புதன், 29 ஆகஸ்ட், 2018

இறைவனுக்கு நன்றி...!

இறைவனுக்கு நன்றி...!



நாம ஒண்ணு நெனச்சா  கடவுளும் விதியும்  இன்னொண்ணு நெனைக்கிறாங்க...!
என்ன வாழ்கைடானு நினைக்கிறதா இல்லை இதான் வாழ்க்கைனு நெனைக்கிறதா
ஒண்ணுமே வெளங்கல,சரி கஷ்டம் வரும்போது கூடவே  புலம்பலும் மனிதனுக்கு 
வருவது இயல்புதானே?அதான் இந்த புலம்பல்,இரண்டடி நடந்தால் நாலடி பின்னுக்கு 
இழுக்குதுங்க இந்த விதி,வரும் கஷ்டத்த வராதேனு சொன்னாலும் அது கேட்கிற மாதிரி தெரியல, அதான் கொஞ்சம் இஷ்டப்பட்டு வரவேற்கிறேன்...!


பெரிய கஷ்டம் ஒண்ணும் இல்லைங்க, 16/8/2018 அன்று என்  சகோதரனுக்கு ஒரு விபத்து 
நடந்ததுங்க! அதான் இந்த புலம்பலே,பாதத்தை தூக்க உதவும் நரம்புகள் அனைத்தும் 
விபத்தில் துண்டிக்கப்பட்டது , பிறகு மருத்துவ மனையில் அனுமதித்து இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்து 24/8/2018 அன்று வீட்டுக்கும் வர சொல்லிட்டாங்க. என்னதான் மனச
தேத்திட்டு ஆறுதல் சொன்னாலும் வலி வலிதானே...!

விபத்து அன்றிலிருந்து சரியாக வேலை செய்ய முடியல,பதிவிட முடியல, மருத்துவமனையில் 
சகோதரன் கூட மூன்று தினங்களே தங்கியிருந்தேன்.சரி அவனை என் அப்பாதான் கூட 
இருந்து கவனித்துக்கொண்டார்,பாவம் அவர் விதிய பாருங்களேன் அவரை நாங்கள் 
பார்த்துக் கொள்ளும் வயதில் எங்களை பார்த்துக் கொள்கிறார்.கடவுள் போல கவனிக்கிறார்,

இந்நேரம் இறைவனுக்கு நன்றி சொல்லியே ஆகணும் இப்படியொரு தந்தையை தந்தமைக்கு.



ஏதோ ஓரு பயணம்,

அதில் எத்தனையோ 

ஏற்ற இறக்கங்கள்,

கற்களும்,முட்களும் மிதித்து 

துவண்டு போகாத ஓர்

உள்ளத்தின் கால்கள்,

வேர்த்து வெலவெலத்துப் போன

தேகத்தின் மூச்சிரைச்சல்,

முடங்கிப் போய்டுவேனோ

என்ற பயம் உள்ளே,

பயத்தை சாகடிக்க தைரியம் வெளியே,

எழ எழ வீழ்ச்சி,

காலத்தின் சூழ்ச்சி,

தேவன் கைகளின் பொம்மையாய்,

குயவன் கை மண்பாண்டமாய்

வனையப் படுகிறேன்,

சிறகினை கொடுத்துவிட்டு

சிறகை பறித்தால் வலிக்குமா...!

ஓரிறகை பறித்தாலும் 

பறக்க முயலும் பறவையாய்

முயல்கிறேன் நான்,

இதயத்தின் வலுக்கூட்டி

இமயத்தின் வெற்றியைத் தொட,

சோதனை பலவென வந்தாலும் 

சோர்வே இல்லாத இதயம்,

தந்த இறைவனுக்கு நன்றி...!


Ajai Sunilkar Joseph




புதன், 15 ஆகஸ்ட், 2018

உனக்கேது சுதந்திரம்?

உனக்கேது சுதந்திரம்?

முந்தைய கவிதை
👇👇👇👇👇
இனியவள்

டையாளப் படத்தில் 

 அடைத்தான் உன்னை,

 அதில் உன் சகலமும்

 அடைக்க வைப்பான்,

 உனக்கேது சுதந்திரம் ...?


Ajai Sunilkar Joseph 



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

இனியவள்

இனியவள்

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇👇


வள் 
இதழோடு 
இதழ்
இணையும் 
இக்கணம்,
இனியவள்
இவளின் 
இதயத்தில்
இடியோசை 
இசைக்கிறது,
இசையின் 
இறுக்கத்தில்
இனிதே 
இவளிடையில்
இதழ்கள் 
இணைகின்றேன்...


