திங்கள், 28 மார்ச், 2016

தாயாகி போனாளே...

கண்களில் காதல் கண்டு
இதயங்கள் கர்ப்பம் கொண்டு
கனவுகள் பல கருவாகி
நினைவெனும் மழலை பிறந்ததால்...

அவளின் அவனாய் தாலிக்கட்டி
அவள் நெஞ்சில் ஆட வைத்தேன்
பஞ்சணையில் தலை சாய்க்க
நெஞ்சணையில் அணைத்துக் கொண்டாள்...

முத்தழகே உன்னை பெற்றெடுக்க
மாதங்கள் சில மூச்சடக்கி
கருவினில் வாழ்ந்த உன்னை
என் மகனாக அறிமுகம் செய்தாள்...

என்னை கனவில் சுமந்தாள்
உன்னை கருவில் சுமந்தாள்
நம்மை அவள் சுமந்ததால்
இருவருக்கும் தாயாகிப் போனாளே...


Ajai Sunilkar Joseph


By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 16 மார்ச், 2016

அவசரம் மிஞ்சிய வஞ்சி....

கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி பேசி...

நெஞ்சங்கள் முழுதும் கொஞ்சல்கள் மிஞ்சி...

காதல் நஞ்சை தின்ற வஞ்சிக் கொடியின்...

காதலன் கண்ணால் காமம் கெஞ்ச...

காதல் நெஞ்சங்கள் காமம் கொஞ்ச...

அவசரம் மிஞ்சி மஞ்சம் தேடி...

வஞ்சிக் கொடி கற்பை இழந்து...

வஞ்சி கண்ணில் கண்ணீர் மிஞ்சி...

வஞ்சி நெஞ்சில் நினைவுகள் மிஞ்சி...

நித்தம் நித்தம் கண்ணீர் மிஞ்ச

மரணத்தை மெச்சி கல்லறை

கொஞ்ச வஞ்சியவள் போனாளே...!


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

திங்கள், 14 மார்ச், 2016

மீண்டும் நட்பால் இணைந்தோம்....

பள்ளிக்கூட பருவத்திலே

              அறிமுகமான முதலாம் நாள்...

பிஞ்சு நெஞ்சங்களில்

              பாசாங்கில்லா பாசத்தால்...

துவங்கினதே இந்த நட்பு...

              இன்றும் முடிவில்லாததே நட்பு...

கல்வி முடிந்ததும் பிரிந்தோம்

              கல்லூரி காலமும் தொடர்ந்தோம்...

மீண்டும் மறுமுறை பிரிந்தோம்...

              பணிகளும் வந்தது மறந்தோம்...

அறிமுகமானதே இணையம்...

              மீண்டும் நட்பால் இணைந்தோம்...

இங்கே மீண்டும் நட்பின் உதயம்...

              இணைந்ததே நம் நட்பில் இதயம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

ஞாயிறு, 13 மார்ச், 2016

காதல் கலைக்கப்பட்டதோ....!

இருவர் கண்களின்

                     உறவால் உணர்வுகள்

தூண்டப்பட்டு இதயத்தில்

                     கருவானதே காதல்...

அன்பினால் அது

                     சுமக்கப்பட்டும்...

திருட்டுத்தனமாய் அது

                     வளர்க்கப்பட்டும்...

காதலர்கள் இதயத்தில்

                     கருவான காதல்

திருமணமாய் பிரசவிக்கப்

                     படுமென்று காத்திருந்தும்...

கருவான காதல்

                     கலைக்கப்பட்டதோ...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வியாழன், 10 மார்ச், 2016

சிறந்த தலைவன்...

மீண்டும் ஒரு முறை இந்த
வரிகளை பதிவு செய்கிறேன்...

இலவசம் ஏனோ

இவன் வசம் இல்லை...

இவன் கண்களில் ஏனோ

தூக்கமும் இல்லை...

காரணம் தானோ

சுயநலம் இல்லை...

இவன் குருதி கொதிப்பதோ

பொதுநலன் கருதி...

குடும்பத்தின் கவலை ஒருபக்கம்...

நாட்டு மக்கள் கவலை மறுபக்கம்...

மக்கள் பஞ்சம் தீர்க்க

இவன் நெஞ்சம் பதறும்...

இவனே சிறந்த தலைவன்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 8 மார்ச், 2016

மண்ணை விட்டு மறைந்தாளோ...!

கண்ணில் கண்ட
                  காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
                  உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
                  நேரமும் இதுதானோ...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
                  என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
                  நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
                  காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
                  காவல் காப்பேனே...!

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் நம் தன்மானம்....

அம்மா , அப்பா என்று

அழைக்கும் செல்லத்

தமிழை விட்டு விட்டு...

ஆங்கிலம் தேடி போன

செல்வத் தமிழனே...

புரிந்து கொள் தமிழ்

நம் அவமானம் அல்ல...

தமிழ் நம் தன்மானம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

புதன், 2 மார்ச், 2016

பூஞ்சோலைக்குள் பூ வைக்கும் பூவை...

பூ வைக்கும் பூவைக்காக

பூத்திருந்து காத்திருந்தேன்

பூஞ்சோலைக்குள் நான்...

பூஞ்சேலை கட்டி வந்த

பூலோக தேவதை பூந்தண்டில்

பூத்திருந்த என்னை அவள்

பூங்கூந்தலில் ஏந்தி சென்றாள்...

பூவை கூந்தலில் ஓர் நாள்...

பூவாசம் செய்ததே சந்தோஷம்...

Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்

செவ்வாய், 1 மார்ச், 2016

விவசாயி காதலோ....!

நட்டு வச்ச நாத்தெல்லாம்

              துளிர் விட்டு வளருதடி...

நாத்து நட்ட என் நெஞ்சம்

              உன் நெனப்புல வளருதடி...

பசிச்சாலும் தவிச்சாலும்

              உன் நெனப்பே போதுமடி...

உன் நெஞ்சுல நான் வெதச்ச

              என் காதல் எங்க புள்ள...

பூத்திருந்து வெளஞ்சிடிச்சோ

              காத்திருந்து அறுத்தாயோ...


Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்