திங்கள், 21 ஆகஸ்ட், 2017

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...

இறுதிவரை உறுதி செய்யப்படாத காதல்...


னதில் நினைத்தவளை
மனதோடு புதைத்து விட்டேன்,
மனமோ படபடக்க , மனதில் கனவோடு,
மங்கையவள் நினைவோடு,
மரணத்தை தழுவி , மண்மீது உதிர்ந்தேனே...!
தேவதையவள் வாழும் இடத்தில்,
மனிதனாய் நான் வாழ அனுமதி 
இல்லையென புரிந்து கொண்டேன்...
தேவதையவளின் பிரிவுக்கு பின்னே...
இறுதிவரை உறுதி செய்யாத காதலுடன்
அவள் நினைவாய் தொடர்கின்றேன்
என் காதல் பயணத்தை...
வழிதனில் கன்னியாய் வருவாளா...?
விழிதனில் கண்ணீராய் வருவாளா...?
புரியாத நானும் பரிவாக நிற்கின்றேன்...

By...Ajai Sunilkar Joseph


காணொளி






10 கருத்துகள்:

  1. அழகான வரிகள் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல வரிகள் !! உங்கள் ஹெட்டர் படமும் அருமை!

    பதிலளிநீக்கு
  3. வரிகள் அருமை தொடர் சோகம் வேண்டாமே நண்பரே....

    குறிப்பு - இருப்பினும் சோகம்கூட சுகமாகும் என்பதை உணர்ந்து வாழ்பவன் நான் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம்மால சந்தோஷமா இருக்க முடியல ஜி
      சரி சோகமாவவது இருப்போம்...

      நீக்கு
  4. அழகான கவிவரிகள் சகோ. காட்சிப்படம் பிரமாதம்.

    பதிலளிநீக்கு

கரையோரம் சிதறிய கவிதைகளை
பார்த்து ரசித்தமைக்கு நன்றிகள் பல,
உங்கள் கருத்துரைகளை இங்கே
கருத்துப் பெட்டியில் எழுதுங்கள் அது
என் எழுத்துகளில் பிழைகள் இருப்பின்
திருத்திக்கொள்ள உதவும்...

உங்கள் வருகைக்கும் , கருத்துரைக்கும்
நன்றிகள் பல பல...!!!