வியாழன், 5 அக்டோபர், 2017

தேவதையை தேடி வலிகள் வந்ததோ கோடி...

தேவதையை தேடி 
வலிகள் வந்ததோ கோடி...


கற்பனைகள் சேர்த்து கவிதைகள் 
சில எழுதியிருந்தாலும்...
சொந்த வலிகளை கவிதைகளாய் 
வாசிக்க வேண்டுமென சிறு 
ஆசைக்காக மட்டுமே வாசிக்கிறேன்...


காதல் சொல்ல ஓடி வந்தேன்,
தேவதை உன்னையே நாடி வந்தேன்...
பொய்கள் சேர்த்து நீ கட்டிய காதல்
உணர்ந்த பின் என்னிதயத்தில் மோதல்...
கலங்கத் தெரியா கண்ணில் கலகம்,
நீதானடி எந்தன் உலகம்...
உண்மைத் தெரிந்து உதறிய பின்னே,
என்னிதயம் கதறிய வார்த்தைகள் எங்கே...?
சொல்லியழ நாதியில்லை 
சிதறி விட்டேன் கவிதைகளாய்,
என்னைத் தழுவும் நினைவுகளை 
சொல்லி விட்டேன் அலைகளிடம்...
என்னால் தாங்க முடியா பாரங்களை
விட்டெறிந்தேன் தூரங்களாய்...
மீண்டும் உறுத்துது பெண்ணே உள்ளம்,
என்னிடமே ஏன் கள்ளம்...!
என்னைக் கொள்ளையிட்டாய் உறவே
நெஞ்சில் கொள்ளியிட்டாய் மறவேன்...
காதல் என்றால் இதுவோ...?
என்னை மாற்றம் செய்வது எதுவோ...?
மதுவைத் தொட்டால் நானும் மதியிழந்து போவேன்,
மாதுவே உன்னால் நானும் கதியிழந்து போனேன்...
குற்றமில்லா உன்னை உதறி விட்டு போனேன்,
நித்தம் உனை நினைத்து கதறி விட்டு போனேன்...
உயிராய் உன்னிடம் உறவாட
என் வலிகளை விட்டே போகிறேன்...

காணொளி







ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

பிரியமானவளே உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

பிரியமானவளே...
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...

ன்னிதயத்தின் பிரியமானவளே
உன் பிரியமில்லாதவன் எழுதுவது...
நான் நலமாகத்தான் இருந்தேன்,
நீ என்னை விட்டுப் பிரியும் வரை...
நீ என்னைப் பிரிந்து என்னுள்ளே
என்னை சிந்திக்க வைத்தாய்,
அளவுக்கு அதிகமான அன்பு
வைத்தால் என்னவாகும் என்று...
நீ என்னைப் பிரிந்த நாள்முதல்
என்னுயிரும் என்னைப் 
பிரிந்த உணர்வுகள் எனக்குள்...
இதயமே நீயும் என்னை
விட்டு பிரிந்து விடு,
நீ இருந்ததினால் தான் அவளை 
என்னுயிராய் காதலித்தேன்...
அவளே பிரிந்து போன பிறகு
நீ மட்டும் எதற்கு...?
வலிகளை சகித்துக் கொள்ளவா...?
தயவு செய்து என்னைப்
பிரிந்து விடு இதயமே...!
நான் நிம்மதியாக என் 
கல்லறைக்கு போவேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


திங்கள், 11 செப்டம்பர், 2017

வித்தகத்தி உன் நினைவால்...

வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி...


ன்னைத் தனிமையில் 
வதைக்கும் உன் நினைவை...
என் கனவாய் நான் ரசித்து,
நித்தம் அதை நினைத்து, 
பித்தம் எனைப் பிடித்து...
வித்தகத்தி உன் நினைவால்,
புத்தகத்தில் கவியெழுதி,
என் கண்ணழுத கண்ணீரை,
உன் காலடியில் நான் தெளித்து,
விண்ணோடு நான் சேர
என்னை மண்ணோடு புதைத்தேனோ...!
உயிரென்ற ஒருசொல்
உனையென்றும் சுற்றி வர
இங்கேயே விட்டுச் செல்கிறேன்...
மீண்டும் ஒரு ஜனனம் என்றால்
என் மரணம்வரை நீ வேண்டும்...
மாறாத மனதோடும்,
மறவாத நினைவோடும்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

கன்னக்குழியில் வீழ்த்தி யுத்தமொன்று செய்கிறாள்...

