வியாழன், 27 செப்டம்பர், 2018

உன் நினைவுகள்

உன் நினைவுகள்



ள்ளிரவில் விழித்தெழுந்தேன்,

காரணம்...

                 உன் நினைவுகள்

என்னை ரணங்களாய்

கொல்வது போல உணர்வுகள்...

என் தூக்கம் தொலைத்து

புரண்டு புரண்டு படுத்தும்

என் தூக்கத்தை காணேன்,

தேடிப் பார்க்கிறேன் உன்னை,

கண்ணில் சிக்காமல் நழுவி

விடுகிறாய் ஒவ்வொரு கணங்களும்,

மண்ணில் ஏன் பிறந்தேன்

என்றுத் தோன்றுகையில்,

எனக்குள் வேரூன்றுகிறாய்,

நினைவின் விருட்சமாய்

வளர்ந்தும் விட்டாய் பெண்ணே,

உன்னை நிஜத்தில் காணவே

இமை வாசலைத் திறந்து

காத்திருக்கிறேன்,வந்து

இதயத்தில் நுழைந்து விட்டு

இமைகளை மெதுவாக மூடி விடு.

Ajai Sunilkar Joseph 









ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

என்னவென்று  நானெழுத  உனக்காக  வரிகளை...?

என்னவென்று நானெழுத உனக்காக வரிகளை...?



ன்னவென்று
நானெழுத
உனக்காக
வரிகளை...?

ஏதோ எழுத நினைக்கிறேன்
இருந்தும் மறந்து விடுகிறேன்,
ஏன்தான் என்று புரியவில்லை...!

இதயம் எழுதத்தூண்டுகிறது,
கைகள் எழுத மறுக்கிறது,
கைகள் எழுத நினைக்கிறது
ஆனால் இதயமோ உன்னை
சிந்திக்க மறுக்கிறது,

ஒன்று நினைக்க,
ஒன்று மறுக்க
உனக்கும் எனக்குமென
இடைவெளி மட்டும் நீண்டு
கொண்டே இருக்கிறது...

காரணம்தான்
என்னவென்று
விளங்கவில்லை,

என்னை நானே விசாரணைக்
கைதியாக்கி விசாரித்துப்பார்க்கிறேன்,
இவ்வழக்கின் தீர்ப்பொன்றும்
எனக்குக் கிடைக்கவில்லை,

இப்படி இருந்தால்
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

கனவுகளுக்குள்ளே
தத்தளிக்கிறேன்
பெண்ணே...
என்னவென்று நானெழுத
உனக்காக வரிகளை...?

என்னோடு முடக்கிவைத்த
உன் ஞாபகங்களை
எடுத்துச்சென்ற பிறகு
நான் எரிக்கட்டையாய்
போன விறகு,

இதையறிந்த பின்னும்
எப்படிக் கேட்கிறாய்
உனக்கான வரிகளை...?

நெஞ்சில் கொள்ளி வைத்து விட்டு
வஞ்சி உன்னால் எஞ்சிய வலிகளை
மட்டும் கொஞ்சி விளையாடுகிறது
என்னுள் இருக்கும் இதயம்,

வலிகளை எனக்கு வரமாக்கி
விட்டு வார்த்தைகளை
சாபமாக்கிப் போன பிறகு
என்னவென்று நானெழுத
உனக்கான வரிகளை...?

Ajai Sunilkar Joseph 




வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பைத்தியக்காரன்...

பைத்தியக்காரன்...


காற்றில் அசையும்போது

திசைகள் தேடும் பறவையாய்

உன்னைத் தேடுகிறேன்,

திரும்பிய திசையெல்லாம்

விரும்பிய உன் பிம்பம்

மட்டுமே காண்கிறேன்,

உன்னையே பிரதிபலிக்கச்

செய்யும் உன் ஞாபகக்

கண்ணாடிகளை அதிகம்

பார்த்து பாதிக்கப்பட்டுவிட்டேன்...

உன் உறவிழந்த பின்னால்

பெண்ணே...!

சிறகிழந்த பறவையானேன்,

நான் அழுதிடும் வலிகளை

எழுதிடும் வரிகளால் உனக்குத்

தொடுத்துப்போகிறேன்

கவிதை மாலையாக,

புரிவதும் பிரிவதும் உன்

உரிமை என்ற பின் உனக்கு

என் காதலை புரியவைக்க

முயற்சிக்கும் நான் உண்மையிலேயே

பைத்தியக்காரன்தான்...

Ajai Sunilkar Joseph


காணெளி



By...
-A