புதன், 29 ஆகஸ்ட், 2018

இறைவனுக்கு நன்றி...!

இறைவனுக்கு நன்றி...!



நாம ஒண்ணு நெனச்சா  கடவுளும் விதியும்  இன்னொண்ணு நெனைக்கிறாங்க...!
என்ன வாழ்கைடானு நினைக்கிறதா இல்லை இதான் வாழ்க்கைனு நெனைக்கிறதா
ஒண்ணுமே வெளங்கல,சரி கஷ்டம் வரும்போது கூடவே  புலம்பலும் மனிதனுக்கு 
வருவது இயல்புதானே?அதான் இந்த புலம்பல்,இரண்டடி நடந்தால் நாலடி பின்னுக்கு 
இழுக்குதுங்க இந்த விதி,வரும் கஷ்டத்த வராதேனு சொன்னாலும் அது கேட்கிற மாதிரி தெரியல, அதான் கொஞ்சம் இஷ்டப்பட்டு வரவேற்கிறேன்...!


பெரிய கஷ்டம் ஒண்ணும் இல்லைங்க, 16/8/2018 அன்று என்  சகோதரனுக்கு ஒரு விபத்து 
நடந்ததுங்க! அதான் இந்த புலம்பலே,பாதத்தை தூக்க உதவும் நரம்புகள் அனைத்தும் 
விபத்தில் துண்டிக்கப்பட்டது , பிறகு மருத்துவ மனையில் அனுமதித்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து 24/8/2018 அன்று வீட்டுக்கும் வர சொல்லிட்டாங்க. என்னதான் மனச
தேத்திட்டு ஆறுதல் சொன்னாலும் வலி வலிதானே...!

விபத்து அன்றிலிருந்து சரியாக வேலை செய்ய முடியல,பதிவிட முடியல, மருத்துவமனையில் 
சகோதரன் கூட மூன்று தினங்களே தங்கியிருந்தேன்.சரி அவனை என் அப்பாதான் கூட 
இருந்து கவனித்துக்கொண்டார்,பாவம் அவர் விதிய பாருங்களேன் அவரை நாங்கள் 
பார்த்துக் கொள்ளும் வயதில் எங்களை பார்த்துக் கொள்கிறார்.கடவுள் போல கவனிக்கிறார்,

இந்நேரம் இறைவனுக்கு நன்றி சொல்லியே ஆகணும் இப்படியொரு தந்தையை தந்தமைக்கு.



ஏதோ ஓரு பயணம்,

அதில் எத்தனையோ 

ஏற்ற இறக்கங்கள்,

கற்களும்,முட்களும் மிதித்து 

துவண்டு போகாத ஓர்

உள்ளத்தின் கால்கள்,

வேர்த்து வெலவெலத்துப் போன

தேகத்தின் மூச்சிரைச்சல்,

முடங்கிப் போய்டுவேனோ

என்ற பயம் உள்ளே,

பயத்தை சாகடிக்க தைரியம் வெளியே,

எழ எழ வீழ்ச்சி,

காலத்தின் சூழ்ச்சி,

தேவன் கைகளின் பொம்மையாய்,

குயவன் கை மண்பாண்டமாய்

வனையப் படுகிறேன்,

சிறகினை கொடுத்துவிட்டு

சிறகை பறித்தால் வலிக்குமா...!

ஓரிறகை பறித்தாலும் 

பறக்க முயலும் பறவையாய்

முயல்கிறேன் நான்,

இதயத்தின் வலுக்கூட்டி

இமயத்தின் வெற்றியைத் தொட,

சோதனை பலவென வந்தாலும் 

சோர்வே இல்லாத இதயம்,

தந்த இறைவனுக்கு நன்றி...!


Ajai Sunilkar Joseph




8 கருத்துகள்:

  1. சகோதரர் விரைவில் குணமாக எங்கள் பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  2. விரைவில் சகோ குணமடைய வேண்டிக் கொள்கிறேன். உங்கள் அருமையான தந்தைக்கு வணக்கங்கள்.

    பதிலளிநீக்கு
  3. சகோதரர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்...

    பதிலளிநீக்கு
  4. உங்கள் சகோதரர் விரைவில் குணமடைய எனது பிரார்த்தனைகள்....

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!