கன்னக்குழியில் வீழ்த்தி 
யுத்தமொன்று செய்கிறாள்...


பெண்ணொருத்திக் கண்டு,
அவளின் விழிகள் கண்டு,
சிரிக்கும் கன்னம் இரண்டு,
அதிலே குழிகள் கண்டு,
அதனுள் ஆழ விழுந்தேனே...
விழுந்து விட்ட நானும்,
எழுந்து விட நினைத்தும்,
மங்கை மனதில் மயங்கி,
கன்னியின் காதலில் மடிந்தேன்...
அவளோ காதல் தந்தாள்,
என் இதயம் இதமாய் துடிக்க,
அவள் நினைவோ என்னை ஆள,
கட்டி விட்டேன் காதல் கோட்டை...
கட்டிவிட்ட காதல் கோட்டையில்...
என் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து...
என் இரத்த நாளங்கள் முழுவதும் சென்று...
அகிம்சையாய் இம்சை செய்கிறாள்...
முத்தங்கள் தந்து யுத்தங்கள் செய்கிறாள் 
என் இதயத்தின் ராணியவள்...
அவளிடம் தோற்கிறேன் யுத்தத்தில்...
அவளுக்காக வாழ்கிறேன் மொத்தத்தில்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி



திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...


னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க , மனதில் கனவோடு,
மங்கையவள் நினைவோடு,
மரணத்தை தழுவி , மண்மீது உதிர்ந்தேனே...!
தேவதையவள் வாழும் இடத்தில்,
மனிதனாய் நான் வாழ அனுமதி 
இல்லையென புரிந்து கொண்டேன்...
தேவதையவளின் பிரிவுக்கு பின்னே...
இறுதிவரை உறுதி செய்யாத காதலுடன்
அவள் நினைவாய் தொடர்கின்றேன்
என் காதல் பயணத்தை...
வழிதனில் கன்னியாய் வருவாளா...?
விழிதனில் கண்ணீராய் வருவாளா...?
புரியாத நானும் பரிவாக நிற்கின்றேன்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி






வெள்ளி, 2 ஜூன், 2017

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...

முற்றுப்புள்ளி வைத்தால் தொடர வைக்கிறாள்...


னம் விரும்புவதோ
மரணத்தை மட்டுமே...!
உன் நினைவுகள்தான்
என்னமோ அதைத் 
தள்ளிப்போடுகின்றன...
என் வாழ்க்கைக்கு
முற்றுப்புள்ளி வைக்க
முடிவு செய்த பின்பும்
கமா போட்டு தொடர 
வைக்கிறாய் ஏனடி...?


By...Ajai Sunilkar Joseph




வியாழன், 1 ஜூன், 2017

பிறவிப்பலனை அடைவேனடி...

பிறவிப்பலனை அடைவேனடி...


நெஞ்சத்தில் மஞ்சம் வைத்து
கொஞ்சமாய் கொஞ்சி சென்று 
என்னிதயத்தை மிஞ்ச வைத்து,
அதிலே எஞ்சி நின்ற என் 
இதயக் காதலின் வஞ்சி மலரே...
அதில் நீதானடி என்னுயிரே...
நானே உனக்குத் தாலிகட்டி
உன் நெஞ்சில் ஆட வைத்து,
என் நெஞ்சை மஞ்சமாக்கி
உன்னைக் கொஞ்சி உறங்க 
வைத்தால் என் பிறவிப்பலனை
அடைந்தே விடுவேனடி...
என் காதல் கண்ணம்மா...

By...Ajai Sunilkar Joseph




புதன், 10 மே, 2017

போதும் இந்தப் பிறவி...

போதும் இந்தப் பிறவி...


நீ என்னை விலகிட 
நினைக்கும்போதெல்லாம்...
அடிக்கடி இறந்து விடுகிறேன்,
அதனால் தான் என்னமோ
வாழ்ந்தும் முடித்து விட்டேன்,
உன்னோடு உன் அன்பில்..
போதும் இந்தப் பிறவி,
இன்னொரு ஜென்மம் இருந்தால்,
அதிலொரு பிறவி வேண்டும்,
உணர்வுகளே இல்லாத கல்லாக....


