அவள் அறிமுகம் 2
அவளது
முந்தைய அறிமுகம்
👇👇👇👇👇
எழுந்திட நினைத்தேன்
நெஞ்சோடு அணைத்தாள்,
நிமிர்ந்திட துடித்தேன்
இதழோடு இணைத்தாள்,
குறுகுறுப் பார்வையால்
குற்றாலச் சாரலை
என்னுள் வீசிப்போகிறாள்,
நிலைமாறிப் போகிறேன்,
சித்திர விழியாளால்
சிற்பியாய் மாறினேன்,
சிற்பமாய் வர்ணித்தேன்
சிலையென ஆகிறேன்,
மதயானைக் கூட்டமாய்
எனை மோதிப்போகிறாள்,
பட்டென சாய்கிறேன்,
சிட்டென பறக்கிறேன்,
அலைபாய்ந்த கண்ணுக்குள்
சிலையாக நிற்கின்றாள்,
சீறும் அலையாக
நினைவாலே பாய்கிறாள்,
அரை நொடிப் பொழுதும்
பிரிய மறுக்கிறாள்,
கண நொடிப் பொழுதும்
புரிய மறுக்கிறாள்...
![]() |
Ajai Sunilkar Joseph |
வணக்கம்
பதிலளிநீக்குஅற்புதமான காதல் வரிகள் கவிதையை இரசித்தேன்.அருமை வாழ்த்துக்கள்
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் பல நண்பரே...!
நீக்குவாவ்.... அருமை அஜய். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அண்ணா...!
நீக்குஅருமையான வரிகள்... வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி நட்பே...!
நீக்குநன்பா யாரவள்
பதிலளிநீக்குயாரவள் என்று பின்னர் சொல்கிறேன்.
நீக்குஅவளைச் செதுக்கிய வரிகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குநன்றி ப்ரதர்...!
நீக்குஅழகான அவள்...
பதிலளிநீக்குஅழகானவள் அவள்...
நீக்குநன்றி அண்ணா..!
அந்த அவள்..யாரோ.....
பதிலளிநீக்குசொல்கிறேன் நண்பரே
நீக்குஅவள் உணர்ந்து கொண்டா(ள்)ல் நலமே...
பதிலளிநீக்குஉணரும்வரை தொடர்வேன்..
நீக்குரசித்தேன்...
பதிலளிநீக்குவாழ்க நலம்...!
நன்றி அண்ணா..!
நீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குஹ ஹா நன்றி...!
நீக்கு