கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சி பேசி...
நெஞ்சங்கள் முழுதும் கொஞ்சல்கள் மிஞ்சி...
காதல் நஞ்சை தின்ற வஞ்சிக் கொடியின்...
காதலன் கண்ணால் காமம் கெஞ்ச...
காதல் நெஞ்சங்கள் காமம் கொஞ்ச...
அவசரம் மிஞ்சி மஞ்சம் தேடி...
வஞ்சிக் கொடி கற்பை இழந்து...
வஞ்சி கண்ணில் கண்ணீர் மிஞ்சி...
வஞ்சி நெஞ்சில் நினைவுகள் மிஞ்சி...
நித்தம் நித்தம் கண்ணீர் மிஞ்ச
மரணத்தை மெச்சி கல்லறை
கொஞ்ச வஞ்சியவள் போனாளே...!
Ajai Sunilkar Joseph
பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்
ரசித்தேன் நண்பரே..
பதிலளிநீக்குநன்றி நட்பரே
நீக்குகாதலிக்கும்போது பெண்கள் எச்சரிக்கையாக இல்லாவிட்டால். இந்நிலைதான் என்பதை வலியுறுத்தும் கவிவரிகள்
பதிலளிநீக்குஆமாம் நண்பரே....
நீக்குஒரு ஆண் அவசர
பட்டுதான் இந்த
வஞ்சி நிலைமை
கொடூரமாக்கப் பட்டுள்ளது...
எச்சரிக்கை வேண்டும்
காதலிக்கும் வஞ்சிகளுக்கு...
வரிகளில் வலிகள் இருக்கின்றதே.... இருப்பினும் அருமை வாழ்த்துகள் நண்பரே
பதிலளிநீக்குஆமாம் நண்பரே....
நீக்குவலிகள்தான் இந்த
வஞ்சியை மரணத்தை
கொஞ்ச வைத்தது....
வருகைக்கும் கருத்துரைக்கும்
நன்றி நண்பரே....
கருத்து அருமை அஜய்!
பதிலளிநீக்குநன்றி நட்பே நன்றி
நீக்குமுள்ளில் இலை பட்டாலும் .இலையில் முள் பட்டாலும் இலைக்குத்தான் சேதம் என்பது ,காதலிகள் உணரவேண்டிய பழமொழி :)
பதிலளிநீக்குஆமாம் நண்பரே ...
நீக்குஇதை உணர்ந்தாலே
வலிகளை குறைக்கலாம்...
அந்தக் காலத்தில் பொதுவன வார்த்தையாக -
பதிலளிநீக்குகண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பார்கள்..
ஆனால் இன்றைக்கு -
கண்ணும் இல்லை.. கருத்தும் இல்லை..
கண்ணீர் ஒன்றுதான் மிச்சம்..
உண்மையை சொன்னீர் நண்பரே....
நீக்குயார் அந்த வஞ்சக்கிளி...?
பதிலளிநீக்குகற்பனை வஞ்சிக்கொடி
நீக்குஆ..அங்கும் மரணமா....???
பதிலளிநீக்குஆம் நண்பரே ....
நீக்குகாதலிக்கும் வஞ்சிகள்
விழிக்கவே இந்த வஞ்சி
மரணம் கொஞ்ச போனாள்...
சிறந்த பாவரிகள்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குகாதலில் கவனம் தேவை -கவிதை அருமை
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நீக்குபிரியமில்லாதவனின் /// பிரியமில்லாதவனிடமிருந்து இத்தனை ப்ரியம் வெளிப்படுமா..
பதிலளிநீக்குஅருமை தொடர்ந்திடுங்கள் தொடர்கிறேன்...
ஆமாம் பிறர் பிரியம்தான் எனக்கு இல்லை....
நீக்குஆனால் என்னிடம் பிரியமுண்டு...
நன்றி நட்புறவே தொடருங்கள்....
வணக்கம் ,
பதிலளிநீக்குதாமத வருகைக்கு மன்னியுங்கள், நல்ல வரிகள்,,
அவளுடையது காதல்
அவனுடையது காமம்
காதல் எதுவும் செய்யும்
காமம் வலிக் கொடுக்க மட்டுமே
அவள் கல்லறையைக் கொஞ்சியதும்
காதல் தான்,,
அருமை அருமை,, தொடருங்கள்,,
வாழ்த்துக்கள்.
தாமத வருகை இல்லை இது
நீக்குநானும் நான்கு நாட்களாக இந்த
பக்கமே வரவில்லை....
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
நன்றிகள் பல நட்பே....
அருமையான வரிகள் அஜய். தொடருங்கள்.
பதிலளிநீக்குநன்றி அம்மா....
நீக்குஎன்னுடைய தளத்தினை பார்த்து சரியாக இருக்கிறதா என்ற கருத்தினை வழங்க கோருகிறேன்.
பதிலளிநீக்குஎனக்கென்ன தெரியும் நண்பரே
நீக்குபார்க்கிறேன் நண்பரே....