By...Ajai Sunilkar Joseph



காணொளி



புதன், 19 ஏப்ரல், 2017

உன் நினைவை காவல் காப்பேனே...!

உன் நினைவை காவல் காப்பேனே...!


ண்ணில் கண்ட 
                  காட்சியெல்லாம்
கண்மணியே நீதானே...
                  உன்னை நினைத்து
நெஞ்சம் நெகிழும்
                  நேரமும் இதுதானே...!
நீ மரித்தாலும் மறைந்தாலும்
                  என்னை விட்டு பிரிந்தாலும்...
மண்ணோடு புதைந்தாலும்...
                  நெஞ்சில் புதையாமல் இருப்பாயே...!
புதைந்தாலும் புதையல்
                  காக்கும் பூதம் போல்...
உந்தன் நினைவை
                  காவல் காப்பேனே...!

By...Ajai Sunilkar Joseph 



காணொளி




வெள்ளி, 7 ஏப்ரல், 2017

கரையோரம் சிதறிய கவிதைகள்

கரையோரம் சிதறிய கவிதைகள்

அவள் என்னைக்
கண்டெடுத்த நாள் முதலாய்
நான் தொலைந்தே தான்
போனேனோ...!!!

அன்று முதல் அவளின்
அவனாய் அவள் இதயம்
சென்று என்னை நானே
தேடிப் பார்க்கிறேன்,

எந்தன் கண்களில்
சொட்டும் கண்ணீரால்,
கன்னம் நனைக்கும் செந்நீரால்
அவளை மட்டும் உணர்கிறேன்...

என்னுயிர்த்துளி வீழ்ந்து
சிப்பிக்குள் மூத்தாற் போல்
என் இதயத்தின் சொத்தாய்
உள்ளுக்குள் உறைந்தாளே...!

எங்கே நான் போனாலும்
அங்கேயும் வருவாளே,
கொஞ்சும் நினைவெல்லாம்
நெஞ்சோடு தந்தாளே...!

காயம் தந்தவள் எங்கோ
போய் என்னுள்ளே
என்னென்ன மாயம்
செய்தே போனாளோ...!

கண்ணோடு நான் கண்ட
கனவெல்லாம் தினமும்
மண்ணோட மண்ணாய்
புதைத்தே போனாளே...!

என் நெஞ்சில் அடியெடுத்து
படையெடுத்த ஆசை
எல்லாம் அரை நொடிக்குள்
அறுத்தேதான் எடுத்தாளே...!

சிறகறுத்த பறவை போல்
அவளின் உறவறுத்துப்
போனவள் எந்தன் காதலின்
கருவறுத்துப் போனாளே...!

துண்டிக்கப்பட்ட உயிர்
போல் என்னைத் துடித்
துடிக்க செய்து இதயத்தை
வேரறுத்துப் போனாளே...!

அவளுக்காய் துடித்த
உயிரொன்று என்னுள்
ஓயுமுன் என்னை கொதி
நீரில் தூக்கிப் போட்டாளே...

அவள் தந்த வலிகளை
கரையோரம் சிதறுகிறேன்...
வலியறிந்து வருவாளா
வலி மறக்கச் செய்வாளா...!

இத்தனை வலிகள் தந்தும்
அத்தனை காதல் சேர்த்து
மீண்டும் காத்திருக்கிறேன்
கண்மணியவள் அறிவாளா...?

அவள் வந்தாலே போதும்
வலிகள் அறிய வேண்டாம்...
வலி தாங்காத அவள் இதயம்
அதையறிந்தால் தூங்காதல்லவா...?


By...Ajai Sunilkar Joseph




காணொளி 




வியாழன், 6 ஏப்ரல், 2017

மனதில் நினைப்பாளா...?

மனதில் நினைப்பாளா...?

னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க,
மண்ணோடு புதைந்து விட்டேன்...
மண்ணில் கனவோடு,
மனதில் நினைவோடு,
மரணத்தை தழுவினால்
மனதில் நினைப்பாளா...?
மண்மீது உதிர்வேனா...?


By...Ajai Sunilkar Joseph



திங்கள், 27 மார்ச், 2017

உன் மடியே போதுமடி...

உன் மடியே போதுமடி...