Ajai Sunilkar Joseph 





ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2018

தொடர்கிறேன்...


தொடர்கிறேன்...

முந்தைய கவிதை
👇👇👇👇


ன்னை வர்ணித்து எனக்குக் 

கவிதைகள் எழுதத் தெரியவில்லை,

ஆனால் உன்னைக் கவிதைகளாய் நேசிக்கிறேன்,

எந்தன் கவிதைகளே நீ என்கிறேன்,

உன்னையே தினம் சுவாசம் கொள்கிறேன்,

நீ சுவாசிக்கும் காற்றில் 

என் கவிதைகளை அனுப்பி

உன்னைச் சேர முயற்சிக்கிறேன் ...

ஒன்றாவது உன்னிடம் வந்து

சேர்ந்ததா என்றுத் தெரியவில்லை,

உந்தன் அழைப்பொலியும் என்னிடம் சேரவில்லை,

ஒரு தவறிய அழைப்பும் என் கைப்பேசியில் 

கிடைக்கவில்லை,

அதனால்தான் முடிவு செய்து விட்டேன்,

என் மூச்சுள்ளவரை என் காதலாலும்,

என் கவிதையாலும் உன்னைத் 

தொடர வேண்டுமென்று...

Ajai Sunilkar Joseph


காணொளி



வியாழன், 9 ஆகஸ்ட், 2018

அவள் அறிமுகம் 3

அவள் அறிமுகம் 3


அவளது முந்தைய
அறிமுகங்கள்
👇👇👇👇👇👇👇👇
அவள் அறிமுகம் 1,
அவள் அறிமுகம் 2


ன் உலகமே இருண்டு போனதே

                    தெய்வத் திருமகள் அவளது

திருமுகம் காணாத ஓர் நாளில்,

                    நாளை வருவாளா வெளிச்சப்

புன்னகையை பளிச்சென்று வீச,

                    காத்திருக்கிறேன் கண்மணிக்காக

கானலாய் மறைந்து போகின்றாள்...!

                    அவள் இதயக் கள்வன் நானிருக்க

யாரோ ஒருவருக்காய் அவள்

                    பூமுகத்தை மறைக்கின்றாள்...!

அவள் எங்கு சென்றாலும்

                    தேடி போவேன் என்றாலும்...!

என்னைத் தேவையே இல்லையென்று

                    வாட்டி வதைக்கின்றாள்...!

பூங்காற்றாய் அவளைத்

                    தேடிப் போகிறேன்...

வார்த்தைத் தீயள்ளி என்மேல் வீசுகிறாள்...!

                    காதல் ரோஜாவை கையில் ஏந்தி

ஏந்திழை அவளின் வருகைக்காக

                    ஏகாந்தமாய் காத்திருக்கிறேன்...

ஆயிரமாயிம் கனவுகளுடனும்,

                    அதிசயமான அவள் நினைவுகளுடனும்...

Ajai Sunilkar Joseph 











சனி, 4 ஆகஸ்ட், 2018

தாயகம் திரும்பிய பறவை...

தாயகம் திரும்பிய பறவை...


அன்பான இணைய சொந்தங்களுக்கு
அஜய் ன் அன்பான வணக்கங்கள்...

நான் எழுதும் கவிதைகளுக்கு பின்னணிப் படங்களை  
கவிதையை எழுதிய பின்னர் நானே படங்களை எடிட் 
செய்து அதன் மேலேதான் கவிதைகளை டைப் செய்வது வழக்கம்.

ஆனால் இன்று போட்டோஷாப் இல் மனமும் , கைகளும் 
போன போக்கில் ஒரு படத்தை எடிட் செய்தேன்,ஆனால் 
அதற்கான வரிகளை எவ்வளவோ சிந்தித்தும் புலப்படவில்லை,
வெறும் நால்சுவர் அறையில் தரையை வனாந்தரமாகவும்,
அதில் நானே நின்று சுவரில் மாட்டப்பட்ட ஒரு வயல்வெளிப்
படத்தையும், அதன் மேலே ஏசி யையும் பார்க்கிறேன்...
வெறும் கற்பனையாகவே இந்தப்படத்தில் வாழ்ந்துள்ளேன்,
இந்த வாழ்க்கையை வாழ்ந்தவர் இருந்தால் எப்படி வலித்திருக்கும்!
எனக்குத் தோன்றிய வரிகளை கீழே எழுதியுள்ளேன்,தவறுகள்
இருந்தால் தயவாய் மன்னிக்கவும் நண்பர்களே...!
(ஆனால் அந்தப்படத்தைப் பார்த்தால் ஏதோ மனம் வருந்துகிறது)
(படத்தை கீழே கொடுத்துள்ளேன்)

உங்களுக்கு ஏதாவது புலப்பட்டால் பின்னூட்டங்களில் 
தாருங்கள் அன்பர்களே...!



