எந்தன் இதய அஞ்சலி
கால்கள் முளைத்த
பூக்களில் ஒன்றாய்
எந்தன் இதயமதில்
இனிந்தாள் அன்று...!
அவளுடன் மணவறை
மணமோ கிடைக்கவில்லை
அதனால் மனதோடு
மணந்து விட்டேன்...
உள்ளத்தில் குடிவைத்து
உள்ளூரில் வாழ்கின்றேன்,
உள்ளத்தை உடையவளின்
உள்ளமதைக் கொண்டதினால்...!
அவளை மறப்பதற்கு மனமில்லாமல்
எந்தன் மனதோடு புதைத்து விட்டேன்...!
எந்தன் தாய்மொழி உதிர்த்து,
வார்த்தைகள் கோர்த்து,
என்னிதயக் கல்லறையில்
கவிதைகளாய் சேர்க்கின்றேன்,
கண்மணியவளின் காதலுக்காய்,
எந்தன் இதய அஞ்சலியாக...
கால்கள் முளைத்த
பூக்களில் ஒன்றாய்
எந்தன் இதயமதில்
இனிந்தாள் அன்று...!
அவளுடன் மணவறை
மணமோ கிடைக்கவில்லை
அதனால் மனதோடு
மணந்து விட்டேன்...
உள்ளத்தில் குடிவைத்து
உள்ளூரில் வாழ்கின்றேன்,
உள்ளத்தை உடையவளின்
உள்ளமதைக் கொண்டதினால்...!
அவளை மறப்பதற்கு மனமில்லாமல்
எந்தன் மனதோடு புதைத்து விட்டேன்...!
எந்தன் தாய்மொழி உதிர்த்து,
வார்த்தைகள் கோர்த்து,
என்னிதயக் கல்லறையில்
கவிதைகளாய் சேர்க்கின்றேன்,
கண்மணியவளின் காதலுக்காய்,
எந்தன் இதய அஞ்சலியாக...
By...Ajai Sunilkar Joseph
காணொளி
கரையோரம் சிதறிய கவிதைகள்
தங்களது காதலி அஞ்சலிக்கு வடித்த அஞ்சலி நன்று
பதிலளிநீக்குநன்றி நண்பரே ...!!!
நீக்குநன்று. பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குநன்றி நண்பரே்...!!!
நீக்குநல்ல கவிதை
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
பதிலளிநீக்குகாணொளியிலும் ரசித்தேன். நன்றாக வாசிக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு