நினைவுகளே தோரணமாய்...
தேயாத பெண்ணிலவே
உனைக் காணாத கண்ணினிலேகரைந்தோடும் தாரைகளாய்
என் காதல் கொட்டுதடி,
காற்றொன்று என்னைத்
தாண்டிப் போனால் பெண்ணே
உந்தன் மூச்சும் என்னைக்
கொஞ்சமாய் தீண்டிப் போகுதடி,
வித்தாரக் கண்ணழகே
எந்தன் விழிநீரும் விம்முதடி,
மந்தாரைப் பூவழகே உன்னை
மனதாரக் காதலித்தேன்,
தோளோடு தோள் சாய்ந்து,
உன் மௌனத்தின் சலசலப்பை
சிறு சிறு கவிதைகளய்
மொழிப்பெயர்பேன்,
உன் நளினத்தின் சலனத்தை
சல்லடையில் சலித்தெடுத்தேன்,
என் விழிகண்ட கனவானாய்
தூங்காமல் துயிலெழுந்தேன்,
கலைந்தோடும் முகிலானாய்
நெஞ்சில் அணையாத அகலானாய்,
நிலைகொண்ட புயலானாய்
என்றோ கரை கடந்து விட்டாய்,
நீ மழைமேகமென்றால்
என்னை மனதார நனைத்துவிடு,
எரியாத தீயென்றால் உன்
நெஞ்சோடு அணைத்தவிடு,
நான் இல்லாத ஓர் நாளில்
என் நெஞ்சம் நீயறிவாய்,
உன்னை நினைக்காமல் நானுமில்லை
உன்னை நினையாத நாளுமில்லை...
நெஞ்சோடு மஞ்சம் வைத்தேன்
பற்றி எரிந்த பஞ்சானாய்,
மரணத்தின் வாசலில் பெண்ணே
உன் நினைவுகள் தோரணமா...?
காணொளி
![]() |
Ajai Sunilkar Joseph By... கரையோரம் சிதறிய கவிதைகள் |
காலமெல்லாம் காதல் வாழ்க...
பதிலளிநீக்குநன்றி நண்பரே...!!
நீக்குஇனிக்கும் காதல் நினைவுகள்,
பதிலளிநீக்குஆமாம் நண்பரே. . .
நீக்குஅருமையான வரிகள்
பதிலளிநீக்குதொடருங்கள்
நன்றி நண்பரே...!!
நீக்குகாதல் வாழ்க.....
பதிலளிநீக்குநன்றி நண்பரே நன்றி...!!!
நீக்கு