"இறக்கை அடித்தே அழகிய நாளை
நினைத்து வந்தேன்,

வேர்வை வழியே உதிரம் சொட்டி,
கற்றை பணத்தைக் கையில் எடுத்து,

எத்தனை காலம் ஏங்கி நின்றேன்
இல்லம் ஒன்றை வடிவமைக்க,

உற்றார் ஒன்றாய்,ஊரார் ஒன்றாய்,
வார்த்தைகள் அள்ளி வாழ்க்கையில் வீசி,

கட்டிய வீடு அழகாய்த் தெரிய,
ஆனந்தம் கொண்டேன் ஆழ்மனதில்,

வீடும் எனதாய்,வாழ்க்கையும் எனதாய்,
மனையில் வாழ மனைவியை தேடி,

அலைந்த தூரம் கொஞ்சமில்லை,
அழகாய் ஒருத்தி,அன்பாய் ஒருத்தி,

இரண்டும் ஒன்றாய் கிடைத்திட தவித்தேன்,
வருங்கால மனைவியாய் அவள் வந்தாள்,

நினைக்கும் நேரம் காணொளிப் பேசி,
கனிந்தே வந்தன வார்த்தைகள் கோடி,

மங்கை கழுத்தில் மாலைத் தொடுக்கும்
நாளும் நெருங்க , மணந்தும் கொண்டேன்,

நினைத்த நேரம்,நினைத்த வாழ்க்கை,
கொடுத்து வைத்த வாழ்க்கையாம் எனக்கு...!

ஹ்ஹ்ம்ம்....

வாழ்த்திய நெஞ்சங்கள் பலருக்கும் நன்றிகள்
சொல்லி வழியனுப்பி விட்டேனேத் தவிர,

அலாதி அன்பை இழந்த துக்கம்
மட்டும் என்னை விடாமல் துரத்த,

அயலகம் சென்றேன் உழைப்பதற்காக,
தாயகம் வந்தேன் பிழைப்பதற்காய்,

வாயடைத்துப் போய்,வருந்தி நின்றேன்,
என் பசுமை நிலத்தைப் படமாய் பார்த்து...!

காற்றையும் எனது கற்றைப்பணத்தில்
அறையில் அடைத்து விட்டேன்,

என் தந்தையின் விவசாய நிலம் எங்கே...?
அது படமாகத் தொங்குது இங்கே...!

தாயகம் திரும்பிய பறவைக்கு
அமர்ந்திளைப்பாற ஓர் பூவனம் இல்லை,

சோலையெல்லாம் சாலையாய்,
நான் வாழ்ந்த பூமியே பாலையாய,

காண்கிறேன் கண் முன்னே
உயிருடன் சாகிறேன் இங்கே...!"

Ajai Sunilkar Joseph 



By...

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

அம்மா

அம்மா

முந்தைய கவிதை
👇👇👇👇👇👇
உனக்கான கவிதைகள்

லகம் காணும் முன்னே

உன்னில் நானே

உதயமாகிப் போனேன்,

அம்மா நீதான் என்னைத்

தாங்கிக்கொண்டாய்,

எனக்கு மறு ஜென்மம்

என்று ஒன்றிருந்தால்

எனக்கே மகளாகி விடு...!

என் தவமாகி விட்டாய்

நீயே எனக்கு வரமாகிடு...!
Ajai Sunilkar Joseph 

By...



வியாழன், 2 ஆகஸ்ட், 2018

உனக்கான கவிதைகள்

உனக்கான கவிதைகள்


முந்தைய கவிதை
👇👇👇


ன் 

விழியசைவில்

துவக்கம் பெற்றது 

என் 

கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph


ன்னிதழ்களின் 

முணுமுணுப்பில்

உயிர் பெற்றது 

என் கவிதைகள்...!
Ajai Sunilkar Joseph 


னக்கான 

வரிகளை

சருகுகளாய் உதிர 

வைக்கிறாய் 

என் 

கவிதைகளில்...!
Ajai Sunilkar Joseph 


ன் 

பேனாவுக்கு

உயிர் 

கொடுத்து 

எழுத வைக்கிறாய்

உனக்கான 

கவிதைகளை...!
Ajai Sunilkar Joseph 


னைவதும்,

புனைவதும்,

நானே என்றாலும் 

உனக்ககாகவே 

என் கவிதைகள்...
Ajai Sunilkar Joseph


By...