கு காதலர்
தினமென காத்திருக்கிறேன்...
நீ எங்கே இருக்கிறாய்...!


                                                       -அஜய் சுனில்கர் ஜோசப்



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்



ஞாயிறு, 11 பிப்ரவரி, 2018

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...

பொக்கிஷமாய் சேமிக்கிறேன்...


ன் விழிகள் பாய்ந்த
என் இதயத்தில் 
கவிதைகள் சொட்டுகிறது...
அத்தனையும் சேர்த்து 
எட்டாத உயரத்தில்
கிட்டாத பொக்கிஷமாய்
சேமிக்கிறேன்,
கண்மணி உந்தன் 
காதலைத் தந்தால் 
கவிதைகள் தூவி 
உன்னோடு வாழ்வேன்,
என் வாழ்வெல்லாம்...

-Ajai Sunilkar Joseph 


காணொளி





கரையோரம் சிதறிய கவிதைகள்
-Ajai Sunilkar Joseph

புதன், 7 பிப்ரவரி, 2018

அவளைப் பார்த்தால் சொல்லி விடுங்கள்....

அவளைப் பார்த்தால் 
சொல்லி விடுங்கள்....



சாலையோரம் செல்லும் பூக்களே
என் இதயம் தேடும் 
பூ எங்கே சொல்லுங்கள்...
அவளைக் கண்ட நேரத்தில்,
என் நெஞ்சத்தின் ஓரத்தில்,
பாலைவனம் ஆனதே 
சோலைவனம் போலவே...!
அங்கே உதிரும் சருகுகளில்
அவளின் காலடிச் சத்தம் கேட்கவே,
கண்கள் கூட இமைக்காமல் 
காத்துக் கொண்டே இருக்கிறேன்,
பார்த்தால் சொல்லி விடுங்கள்
பாதகத்தி என்னை பாதையோரம்
காக்க வைத்து பாதி உயிரை எடுக்கிறாள்,
மீதி உயிரை வைத்துக்கொண்டு
மிஞ்சிய காதல் நினைவுகளை
அவளைக் கெஞ்சியே எழுதுகிறேன்
கரையோரம் சிதறிய கவிதைகளை,
வாசகியாய் வந்து காதல் யாசகத்தை புரிவாளா...!
புரிந்தும் புரியாமல் நடிப்பாளா...!
பூக்களாய் வந்து புன்னகை தருவாளா...!
புரியாமல் புன்னகையை பாறித்தே செல்வாளா...?


By...
Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்