ன்னோடான பொழுதெல்லாம் 
நான் சேமிக்கும் பொக்கிஷமடி,
தேவதையுன் அன்பொன்றே
இவ்வுலகில் போதுமடி,
நீயில்லா வாழ்வெனக்கு
நிம்மதியில்லா நரகமடி,
நான் சாயும் தோளெனக்கு
தோல்வியற்ற சிகரமடி,
ஆறுதலாய் நீயிருந்தால்
அழுகையெனக்கு சொர்க்கமடி,
உன் கண்ணிரண்டில் நீர்
வந்தால் பதறுமென் இதயமடி,
வாழ்வெல்லாம் நான் சாய
உன் மடியே போதுமடி,
உன்னைத் தந்த இறைவனுக்கு
என் காலமெல்லாம் சரணமடி...

By...Ajai Sunilkar Joseph



காணொளி






சனி, 25 மார்ச், 2017

குற்றமெனில் தண்டித்துவிடு...

குற்றமெனில் தண்டித்துவிடு...


ன்னை உதறி விட்டுப் 
போன உன்னையே
பற்றிப் பிடித்திருப்பது
குற்றமெனில் தாராளமாக
என்னை தண்டித்துவிடு,
மௌனங்கள் தவிர்த்து...


By...Ajai Sunilkar Joseph



                          கரையோரம் சிதறிய கவிதைகள்

திங்கள், 20 மார்ச், 2017

தவத்தின் பலன் பொய்யூர்...

தவத்தின் பலன் பொய்யூர்...


த்து மாதம் தவமிருந்தாள்
வயிற்றில் என்னை சுமந்து கொண்டு...
அவளின் உள்ளே தவமிருந்தேன்
எந்தன் மூச்சை அடக்கிக் கொண்டு...
தவத்தின் பலனாய் என்னை கண்டு
கொஞ்சியே மகிழ்ந்தாள் மீண்டும் மீண்டும்...
மழலை மொழியாய் மொழிந்தேன்
நானும் அவளின் முகத்தை கண்டு...
பத்து மாதங்கள் வாழ்ந்தேன் பையூரில்...
அறிமுகம் தந்தாள் பொய்யூரில்...
என்னை அவளின் மகன் என்று...


By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 

வெள்ளி, 10 மார்ச், 2017

பார்வைத் தந்த பாவை...

பார்வைத் தந்த பாவை...

பார்வை இழந்த
விழிகளுக்கு 
பார்வைத் தந்த
பாவை எங்கே...!
அவள் தந்த
பாசத்தின் ஓர் 
துளி மட்டும்
கதறுது இங்கே...
நெஞ்சில் அவளை
நினைத்துப் பார்த்தால்
நிலையாத கனவாய்
கண் வழி உதிர்வாள்...

By...Ajai Sunilkar Joseph


கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 8 மார்ச், 2017

என்னவளே என் உயிரில் கலந்தவளே...

என்னவளே என் உயிரில் கலந்தவளே...


ன்னவளே என்
நினைவில் கலந்தவளே...
காதலிக்கும் போது 
நீ எனக்கு ஆறுதலாய் 
சொன்ன வார்த்தைகள்
நீ என்னை விட்டு
பிரிந்து போன பின்னே
அதிகமாக கண்ணீர்
துளிகளைத் தருவதுதான் ஏனடி...!
பதில் தெரியாத நானோ
பேதையாய் உன் நினைவுப்
போதையால் தடுமாறிப் 
போகின்றேடி...


By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 

திங்கள், 6 மார்ச், 2017

துணையான உன் நினைவுகள்....

துணையான உன் நினைவுகள்....


ன் தனிமையில் துணை 
நின்ற உன் நினைவுகளை
அதிகமாக காதலிக்கின்றேன்...
ஏனென்றால்...
                         நீ  என்னுடன் இருந்த
நாட்களை விட உன் நினைவுகள் 
இருந்த நாட்களே அதிகம்...
என் கண்களின் கண்ணீராய்,
என் இதயத்தின் செந்நீராய்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 4 மார்ச், 2017

என் தேடல் நீ....

என் தேடல் நீ....

தேடி வந்த நீயோ
                       உதறி விடுகிறாய்,
தேடித் திரிகிறேன்
                       கிடைக்க மறுக்கிறாய்...
தொலைதூரம் நின்று
                       என்னுள்ளே வாழ்கிறாய்...
உன்னிடம் மட்டுமே தேடுகிறேன் 
                       என்னிடம் கிடைத்தும் 
பறிக்கப்பட்ட என் காதலை...
                       நீ மட்டுமே என் தேடல்,
நீ கிடைக்க மறுத்தாலும்...
                       நான் தொலையும் வரை
என் தேடல் தொடரும்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 



திங்கள், 20 பிப்ரவரி, 2017

இதயம் செய்யும் துரோகம்...

இதயம் செய்யும் துரோகம்...


தயமே...
                 நீ எதற்காக துடிக்கிறாய்...?
எனக்காகவா...? அவளுக்காகவா...?
எனக்குள் இருந்து கொண்டு
அவளை நினைக்கிறாயே...!
இது துரோகம் தானே...!
ஹ்ம்ம்ம்...
                 அவளை விடவா நீ
துரோகம் செய்தாய்...!
என் இதயமே அவள்தானே...
அவளே அதைச் செய்யும்போது
நீ மட்டும் செய்யாமல்
இருப்பாயா என்ன....?


By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள் 

செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

மௌன தண்டனைகள் வேண்டாம்...

மௌன தண்டனைகள் வேண்டாம்...


னது கண்களால்
                     என்னை கைது செய்து,
என் இதயத்திலே நினைவுகள்
                     எனும் சிறைச்சாலை கட்டி,
என்னை என்னுள்ளே
                     அடைத்துப் போனவளே...
தயவாய் என்னை 
                     விடுதலை செய்யாதே...
என்னுள்ளே கைதியான நான்
                     உன்னை தாலிக்கயிற்றில் ஏற்றி,
உன்னிடமே ஆயுள் கைதியாக
                     ஆசைப்படுகிறேன்...
உன் மௌன தண்டனைகள் வேண்டாம்...
                     வார்த்தைகளால் கொஞ்சும்
தண்டனைகள் போதும்...
                     வாவா பெண்ணே
கொஞ்சும் தண்டனைகள்
                     கொஞ்சமாகத் தந்து விடு...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

சனி, 11 பிப்ரவரி, 2017

அவள் வரவை எதிர்பார்த்து....

அவள் வரவை எதிர்பார்த்து....


ண்முன் தோன்றி
                      கற்றோடு கரைந்து,
மீண்டும் தோன்றி
                      கனவாய் கலைந்து,
நிஜம் கண்டு 
                      நினைவோடு நிலைத்தவளே,
நின் மூவேழு வயதும்
                      எங்கேதான் இருந்தாயோ...!
நான் பார்வையற்றிருந்தேன்,
                      பார்வைகள் தந்து விட்டு
எங்கேதான் போனாயோ...!
                      திக்கு திசையின்றி எட்டுத்
திசையும் தேடுகிறேன்...
                      தேவதையே உன்
வரவை எதிர்பார்த்து...!


By...Ajai Sunilkar Joseph



காணொளி 




கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 9 பிப்ரவரி, 2017

தனிமை காதலி...

தனிமை காதலி...

நீ விரும்பி வந்துதான்
விலகிச் சென்றாய்,
வலியொன்றுமில்லை
ஆனால் வலிக்கிறது,
கவலைப்படாதே...
                           உன்னால் 
என் இதயம் அடைந்த 
வலிகளை யாரிடமும் 
சொல்லி விடமாட்டேன்,
எனக்கு கிடைத்த என்
தனிமையெனும் காதலியிடம்
பிதற்றிக்கொண்டு என்னை 
நானே தேற்றிக் கொள்கிறேன்...

By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள் 


வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...

வாசித்துப்போடி யாசிக்கும் காதலை...


ன் விழியோரம்
                          வழிந்த கண்ணீரால்,
உன் இதயத்தின்
                          ஸ்பரிசம் உணர்ந்தேனடி...
என்னவளே உன்னைக் காணாமல்,
                          என்னிதயம் உன்னைச் சேராமல்,
மண்ணோடு மண்ணாய் போவேனோ...!
                          என்ற ஏக்கம் என்னைக் கொல்கிறது,
கண்ணிருந்தால் கொஞ்சம் 
                          வாசித்துப் போடி...
உன்னிடம் நான் யாசிக்கும் என் காதலை...



By...Ajai Sunilkar Joseph



காணொளி


கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 25 ஜனவரி, 2017

உண்மை மறந்தேனடி...

உண்மை மறந்தேனடி...


வலையுலக சொந்தங்களுக்கு 
பிரியமான வணக்கங்கள்...

எனது நெடுநாள் "ஆசை"
இசையுடன் கவிதை வாசிக்க
வேண்டும் என்று,
ஆனால் அது இப்போது
கொஞ்சம் கொஞ்சமாக
நிறைவேறிக் கொண்டிருக்கிறது...
உங்கள் முன்னால்...
தவறுகள் இருந்தால் தாராளமாக
கருத்துரையுங்கள்...
ஊக்கப்படுத்த உங்கள் போல்

சொந்தங்கள் இங்கில்லை...


ண்மை மறந்தேனடி
உன்னைத் தேடி...
உன் ஊசிப் பார்வை
உரசிப் போனதால் என்னை
உன்னில் தொலைத்தேனடி...
உயிரின் உயிராக
உன்னோடு உறவாட...
உயிரை உனக்கே 
உயிலெழுதி வைத்தேனடி...
உன்னை நினைத்தே 
உறங்க மறுக்கிறதென் 
உண்மைக் காதலடி...
உன்னவனாய் நான் மாற
உரிமையை எனக்கே கொடு
உரிமையானவளே...!

By...Ajai Sunilkar Joseph


இதோ இசையுடன் கவிதை


காணொளி




கரையோரம் சிதறிய கவிதைகள் 

வியாழன், 19 ஜனவரி, 2017

பிச்சு போட்ட நெஞ்சம்...

பிச்சு போட்ட நெஞ்சம்...


நீ வாழ்ந்த போன
இவனது நெஞ்சில் 
இன்னொருத்தி
வாழ்ந்து போக இவன் 
மனம் வாடகை வீடா...?
அப்படி செய்தால் 
நீ பிச்சு போட்ட 
எந்தன் நெஞ்சம் எச்சில் 
பட்டதென அறிந்தால் 
அதிலே அவள்தான் 
வாழ்வாளா...?

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்

புதன், 18 ஜனவரி, 2017

சிதைந்த கனவுகள்...

சிதைந்த கனவுகள்...


நீ என்னை உதறி
விட்ட பிறகும்,
உன் காலில் படிந்த 
தூசியாய் பிரிய
மறுக்கும் என்னை,
ஏனடி இந்த காதல்
கரையோரத்தில் 
எந்தன் நெஞ்சம்
கதற,கதற என் 
கனவுகளை சிதைத்து
கவிதைகளாக சிதற வைத்தாய்...!

By...Ajai Sunilkar Joseph



 கரையோரம் சிதறிய கவிதைகள்

செவ்வாய், 17 ஜனவரி, 2017

புரிந்தாலும் பிரிவாயா...!

புரிந்தாலும் பிரிவாயா...!


ன் பெயரையே
              உச்சரித்த என்
இதயத்தை இறுக்கி,
              பிழிந்து என் 
காதலின்  உதிரத்தை 
              எடுத்தாயோ...!
என் இதயத்தை
              கொஞ்சம் வாசித்துப்
பாரடிப்  பாதகத்தி...
              அது யாசிக்கும் 
காதல் உனக்குப் புரியுமடி...!
               புரிந்தாலும் எனைப்
பிரிவாயோ...!
               பிரிந்தாலும் வருவாயா
பரிவாக...!

By...Ajai Sunilkar Joseph



கரையோரம் சிதறிய கவிதைகள்     

சனி, 14 ஜனவரி, 2017

வந்தாள் தை மகள்...

வந்தாள் தை மகள்...


"தை" மகளே வந்தாய்
புத்தாடைக் கட்டி
புதிதாக வந்தாய்,
இன்பங்கள் பொங்க 
இனியவைத் தந்தாய்,
அன்புதான் பொங்க
ஆவலாய் வந்தாய்,
துயரங்கள் நீக்க
துணிவுடன் வந்தாய்,
மார்கழிப் பனியை
மாற்றிட வந்தாய்,
தமிழர் பண்பாட்டை
பண்பாகத் தந்தாய்,
தமிழெங்கும் பொங்க
சந்தோஷம் தந்தாய்...

By...Ajai Sunilkar Joseph




கரையோரம் சிதறிய கவிதைகள்